ஆஸ்திரேலியாவின் அணித் தேர்வை கடுமையாக விமர்சித்த மார்க் வா
ஆஸ்திரேலியாவின் அணித் தேர்வை கடுமையாக விமர்சித்த மார்க் வாweb

ஆஸ்திரேலியா தோல்வி| ”ஸ்டீவ் ஸ்மித்தை அவமதித்து விட்டனர்..” - கடுமையாக சாடிய முன்னாள் வீரர்

2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து குரூப் ஸ்டேஜ்ஜுக்கு கூட முன்னேறாமல் ஆஸ்திரேலியா அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக வெளியேறியிருப்பது பல்வேறு விமர்சனங்களை பெற்றுவருகிறது..
Published on
Summary

ஆஸ்திரேலியாவின் 2026 டி20 உலகக்கோப்பை தோல்வி குறித்து முன்னாள் ஆஸ்திரெலியா கேப்டன் கடுமையாக சாடியுள்ளார். ஸ்டீவ் ஸ்மித்தை அணியில் சேர்க்காதது மிகப்பெரிய தவறு என அவர் கூறியுள்ளார். தவறான வீரர்கள் தேர்வு மற்றும் காயங்கள் அணியின் தோல்விக்கு காரணம் என அவர் விமர்சித்துள்ளார்.

2026 டி20 உலகக்கோப்பை தொடரை வெல்லக்கூடிய அணியாக இந்திய அணியை பெரும்பாலான முன்னாள் வீரர்கள் தொடர் தொடங்குவதற்கு முன்னாலேயே தேர்வுசெய்திருந்தனர். அதேபோல இந்தியாவிற்கு சவால் அளிக்கக்கூடிய ஒரே அணியாக ஆஸ்திரேலியாவே இருக்கும் என்றும் கூறிவந்தனர். அந்த அணியில் அதிரடிக்கு பெயர் போன திறமையான வீரர்கள் நிரம்பியிருந்ததே அதற்கு காரணமாக சொல்லப்பட்டது.

2026 டி20 உலக்க்கோப்பை ஆஸ்திரேலியா அணி
2026 டி20 உலக்க்கோப்பை ஆஸ்திரேலியா அணி

ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் லீக் போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை உடன் படுதோல்வியை சந்தித்த முன்னாள் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, 17 ஆண்டுகளுக்கு பிறகு குரூப் ஸ்டேஜ்ஜுக்கு கூட முன்னேறாமல் உலகக்கோப்பையிலிருந்து வெளியேறி உள்ளது. கடைசியாக 2009 உலகக்கோப்பையில் குரூப் ஸ்டேஜ்ஜுக்கு முன்னேறாமல் வெளியேறியிருந்தது.

இந்த படுதோல்வி முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் மார்க் வா ஆஸ்திரேலியா அணியின் தேர்வுக்குழுவே தோல்விக்கு காரணம் என சாடியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் அணித் தேர்வை கடுமையாக விமர்சித்த மார்க் வா
T20 WC | 19 வயதில் சாதனை படைத்த கனடாவின் யுவராஜ் சாம்ரா.. சூப்பர் 8இல் நுழைந்த NZ!

ஸ்மித்தை அவமதித்து விட்டார்கள்..

ஆஸ்திரேலியாவின் தோல்வியை தேர்வுக்குழுவின் தவறான வீரர்கள் தேர்வும், காயங்களும் முன்பே தீர்மானித்து விட்டன என்று கூறியிருக்கும் மார்க் வா, சிறந்த ஃபார்மில் இருக்கும் ஸ்டீவ் ஸ்மித்தை விட்டுவிட்டு ஃபார்மில் இல்லாத வீரர்களை ஆடவைத்த தேர்வாளர்களை கடுமையாக சாடினார்.

mark waugh
mark waugh

சமீபத்திய உரையாடலில் பேசியிருக்கும் அவர், ”2026 உலகக்கோப்பை தொடர் முழுவதும் தவறான அணித்தேர்வினாலும் காயத்தினாலும் அணி சீர்குலைந்தது. அவர்களிடம் சரியான முன் தயாரிப்புகள் இல்லை என்றே நினைக்கிறேன். நாங்கள் சுமாரான ஒரு பிரிவில் இருந்தும், நான் நினைத்தது போலவே நடந்துவிட்டது.

சில நேரங்களில் நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுத்தாக வேண்டும். என்னைப் பொறுத்தவரை, ஸ்டீவ் ஸ்மித்தை அணியில் எடுக்காததே மிகப்பெரிய தவறு என்பேன். இந்த தோல்வியை பல ஆண்டுகளுக்கு நான் நினைவில் வைத்திருப்பேன். தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியை விட ஸ்டீவ் ஸ்மித் பிபிஎல் தொடரில் எவ்வளவு சிறப்பாக விளையாடினார் என்பதை அனைவருமே பார்த்தனர்.

ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்

ஃபார்மில் இருக்கும் ஸ்மித்தை விட்டுவிட்டு, ஃபார்மில் இல்லாத மேக்ஸ்வெல், காம்ரூன் க்ரீன், ஜோஷ் இங்கிலீஸ் போன்ற வீரர்களை விளையாட வைத்தனர். மேலும் இன்ஃபார்மில் இருந்த ரென்ஷாவையும் அவர்கள் விளையாடவில்லை, ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடிய ஸ்டீவ் ஸ்மித், ரென்ஷா இருவரையும் விளையாட வைக்காததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. என்னை பொறுத்தவரை ஸ்டீவ் ஸ்மித்தை அவர்கள் அவமானப்படுத்தியதாகவே நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் அணித் தேர்வை கடுமையாக விமர்சித்த மார்க் வா
85% பார்வையை இழந்த இம்ரான் கான்? பாக். அரசுக்கு கடிதம் எழுதிய 14 கேப்டன்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com