ashwin picks csk playing 11 for 2026 ipl web
கிரிக்கெட்

அஸ்வின் தேர்வுசெய்த சிஎஸ்கே பிளேயிங் 11.. அந்த வீரருக்கு இடமில்லை!

2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு இளம் வீரர்களை 30 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. இரண்டு சீசன்களாக பிளே ஆஃப் செல்லாத நிலையில், 2026-ல் கம்பேக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rishan Vengai

2026 ஐபிஎல்லுக்கு முன்னதாக தங்களுடைய மேட்ச் வின்னிங் வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் பதிரானா இருவரையும் வெளியேற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.

எதிர்கால சிஎஸ்கே அணியை கட்டமைக்கும் முயற்சியில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், மகேந்திர சிங் இதுவே கடைசி ஐபிஎல் என சொல்லப்படுகிறது. சிலபேர் 2026 ஐபிஎல் தொடரிலேயே தோனி விளையாட மாட்டார் என கூறிவருகின்றனர்.

19 வயது கார்திக் சர்மா, 20 வயது பிரசாந்த் வீரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே

இந்தசூழலில் 2026 மினி ஏலத்தில் 43.4 கோடியுடன் சென்ற சென்னை அணி, பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா தலா 14.20 கோடி, அகீல் ஹொசைன் மற்றும் மேட் ஹென்றி தலா 2 கோடி, மேத்யூ ஷார்ட் 1.5 கோடி, ராகுல் சாஹர் 5.2 கோடி, சர்பராஸ் கான் 75 லட்சம், அமன் கான் 40 லட்சம் மற்றும் ஜாக் ஃபோக்ஸ் 75 லட்சம் என மொத்தம் 9 வீரர்களை எடுத்துள்ளது.

இளம் வீரர்கள் அதிகம் இடம்பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்டிங் வலுவானதாக இருந்தாலும், பந்துவீச்சு சுமாராகவே இருக்கிறது. அதிலும் டெத் பவுலிங் கவலையளிக்கும் விதமாகவே உள்ளது.

குஜராத்தை தோற்கடித்தது சிஎஸ்கே

இந்தசூழலில் 2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் 11 வீரர்களை பட்டியலிட்டு அஸ்வின், டாப் 3 வீரர்களாக ஆயுஸ் மாத்ரே, சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட்டையும், மிடில் ஆர்டர் பேட்டர்களாக ஷிவம் துபே மற்றும் டெவால்ட் பிரெவிஸையும், விக்கெட் கீப்பராக தோனி, ஆல்ரவுண்டர்களாக பிரசாந்த் வீர், அகீல் ஹொசைன் அல்லது மேட் ஹென்றியையும், பந்துவீச்சாளர்களாக கலீல் அகமது, நூர் அகமது மற்றும் நாதன் எல்லிஸையும் தேர்வுசெய்துள்ளார். சென்னை அணியில் பவுலிங் ஆல்ரவுண்டர் இல்லாத சூழலில் ஜேமி ஓவர்டனை அஸ்வின் தவிர்த்துள்ளார்.

இம்பேக்ட் வீரர்களாக அன்ஷுல் கம்போஜ், கார்த்திக் சர்மா, சர்பராஸ்கான் மற்றும் ஸ்ரேயாஸ் கோபாலை பட்டியலிட்டார் அஸ்வின்.