2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்ற உறுதியான தகவல் கிடைத்தாலும், தோனிக்கு மாற்றுவீரரை தேடும் சிஎஸ்கே அணியின் தேடலுக்கு கடந்த 3 ஐபிஎல் தொடராக இன்னும் முடிவுகிடைக்கவில்லை.. இந்தசூழலில்தான் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்கு வருகிறார் என்ற செய்தி வலம்வருகிறது.. சஞ்சு சாம்சன் வந்தா நல்லது தானே என நினைத்த ரசிகர்களுக்கு, என்னது ஜடேஜா, சாம்கரன் 2 பேரும் போறாங்களா?? பதிரானாவும் போறாரா?? என்ற அடுத்தடுத்த ஷாக்கிங் செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன..
2023 ஐபிஎல் கோப்பை வென்ற கையோடு சிஎஸ்கே அணியின் கேப்டன்சி பொறுப்பை, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ருதுராஜின் கைகளில் ஒப்படைத்தார் தோனி.. அவ்வளவுதான் அடுத்த ஐபிஎல்லில் தோனி ஓய்வுபெற்றுவிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட போது, தோனி நினைத்ததுபோல் ருதுராஜ் தலைமையில் சென்னை அணி சரியான பாதையில் செல்லவில்லை..
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் 2024 ஐபிஎல் தொடரில் களம்கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் 5வது இடம்பிடித்து வெளியேறியது.. அணியில் நிறைய ஓட்டைகள் இருக்க, அதையெல்லாம் சரிசெய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்த சென்னை அணி 2025 மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின், ராகுல் திரிப்பாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், சாம் கரன், ஜேமி ஓவர்டன் போன்ற வீரர்களை விலைக்கு வாங்கியது..
ஆனால் நாளுக்கு நாள் இளம்வீரர்களை களத்திற்கு கொண்டுவந்து அப்டேட்டாகி வரும் ஐபிஎல் தொடரில், சிஎஸ்கே அணி கையாண்ட பழைய வின்னிங் ஃபார்முலா படு சொதப்பலாக மாறியது.. இண்டர்நேஷனல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற வீரர்களிடமிருந்து எதிர்ப்பார்த்த திறமை வெளிப்படவில்லை, சிஎஸ்கே அணியின் மோசமான அணித்தேர்வு காரணமாக 2025 ஐபிஎல் தொடரில் கடைசி இடத்தில் முடித்தது சென்னை அணி..
இன்னும் கொடுமையாக அணி மோசமான தோல்வியை கண்டால் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீதான ரசிகர்களின் நம்பிக்கை முழுமையாக போய்விடும் என்பதால், அவரை பாதியிலேயே காயம் எனக்கூறி வெளியேற்றிய சென்னை அணி, தோனியை கேப்டனாக வைத்து தங்களுடைய இமேஜை காப்பாற்றிக்கொண்டது..
2025 ஐபிஎல் தொடரில் எல்லாமே பாதகமாக மாறினாலும் நூர் அகமது, கலீல் அகமது என்ற இரண்டு தேர்வு சென்னை அணியின் பாசிட்டிவாகவும், பலமாகவும் மாறியது.. ’கடைசியாக தான் வந்தார் விநாயக்’ என்பதுபோல தொடரின் இறுதியில் அணிக்குள் வந்த டெவால்ட் பிரேவிஸ், ஆயுஸ் மாத்ரே, உர்வில் பட்டேல் போன்ற வீரர்கள் அணியின் எதிர்காலம் இவர்கள் தான் என்ற நம்பிக்கையை விதைத்தனர்..
இந்தசூழலில் தற்போது டாப் ஆர்டர்களாக ஆயுஸ் மாத்ரே, ருதுராஜ் கெய்க்வாட், உர்வில் பட்டேல், ஷிவம் துபே போன்ற வீரர்களும், மிடில் ஆர்டரில் டெவால்ட் பிரேவிஸ், தோனி போன்ற வீரர்களும் பந்துவீச்சில் நூர் அகமது, கலீல் அகமது, நாதன் எல்லிஸ் போன்ற வீரர்களும் அணியில் நிரந்தரமாக தெரிகின்றனர்..
