’சூர்யகுமார் யாதவை எதிர்கொள்ளாமல் ஓய்வுபெற்றது என் அதிர்ஷ்டம்..’ - முன்னாள் இந்திய வீரர் புகழாரம்!

இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கு பின்னர் ஐபிஎல்லுக்கு திரும்பிவந்திருக்கும் சூர்யகுமார் யாதவ், 17 பந்துகளுக்கு அரைசதமடித்து அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
suryakumar yadav
suryakumar yadavcricinfo

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில், பவுலிங், பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் மூன்றிலும் டாமினேட் செய்த மும்பை அணி ஆர்சிபியை சுலபமாக வீழ்த்தி கலக்கிப்போட்டது. பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோலி உட்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

RCB vs MI
RCB vs MI

இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு ஐபிஎல்லுக்கு கம்பேக் கொடுத்திருக்கும் சூர்யகுமார் யாதவ், 19 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 273 ஸ்டிரைக்ரேட்டில் 52 ரன்கள் குவித்து மிரட்டிவிட்டார். அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய சூர்யகுமாரை முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

suryakumar yadav
'Umpires Indians' ஆன MI? சர்ச்சை முடிவுகளால் ரசிகர்கள் அதிருப்தி! முதல் அணியாக வெளியேறுகிறதா RCB?

பந்துவீச்சாளர் வேறு எங்குதான் வீச முடியும்..

சூர்யகுமார் யாதவ் குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் பேசியிருக்கும் ஹர்பஜன் சிங், “என் வாழ்நாளில் சூர்யகுமார் யாதவை போல பந்துவீச்சாளர்களிடம் ஆதிக்கம் செலுத்தும் வீரரை நான் பார்த்ததேயில்லை. ஒரு பந்துவீச்சாளரால் அவருக்கு எதிராக என்னதான் செய்யமுடியும்? அவருக்கு எதிராக கிரிக்கெட் விளையாடாதது என் அதிர்ஷ்டம்” என்று ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் கூறினார்.

suryakumar
suryakumar

மேலும் சூர்யகுமார் ஒரு வித்தியாசமான வீரர் என்று புகழ்ந்த ஹர்பஜன் சிங், “சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படும் போது, ​​அவரது அணியை யாராலும் தோற்கடிக்க முடியாது. அவர் ஒரு நம்பமுடியாத வீரர். எந்த சூழ்நிலையில் இருந்தும் அவரால் ஆட்டத்தை வெல்ல முடியும். நான் ஏபி டி வில்லியர்ஸைப் பார்த்துள்ளேன், அவர் பேட்டிங்கில் பிரமாதமாக இருந்துள்ளார். ஆனால் அவரை விட சூர்யகுமார் யாதவ் சிறந்த வீரராக நான் உணர்கிறேன். தற்போது விளையாடும் ஐபிஎல் வீரர்களில் எவரையும் விட அவர் தனது உரிமைக்காக அதிக கேம்களை வென்றுள்ளார்” என்று ஹர்பஜன் புகழ்ந்து பேசியுள்ளார்.

suryakumar yadav
”என் கால்களை உடைத்துவிடுவார்.. 2 வருடமாக நெட்டில் பும்ராவை எதிர்கொள்வதே இல்லை!” - சூர்யகுமார் யாதவ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com