இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான டி20 தொடர் மிகப்பெரிய மோதலாக இருக்கப்போகிறது. இந்தியாவின் பேட்டிங் பலம் மற்றும் பும்ரா தலைமையிலான பந்துவீச்சு யூனிட் வலுவாக உள்ளது. ஆஸ்திரேலியாவின் பேட்டிங் யூனிட் ஜோஸ் இங்கிலீஸ் மற்றும் மேக்ஸ்வெல்லின் வருகையால் ஆபத்தானதாக மாறுகிறது. இரண்டு அணிகளும் பலவீனங்களை சரிசெய்து வலுவான போட்டியை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கவிருக்கிறது.. இதில் 20 அணிகள் பங்கேற்று விளையாட உள்ள நிலையில், நடப்பு சாம்பியனான இந்தியா கோப்பையை தக்கவைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவருகிறது..
இந்நிலையில் மிகப்பெரிய தொடருக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், நம்பர் 1 மற்றும் நம்பர் 2 டி20 அணிகளான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது..
நாளை இரண்டு அணிகளுக்கும் இடையே முதல் டி20 போட்டி நடக்கவுள்ள நிலையில், இரண்டு அணிகளில் இருக்கும் பலம் மற்றும் பலவீனத்தை இங்கே பார்க்கலாம்..
இந்தியா மற்றும அஸ்திரேலியா இரண்டு அணிகளும் இதுவரை 32 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 20 முறையும், ஆஸ்திரேலியா 11 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இதில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா 7 முறையும், ஆஸ்திரேலியா 5 முறையும் வெற்றிபெற்றுள்ளன.. இந்தசூழலில் இரண்டு அணிகளும் சரிசமமான ரிசல்ட்டை கொடுத்துள்ள நிலையில், இந்த தொடர் பெரிய மோதலாக இருக்கப்போகிறது..
இந்திய அணியின் பலம் - இந்தியாவின் பலத்தை பொறுத்தவரை பேட்டிங் அதிகபலத்துடன் காணப்படுகிறது. அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் போன்ற டி20 சதங்கள் அடித்த 5 பேர் இடம்பெற்றிருப்பது கூடுதல் பலம். பந்துவீச்சில் பும்ரா, குல்தீப், வருண் போன்ற பவுலர்கள் பவுலிங் யூனிட்டை பலப்படுத்துகின்றனர்.. ஆல்ரவுண்டர்களாக ஷிவம் துபே, அக்சர் பட்டேல், நிதிஷ்குமார், வாஷிங்டன் போன்ற வீரர்கள் அணியை சமநிலைப்படுத்த உதவுகின்றனர்..
ஆஸ்திரேலியா அணியின் பலம் - ஆஸ்திரேலியா அணியின் பலத்தை பொறுத்தவரை, அவர்களுக்கும் பேட்டிங்கே அதிகபலத்துடன் காணப்படுகிறது. மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், டிம் டேவிட், மார்கஸ் ஸ்டொய்னிஸ் போன்ற டி20 ஸ்பெசலிஸ் பேட்டர்களுடன் ஜோஸ் இங்கிலீஸும் அணியில் இணைகிறார். இரண்டு போட்டிகளுக்கு பிறகு கடைசி 3 போட்டிகளுக்கு மேக்ஸ்வெல்லும் திரும்பிவிடுவார் என்பது அவர்களுடைய பேட்டிங் யூனிட்டை ஆபத்தானதாக மாற்றுகிறது..
பந்துவீச்சை பொறுத்தவரையில் ஹசல்வுட் முன்னின்று தலைமை தாங்குகிறார்.. நாதன் எல்லீஸ், சேவியர் பார்ட்லட், சீன் அபாட் போன்ற பவுலர்கள் பக்கபலமாக இருக்கின்றனர்.. ஆல்ரவுண்டராக பினிசிங் ரோலில் சிக்சர்களாக பறக்கவிடக்கூடிய மிட்செல் ஓவன் இடம்பெற்றுள்ளார்..
இரண்டு அணிகளுக்கும் சில பலவீனங்கள் இருக்கின்றன.. ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரையில் பந்துவீச்சு யூனிட் சர்வதேச அனுபவமற்றதாக இருக்கிறது.. இருப்பினும் அவர்கள் அதிகளவில் டி20 லீக் போட்டிகளில் பந்துவீசியுள்ளனர். அதேவேளையில் அவர்களுடைய பிரைம் ஸ்பின்னர் ஆடம் சாம்பா முதலிரண்டு போட்டிகளுக்கு கிடைக்கமாட்டார்.. அவருக்கு பதிலாக மற்றொரு லெக் ஸ்பின்னர் தன்வீர் சங்கா இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணியை பொறுத்தவரையில் மிடில் ஆர்டர் பேட்டிங் கவலையளிப்பதாக உள்ளது.. சஞ்சு சாம்சன் 5வது வீரராக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் சொதப்புகிறார்.. கேப்டன் சூர்யகுமாரின் பேட்டிங் ஃபார்ம் கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது.. ஆல்ரவுண்டர்களை அதிகமாக எதிர்நோக்கும் இந்தியா முழுமையான ஃபினிசிங் வீரரை எடுத்துவருவதில் உள்ளே வெளியே என கபடி ஆடிவருகிறது.. ரிங்கு சிங் அணியில் எடுக்கப்படுவாரா அல்லது நிதிஷ் குமார், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெறுவார்களா என்ற குழப்பம் நீடிக்கிறது..
இரண்டு அணியிலும் இருக்கும் பிரச்னைகளை சரிசெய்து வலுவான போட்டியை கொடுப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது..