\
india become first team in 148 year cricket history
சுப்மன் கில்BCCI/ X page

148 ஆண்டுகால கிரிக்கெட்டில் முதல்முறை.. இந்தியா படைத்த உலக சாதனை!

இதற்கு முந்தைய சாதனையை தென்னாப்பிரிக்கா 2006-இல் ஜோகன்னஸ்பர்க்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 194 பந்துகளில் 300 ரன்களை எட்டியிருந்தது.
Published on: 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஓர் உலக சாதனையைப் படைத்துள்ளது. 30 ஓவர்களுக்குள் 300 ரன்களை எடுத்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்தச் சாதனையை இந்தியா 175 பந்துகளில் எட்டியுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி, நேற்று குவகாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் எடுத்தது. குறிப்பாக, அவ்வணியில் ஜான் கேம்பெல் (101), ஹோப் (104), ஜாங்கோ (114) ஆகியோர் சதமடித்து அசத்தினர். பின்னர், கடுமையான இலக்கை நோக்கி இந்திய அணியில் ரோகித் சர்மாவின் சதம் மற்றும் கேப்டன் சுப்மன் கில்லின் (223 ரன்கள்) இரட்டைச் சதத்துடன் இந்திய அணி, 43.3 ஓவர்களிலேயே வெற்றி எலக்கை தொட்டு சாதனை படைத்துடன் தொடரையும் கைப்பறியது.

முன்னதாக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சேஸிங்கின்போது ஒரு மாபெரும் சாதனையை இந்திய அணி முறியடித்தது. ஒருநாள் போட்டிகளில் தனித்துவமான மைல்கல்லை எட்டிய முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது. அதாவது, ஒருநாள் போட்டியில் 30 ஓவர்களுக்குள் 300 ரன்கள் எடுத்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்தச் சாதனையை அது 175 பந்துகளில் நிகழ்த்தியது. இதற்கு முந்தைய சாதனையை தென்னாப்பிரிக்கா 2006-இல் ஜோகன்னஸ்பர்க்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 194 பந்துகளில் 300 ரன்களை எட்டியிருந்தது. இங்கிலாந்து 33.1 ஓவர்களிலும், இந்தியா 2009இல் இலங்கைக்கு எதிராக 34.1 ஓவர்களிலும் 300 ரன்களை கடந்திருந்தன. அந்த அனைத்து முந்தைய சாதனைகளையும் நேற்று உடைக்கப்பட்டன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com