’ஜடேஜாவை அணிக்காக தியாகம் செய்வார் தோனி..’ - முன்னாள் இந்திய வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்காக ஜடேஜாவை தியாகம் செய்வார் தோனி என முன்னாள் இந்திய வீரர் கூறியுள்ளார். சஞ்சு சாம்சன் அணியில் சேர்வது உறுதியாகி வரும் நிலையில், ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரின் நிலைமை குறித்து குழப்பம் நீடிக்கிறது. மேலும் சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவிற்கு சரியான தேர்வாக இருப்பார் எனவும் முன்னாள் வீரர் பாராட்டியுள்ளார்.
2026 ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பர் 15-ம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், எந்தெந்த வீரர்களை அணிகள் தக்கவைக்கப்போகின்றன, யாரெல்லாம் அணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது..
அணியின் தக்கவைப்பு பட்டியலை சமர்பிக்க நவம்பர் 15-ம் தேதி கடைசிநாளாக கூறப்படும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே மிகப்பெரிய வர்த்தகம் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துகொண்டே இருக்கிறது..
கடந்த 3 ஐபிஎல் சீசன்களாக தோனிக்கு மாற்றுவீரரை தேடிவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இம்முறை சஞ்சு சாம்சனை அணிக்குள் எடுத்துவர தீவிரம் காட்டிவருகிறது.. இதுதான் சரியான நேரம் என சாம்சனுக்கு மாற்றாக ஜடேஜா மற்றும் சாம் கரன் இரண்டு பேரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டிமேண்ட் செய்துள்ளது. இந்த 2 வீரர்கள் பட்டியலில் சாம்கரனா அல்லது பதிரானாவா என்ற குழப்பமும் நீடித்துவருகிறது..
சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு செல்லப்போகிறார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், ஜடேஜாவின் ஒப்புதலுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காத்திருக்கிறது..
இந்தசூழலில் தான் தோனிக்கு அணியின் வெற்றியே முக்கியம் என்றும், அணிக்காக ஜடேஜாவை தோனி தியாகம் செய்வார் என்றும் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார்..
ஜடேஜாவை தியாகம் செய்வார் தோனி..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏன் சஞ்சு சாம்சன் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என்று பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப், ‘கடந்த ஆண்டே சென்னை அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேடியது.. அந்த பட்டியலில் ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் இருந்தாலும், என்னை பொறுத்தவரையில் சஞ்சு சாம்சன் தான் சென்னை அணிக்கு சரியான தேர்வாக இருப்பார்.. அவரால் நம்பர் 3, 4, 5 என எந்த இடத்தில் வேண்டுமானாலும் இறங்கி ஸ்பின்னர்களை டாமினேட் செய்யமுடியும்.. தோனியை போல விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாகவும் அவரால் செயல்பட முடியும்.. இதையெல்லாம் கடந்து சஞ்சு சாம்சன் தென்னிந்தியாவை சேர்ந்தவர், அவருக்கும் சென்னை ரசிகர்களுக்குமான பாண்டிங் நன்றாக இருக்கும்.. அவர் சிஎஸ்கே அணியின் அடுத்த முகமாக மாறுவார்.. அதனால் தான் சென்னை அணி சஞ்சு சாம்சனுக்காக இவ்வளவு தீவிரம் காட்டுகிறது’ என கூறினார்.
மேலும் தோனி குறித்து பேசிய அவர், ‘தோனி சென்னை அணிக்காக ஒரு வீரராக, கேப்டனாக அனைத்தையும் செய்துள்ளார். அவர் சென்னை ரசிகர்களை நேசிக்கிறார், அவர் ஜார்கண்டை மறந்துவிட்டு சென்னை ஆளாகவே மாறிவிட்டார்.. இது ஒருபக்க காதலாக எப்போதும் இருந்ததில்லை, சிஎஸ்கே ரசிகர்களும் தோனியின் மீது அளவுக்கடந்த அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.. அவர் நினைத்தால் அவருடைய வாழ்க்கை முழுவதும் சென்னை அணியில் ஆடலாம், ரசிகர்கள் அவரை எப்போதும் கொண்டாடுவார்கள்..
ஆனால் அணி கடந்தமுறை 10வது இடத்தில் முடித்தது. அதனால் இந்தமுறை கம்பேக் செய்து சாம்பியனாக அணியை உருவாக்க நினைக்கிறார் தோனி.. அவருக்கு அணியின் வெற்றி தான் மிக முக்கியம்.. அணியின் நலனுக்காக ஜடேஜாவை நிச்சயம் தியாகம் செய்ய துணிவார் தோனி.. ஜடேஜா, தோனி இருவரும் பேசி முடிவெடுத்தால் அது அணிக்கான நலனாக இருக்கும்’ என்று பேசியுள்ளார்..

