வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 2வது டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி 7 ஓவரில் 114 ரன்கள் சேஸிங்கை கிட்டத்தட்ட உறுதிசெய்தது.. ஆனால் கடைசி 4 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் ஏற்பட்ட டிவிஸ்ட்டால் முடிவு மாறியது..
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடிவருகிறது..
டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களுடைய டி20 ஃபார்மை தேடிவரும் நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றிபெற்று அசத்தியது..
இன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றிக்காக போட்டிப்போட்டன.. இறுதிபந்துவரை அனல்பறந்தபோட்டியில் 42 பந்தில் 114 ரன்களைவ் விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிஓவரில் கையிலிருந்த போட்டியை நழுவவிட்டது..
பரபரப்பாக நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, பிரைம் ஃபார்மில் இருந்துவரும் சாப்மனின் 28 பந்தில் 78 ரன்கள் அதிரடியால் 20 ஓவரில் 207 ரன்கள் குவித்தது..
தொடர்ந்து 208 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 13 ஓவர் முடிவில் 94 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.. கடைசி 7 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 114 ரன்கள் தேவையாக இருந்தது.. அதாவது ஒரு ஓவருக்கு 16.28 ரன்கள் அடிக்கவேண்டும்..
கிட்டத்தட்ட இப்படி ஒரு சேஸை அடிக்கமுடியுமா என்ற இடத்திலிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை, ரோவ்மன் பவல் மற்றும் ரொமாரியோ ஷெஃபர்டு இருவரும் சேர்ந்து 10 சிக்சர்களை பறக்கவிட்டு ஒரு சாதனை சேஸிங்கை உறுதிப்படுத்தினர்.. 4 ஓவரில் 10 ரன்களுக்கு மேலே அடித்த இந்த ஜோடி, 2 ஓவரில் 24, 22 ரன்களை விரட்டி மிரட்டிவிட்டது..
போதாக்குறைக்கு 9வது வீரராக களமிறங்கிய மேத்யூ ஃபோர்டே 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களை பறக்கவிட வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது..
கடைசி 6 பந்துக்கு 16 ரன்கள் தேவையாக இருந்தபோது இறுதிஓவரை வீசிய கைல் ஜேமிசன், முதல் பந்தில் பவுண்டரி கொடுத்ததோடு 3வது பந்தில் நோ பாலில் பவுண்டரி விட்டுக்கொடுத்து சொதப்பினார்.. 2 பந்தில் 9 ரன்கள் வர, இறுதி 4 பந்தில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.. ஆனால் 4 பந்தில் 4 ரன்களை மட்டுமே அடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.. கையிலிருந்த போட்டியை கோட்டைவிட்ட பிறகு ஃபோர்டே வேதனையில் அங்கேயே அமர்ந்துவிட்டார்.. அவரை நியூசிலாந்து வீரர்கள் தேற்றினர்..
முழு உறுப்பினர்கள் கொண்ட நாடுகளுக்கு இடையேயான டி20 போட்டியில் கடைசி 5 ஓவரில் 87 ரன்கள் விளாசி வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை படைத்தது.. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என சமநிலையில் உள்ளது..