\
virat kohli
virat kohlibcci

100 சதங்களை கோலியால் அடிக்க முடியுமா? முன்னாள் வீரர்கள் ஓபன் பதில்!

சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்க விராட் கோலியால் முடியுமா என்ற கேள்விக்கு முன்னாள் இந்திய வீரர்கள் பதிலளித்துள்ளனர்.
Published on: 
Summary

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கோலியின் 139 ரன்கள் ஆட்டத்துக்குப் பிறகு, அஜிங்கியா ரஹானே, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள், சச்சின் 100 சதங்களை முறியடிக்கக் கூடிய ஒரே வீரர் கோலிதான் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இருப்பினும் 2027 உலகக்கோப்பை வரை அதிகபட்சம் 30 ஒருநாள் போட்டிகள் மட்டுமே வாய்ப்பிருப்பதால், 14 சதங்கள் கூடுதல் அடிப்பது மிகக் கடின சவாலாக பார்க்கப்படுகிறது.

ஒருநாள் கிரிக்கெட்டில் 15000 ரன்களை கோலி அடித்துவிட்டார்.. மொத்தமாக 86 சதங்கள் குவித்துள்ளார்.. ஆனால் இவ்வளவு சாதனைகள் படைத்தபிறகும் அவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறார்.. அப்போ முதலிடத்தில் யார் சாமி இருப்பது? என்ற கேள்வியை ஜென்சி-யினர் சிலர் கேள்வி எழுப்பி, பின்னர் OG சச்சின் டெண்டுல்கர் என பதிவிட்டு அவருடைய 100 சதங்கள் சாதனையை முறியடிக்கவே முடியாது என்று கருத்திட்டு வருகின்றனர்.

விராட் கோலி
விராட் கோலிbcci

இந்தசூழலில் தான் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற இமாலய சாதனையை விராட் கோலியால் முறியடிக்க முடியுமா? என்ற கேள்வி மீண்டும் வைரலாகியுள்ளது. டெஸ்ட், டி20 என இரண்டு வடிவத்திலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட கோலியால் ஒருநாள் கிரிக்கெட் மட்டும் விளையாடி எப்படி அந்த வரலாற்றை நிகழ்த்த முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிலும் வரும் 2027 உலகக்கோப்பை தான் தன்னுடைய கடைசி உலகக்கோப்பை என்று கூறியிருக்கும் கோலி, இந்தியா கோப்பை வெல்ல அனைத்தையும் செய்வேன், ஒருவேளை கோப்பை வெல்லமுடியவில்லை என்றால் அதுதான் என்னுடைய கடைசி முயற்சி என்று ஓய்வு குறித்த சூசகமான அறிவிப்பையும் ஓபனாக கொடுத்துள்ளார்.

100 சதங்களை முறியடிக்க முடியுமா?

இப்படியான சூழலில் தான் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக விராட் கோலியின் ஆக்ரோசமான 139 ரன்கள் ஆட்டத்தை பார்த்த முன்னாள் இந்திய வீரர்கள், விராட் கோலியால் 100 சதங்கள் சாதனையை எட்டமுடியும் என்று கூறியுள்ளனர். விராட் கோலி அவருடைய மனதில் சிறிது அழுத்தத்துடன் விளையாடும்போதெல்லாம், தனக்குள் இருக்கும் மிருகத்தை வெளிக்கொணர்ந்து அபாரமான ஆட்டங்களை வெளிப்படுத்துகிறார் என்றும், தன்னுடைய ரோல் மாடலான சச்சினின் 100 சதங்களை முறியடிக்க வேண்டும் என்ற முயற்சியை அவர் எடுப்பார் என்றும் அஜிங்கியா ரஹானே கூறியுள்ளார்.

virat kohli
virat kohlibcci

அவரைத்தொடர்ந்து பேசிய தினேஷ் கார்த்திக், கடைசியாக கோலி பேட்டிங் செய்தது ஜூலை 19 அன்று. அதற்குபிறகு இப்போது செப்டம்பர் 27. இரண்டு மாதங்களாக மட்டையைத் தொடாத ஒரு வீரரைப் போலவா அவர் விளையாடுகிறார். சச்சினின் 100 சதங்களை முறியடிக்க யாராவது ஒருவர் இருக்கிறார் என்றால், அது விராட் கோலி மட்டும்தான். அவருடைய தொழில்முறை வாழ்க்கையில் அவரால் 36 போட்டிகளில் 14 சதங்கள் அடிக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் அது மிகமிக கடினம். ஆனால், தற்போதைய கிரிக்கெட் உலகில் அதைச் செய்யக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால், அது ஒரே ஒருவர்தான், விராட் கோலி.

இதையெல்லாம் தாண்டி நான் அந்த அழுத்தத்தை அவர் மீது சுமத்த வேண்டாம் என்று நினைக்கிறேன். அவருடைய கிரிக்கெட்டை அனுபவிக்க விடுவதே சரியானதாக இருக்கும். ஒருவேளை அவர் 95 சதங்களுடனோ, 90 சதங்களுடனோ அல்லது 86 சதங்களுடனோ முடித்தாலும் பிரச்சனை இல்லை. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அவருடைய ஆட்டத்தால் நமக்கு அளித்த மகிழ்ச்சியைத்தான் நாம் அனுபவிக்க வேண்டும்” என பேசியுள்ளார்.

2027 உலகக்கோப்பைக்கு முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட போட்டிகள், ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போட்டிகள் என சேர்த்தாலும் அதிகபட்சம் 30 போட்டிகள் இருக்கலாம்.. ஆனால் பெரிய இடைவெளிகளுக்கு இடையே நடக்கும் இத்தகைய போட்டிகளில் ஒரே ஃபார்மேட் விளையாடும் கோலி 100 சதங்கள் அடிப்பது மிகவும் சவாலான விசயமாகவே பார்க்கப்படுகிறது..

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com