ஆசிய விளையாட்டில் இந்தியா, இலங்கை அணிகளை 45 ரன்னில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இஷான் கிஷனின் அதிரடியான 80 ரன்னுடன் இந்தியா 169 ரன்கள் சேர்த்தது. பும்ராவின் தொடக்க விக்கெட் வீழ்த்தல் இலங்கை அணியை தடுமாறச் செய்தது. INDvPAK இறுதிப்போட்டி எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.
2026 ஆசிய விளையாட்டின் ஒரு அங்கமாக டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட கிரிக்கெட் நாடுகளுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான், ஜப்பான், ஓமன், ஹாங்காங், மலேசியா மற்றும் நேபாள் உள்ளிட்ட 10 அணிகள் மொத்தமாக பங்கேற்றுள்ளன.
இந்தசூழலில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை உள்ளிட்ட 4 அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
இன்று நடைபெற்ற 2 அரையிறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை, வங்கதேசம்-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்தியா பேட்டிங் செய்தது. 12 ரன்னுக்கு முதல் விக்கெட், 24 ரன்னுக்கு 2 விக்கெட்டுகள் என இழந்து இந்தியா தடுமாற, அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய சூர்யவன்ஷி 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு 21 பந்தில் 38 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இருப்பினும் அடுத்தடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ், அக்சர் பட்டேல், திலக் வர்மா, ஷிவம் துபே என அனைவரும் ஓரிலக்க ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகளாக சரிந்தாலும் மறுமுனையில் மறுமுனையில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய இஷான் கிஷன், தனியாளாக 4 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 80 ரன்கள் அடித்து இந்தியாவை 169 ரன்கள் என்ற நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.
170 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இலங்கை அணிக்கு, முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்த வந்த வீரர்களும் ரன் அவுட், கேட்ச் என கொடுத்து சொதப்ப 45 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வியை சந்தித்தது.
இந்தவெற்றியின் மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது, இதனால் தங்கம் அல்லது வெள்ளி என பதக்கத்தை உறுதிசெய்துள்ளது இந்திய அணி.
அடுத்து நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேசம் பலப்பரீட்சை நடத்தின. மழையால் 13 ஓவர்களாக நடத்தப்பட்ட போட்டியில், முதலில் விளையாடிய வங்கதேசம் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே அடித்தது.
தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடர்ந்து இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்துவரும் நிலையில், பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் வெற்றிபெற போராடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தப்போட்டி மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.