இந்தசூழலில் தான் 2026 ஐபிஎல் வீரர்கள் வர்த்தகத்தில் சென்னை அணி ராஜஸ்தானிடம் இருந்து சஞ்சு சாம்சனை விலைக்கு வாங்கும் முயற்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னர் இரண்டு பிரான்சைஸ்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தநிலையில், தற்போது சஞ்சு சாம்சனுக்கு ஈடாக ஜடேஜா மற்றும் சாம் கரன் இரண்டு ஆல்ரவுண்டர்களையும் கேட்கும் ராஜஸ்தான் அணியின் டிமேண்டிற்கு சென்னை அணி ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிறிக்இன்ஃபோ வெளியிட்டியிருக்கும் அறிக்கையின் படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனை ரிலீஸ் செய்ய ஜடேஜா மற்றும் சாம்கரனை கேட்கிறது, இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக கையெழுத்து இடப்படவில்லை என்றாலும் சம்பந்தப்பட்ட மூன்று பேரான சஞ்சு சாம்சன், ஜடேஜா மற்றும் சாம்கரனுடன் அணிகள் பேசிவிட்டதாகவும், அதிகாரப்பூர்வ முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது..
அதுமட்டுமில்லாமல் சென்னை அணியின் மற்றொரு வர்த்தகமாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வாசிங்டன் சுந்தரை அழைத்துவரும் முயற்சியும் பேச்சுவார்த்தையில் இருந்துவருகிறது.. ஒருவேளை சஞ்சு சாம்சனுக்கு ஈடாக ஜடேஜாவை சென்னை அணி கொடுத்துவிட்டால், நிச்சயமாக அவருக்கு இணையாக வாசிங்டன் சுந்தரை எடுத்துவரும் முயற்சியிலும் சிஎஸ்கே தீவிரம்காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது..
இதுஒருபுறம் இருக்க சிஎஸ்கே அணியின் டெத்ஓவர் ஸ்பெசலிஸ்ட்டாக இருந்துவரும் பதிரானாவின் மேனேஜர் பிங்க் நிறத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பதாக வைரலாகிவரும் செய்தி சிஎஸ்கே ரசிகர்களை மேலும் குழப்பத்தில் தள்ளியுள்ளது.. கடந்த 2025 ஐபிஎல் தொடரின் இறுதியில் சாம் கரன் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில், சஞ்சு சாம்சனுக்கு ஈடாக ஜடேஜா மற்றும் பதிரானாவை கொடுக்க சிஎஸ்கே தீர்மானித்துவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது..
ஒருவேளை ஜடேஜா மற்றும் பதிரானா அணியிலிருந்து வெளியேறி, சஞ்சு சாம்சன், வாசிங்டன் சுந்தர் முதலிய வீரர்கள் உள்ளே வந்தால் சிஎஸ்கே அணி டாப் முதல் பாட்டம் வரை,
1. ஆயுஸ் மாத்ரே
2. ருதுராஜ் கெய்க்வாட்
3. உர்வில் பட்டேல்
4. ஷிவம் துபே
5. சஞ்சு சாம்சன்
6. டெவால்ட் பிரேவிஸ்
7. வாசிங்டன் சுந்தர்
8. சாம் கரன்
8. நூர் அகமது
9. கலீல் அகமது
11. நாதன் எல்லிஸ்
இம்பேக்ட் பிளேயர் - எம் எஸ் தோனி என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலுவான அணியாக உருவாகும்..
இன்றும் நாளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என சொல்லப்படும் நிலையில், இறுதியாக எந்தவீரர்கள் அணியில் தக்கவைக்கப்படுவார்கள், எந்தவீரர்கள் அணிக்குள் எடுத்துவரப்படுவார்கள் என்ற சுவாரசியம் அதிகரித்துள்ளது.. 2026 ஐபிஎல் தொடருக்கு விருப்பப்பட்ட எத்தனை வீரர்களை வேண்டுமானாலும் தக்கவைத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது..