ரஞ்சிக்கோப்பையில் முதல்முறையாக ஜம்மு-காஷ்மீரை அரையிறுதிக்கு அழைத்துச்சென்ற அகிப் நபி
ரஞ்சிக்கோப்பையில் முதல்முறையாக ஜம்மு-காஷ்மீரை அரையிறுதிக்கு அழைத்துச்சென்ற அகிப் நபிweb

ரஞ்சிக்கோப்பை | முதல்முறையாக அரையிறுதி சென்ற ஜம்மு-காஷ்மீர்.. வரலாற்றை மாற்றி எழுதிய ’அகிப் நபி’!

2025-26 ரஞ்சிக்கோப்பை தொடரின் காலிறுதிப்போட்டியில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தி முதல்முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது ஜம்மு-காஷ்மீர் அணி..
Published on
Summary

ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய ஜம்மு-காஷ்மீர் அணி, அகிப் நபியின் அசத்தலான பந்துவீச்சின் மூலம் மத்திய பிரதேசத்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அகிப் நபி, ஜம்மு-காஷ்மீரை சாதனைக்குக் கொண்டு சென்றார்.

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் தொடங்கி நடந்துவருகிறது. பரபரப்பாக நடந்துவந்த ரஞ்சிக்கோப்பை தொடர் காலிறுதி போட்டிகளை எட்டியுள்ளது.

முதல் காலிறுதிப்போட்டியில் ஜார்கண்ட்டை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்கடித்த உத்தரகாண்ட் அணி முதல்முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியது.

அதேபோல இரண்டாவது காலிறுதிப்போட்டியானது ஜம்மு-காஷ்மீர் மற்றும் மத்திய பிரதேச அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

ரஞ்சிக்கோப்பையில் முதல்முறையாக ஜம்மு-காஷ்மீரை அரையிறுதிக்கு அழைத்துச்சென்ற அகிப் நபி
’என் சேவை தேவைப்பட்டால் சொல்லுங்க..’ நேபாள் ஆட்டத்தை பார்த்து மிரண்டுபோன ஜாம்பவான்!

முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய ஜம்மு-காஷ்மீர்!

இந்தூரில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஜம்மு காஷ்மீர் 194 ரன்கள் அடிக்க,அகிப் நபியின் அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரஜத் பட்டிதார் தலைமையிலான மத்திய பிரதேச அணி 152 ரன்களில் சுருண்டது. இன்ஸ்விங் - அவுட்ஸ்விங் என மிரட்டிய அகிப் நபி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

42 ரன்கள் முன்னிலை பெற்ற ஜம்மு-காஷ்மீர் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 248 ரன்கள் சேர்த்து மத்திய பிரதேசத்திற்கு வெற்றி இலக்காக 291 ரன்களை நிர்ணயித்தது.

அகிப் நபி
அகிப் நபி

இந்நிலையில் வெற்றிக்காக போராடிய மத்திய பிரதேச 234 ரன்கள் மட்டுமே சேர்த்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இரண்டாவது இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அகிப் நபி, ஜம்மு-காஷ்மீரை முதல்முறையாக ரஞ்சிக்கோப்பை அரையிறுதிக்கு அழைத்துச்சென்றார். முதல்முறையாக வரலாற்றை படைத்த ஜம்மு-காஷ்மீர் அரையிறுதிப்போட்டியிலும் அசத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்துவீச்சில் ஸ்விங் செய்வதில் மிரட்டிவரும் 29 வயது ஜம்மு-காஷ்மீர் வீரர் அகிப் நபியை 8.45 கோடிக்கு ஐபிஎல் ஏலத்தில் எடுத்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி.

ரஞ்சிக்கோப்பையில் முதல்முறையாக ஜம்மு-காஷ்மீரை அரையிறுதிக்கு அழைத்துச்சென்ற அகிப் நபி
T20 WC | இந்தியாவுடன் விளையாட 3 நிபந்தனைகள்.. ஐசிசியை மிரட்டும் பாகிஸ்தான்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com