முதல்முறையாக ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜம்மு-காஷ்மீர் web
கிரிக்கெட்

ரஞ்சிக்கோப்பை| முதல்முறையாக ஃபைனலுக்கு தகுதி.. வரலாற்றை மாற்றிய ஜம்மு-காஷ்மீர்!

ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று சாதனை படைத்துள்ளது ஜம்மு-காஷ்மீர் அணி.

Rishan Vengai

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் தொடங்கி நடந்துவருகிறது. பரபரப்பாக நடந்துவந்த ரஞ்சிக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது.

ரஞ்சிக்கோப்பையில் முதல்முறையாக ஜம்மு-காஷ்மீரை அரையிறுதிக்கு அழைத்துச்சென்ற அகிப் நபி

காலிறுதிப்போட்டியில் அபாரமாக வெற்றிபெற்ற ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் பெங்கால் அணிகள் அரையிறுதிப்போட்டியை எட்டின. முதல்முறையாக அரையிறுதிப்போட்டிவரை முன்னேறிய ஜம்மு-காஷ்மீர் சாதனை படைத்தது.

இந்நிலையில் அரையிறுதிப்போட்டியிலும் அசத்திய ஜம்மு-காஷ்மீர் அணி பெங்கால் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது.

வரலாறு படைத்த ஜம்மு-காஷ்மீர்!

பெங்கால் கிரிக்கெட் அகாடமி கிரவுண்டில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த 328 ரன்கள் சேர்த்தது. சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி காலிறுதியில் ஹீரோவாக ஜொலித்த அகிப் நபி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஜம்மு-காஷ்மீர் அணி 302 ரன்கள் குவித்து அசத்தியது. 26 ரன்களை முன்னிலை பெற்ற பெங்கால் அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் அதிர்ச்சி காத்திருந்தது. அகிப் நபியின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாத பெங்கால் பேட்ஸ்மேன்கள் 19 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

அடுத்தடுத்த வந்த வீரர்களை சுனில் குமார் வெளியேற்ற 99 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது பெங்கால் அணி. அகிப் நபி மற்றும் சுனில் குமார் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

126 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய ஜம்மு-காஷ்மீர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்காலை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று சாதனை படைத்தது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜம்மு-காஷ்மீர் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அகிப் நபி

மற்ற அணி வீரர்களை போல அல்லாமல், பயிற்சி பெருவதற்கு கூட சரியாம வசதியில்லாமல் தன் திறமையை வளர்த்துக்கொண்ட அகிப் நபி பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் மிரட்டிவருகிறார். விரைவில் அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.