8 பந்தில் 8 சிக்சர்கள் அடித்து வரலாறு
8 பந்தில் 8 சிக்சர்கள் அடித்து வரலாறுpt

8 பந்தில் தொடர்ந்து 8 சிக்சர்கள்.. 11 பந்தில் அரைசதமடித்து உலகசாதனை!

ரஞ்சிக்கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 8 சிக்சர்களை பறக்கவிட்டு சாதனை படைத்துள்ளார் மேகாலயாவைச் சேர்ந்த ஆகாஷ் குமார் சவுத்ரி என்ற வீரர்..
Published on
Summary

ரஞ்சிக்கோப்பை பிளேட் போட்டியில் மேகாலயா அணியின் ஆகாஷ் சவுத்ரி 11 பந்தில் அரைசதமடித்து உலகசாதனை படைத்தார். 8 பந்தில் 8 சிக்சர்கள் அடித்து வரலாற்றில் இடம்பிடித்தார். இதனால், முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 8 சிக்சர்கள் அடித்த முதல் வீரராகவும் திகழ்கிறார்.

ரஞ்சிக்கோப்பை தொடரின் 91வது பதிப்பு அக்டோபர் 15-ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 28 வரை நடக்கிறது. 90 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே கோப்பை வென்றுள்ள தமிழ்நாடு அணி இம்முறை கோப்பை வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

2025-26 ரஞ்சிக்கோப்பை தொடரின் முதல்சுற்று போட்டிகள் நடந்துவரும் நிலையில், 38 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மேலும் 6 அணிகளுக்கு இடையே ரஞ்சிக் கோப்பை பிளேட் போட்டிகள் நடந்துவருகின்றன..

இந்நிலையில் இன்று நடைபெற்ற ரஞ்சிக்கோப்பை பிளேட் போட்டியில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக மேகாலயா அணி 628/6 ரன்கள் குவித்து டிக்ளார் செய்தது..

8 பந்தில் 8 சிக்சர்கள் அடித்து வரலாறு
’நீ போ இது உன்னுடைய தருணம்..’ தோல்விக்கு பின் ஜெமிமாவை நெகிழவைத்த ஆஸி வீராங்கனையின் செயல்!

8 பந்தில் 8 சிக்சர்களை பறக்கவிட்டு சாதனை..

ஞ்சிக்கோப்பை பிளேட் போட்டியில் அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த மேகாலயா அணி 628/6 ரன்கள் குவித்து டிக்ளார் செய்தது. அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய தொடக்க வீரர் அர்பிட் பாத்வரா இரட்டை சதமடித்து அசத்தினார்..

ஆனால் 207 ரன்கள் அடித்த அர்பிட்டை விட 8வது வீரராக களத்திற்கு வந்த ஆகாஷ் சவுத்ரி வரலாற்றில் இடம்பிடித்து அன்றைய போட்டியின் ஹீரோவாக உருவானார்.. முதல் 3 பந்தில் 0, 1, 1 என எடுத்த ஆகாஷ் சவுத்ரி அடுத்த 8 பந்துகளிலும் தொடர்ச்சியாக 8 சிக்சர்களை அடித்து மிரட்டிவிட்டார்.. இதன்மூலம் 11 பந்தில் அரைசதமடித்து முதல்தர கிரிக்கெட்டில் உலகசாதனை படைத்தார்..

8 பந்தில் 8 சிக்சர்கள் அடித்து வரலாறு
’தோல்வி இன்னும் என்னை நோகடிக்கிறது..’ இந்தியா உடனான போட்டி குறித்து அலிசா ஹீலி வேதனை!

இதற்குமுன்பு 12 பந்தில் அரைசதமடித்ததே முதல்தர கிரிக்கெட்டில் உலகசாதனையாக இருந்த நிலையில், அதனை உடைத்துள்ளார் ஆகாஷ் சவுத்ரி.. மேலும் முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 8 சிக்சர்கள் விளாசிய முதல் வீரராகவும் வரலாற்றில் தடம்பதித்தார்.. கடைசி 3 பந்துகளை டாக் பந்தாக ஃபேஸ் செய்த ஆகாஷ் சவுத்ரி அவருடைய இன்னிங்ஸை 14 பந்தில் 50* ரன்களுடன் முடித்தார்..

ஆகாஷ் சவுத்ரி
ஆகாஷ் சவுத்ரி

மேகாலயாவை தொடர்ந்து விளையாடிவரும் அருணாச்சல பிரதேச அணி 73 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து விளையாடிவருகிறது.

8 பந்தில் 8 சிக்சர்கள் அடித்து வரலாறு
ஜடேஜாவை வெளியேற்றும் CSK..? சாம்சனை கொண்டுவர திட்டம்! வெளியான தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com