\
virat kohli
virat kohligrok ai

BEST சிக்ஸ் ஹிட்டிங்..? ஃபிளிக் ஷாட்? கவர் ட்ரைவ்? ODI-ன் தலைசிறந்த வீரர்களை குறிப்பிட்ட கோலி!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த ஷாட்களை கொண்டிருக்கும் வீரர்களின் பெயரை விராட் கோலி வெளிப்படுத்தினார்.
Published on: 
Summary

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 139* ரன்கள் அடித்து பல சாதனைகளை முறியடித்த கோலி, சச்சினை முந்தி 15000 ரன்கள், லிஸ்ட் ஏ சதங்கள், சொந்த மண்ணில் அதிக ரன்கள் போன்ற முக்கிய மைல்கற்களை எட்டினார். பின்னர் நடந்த உரையாடலில், சிறந்த ஷாட்கள் அடிப்படையில் ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை வரிசைப்படுத்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 88 பந்துகளில் 10 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 139 ரன்கள் அடித்த கோலி பல்வேறு சாதனைகளை முறியடித்தார். அதிவேகமாக 15000 ரன்கள், அதிக லிஸ்ட் ஏ சதங்கள், சொந்தமண்ணில் அதிக ரன்கள் என சச்சின் சாதனையை முறியடித்ததோடு, பல சாதனைகளை சமன்செய்தார்.

virat kohli
virat kohlibcci

இந்தசூழலில் போட்டிக்கு பிறகு கேள்வி-பதில் செக்மண்ட் ஒன்றிற்கு பதிலளித்த கோலி, சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்களை அவர்களின் ஷாட்கள் கொண்டு தேர்ந்தெடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டார். அப்போது, ஸ்ட்ரைட் ட்ரைவ் அடிப்பதில் சிறந்த வீரர் யார்? என்பதற்கு சச்சின் டெண்டுல்கரின் பெயரை குறிப்பிட்டார்.

தொடர்ந்து கவர் ட்ரைவ்-க்கு இலங்கையின் முன்னாள் வீரர் சங்கக்கரா, ஃபிளிக் ஷாட்-க்கு ராகுல் டிராவிட், கட் ஷாட்-க்கு விரேந்தர் சேவாக்கை குறிப்பிட்டார். மேலும், சிறந்த ஸ்வீப் ஷாட்டுக்கு ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ ஹைடன், சிக்ஸ் ஹிட்டிங்கிற்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல், விக்கெட்டுகளுக்கு இடையே சிறந்த ரன்னராக ஏபிடி வில்லியர்ஸை குறிப்பிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com