இந்தியா - நியூசிலாந்து இறுதிப்போட்டியில் 18 பந்தில் அரைசதமடித்த அபிஷேக் சர்மா bcci
கிரிக்கெட்

FINAL| 18 பந்தில் அரைசதமடித்த அபிஷேக் சர்மா.. 7.2 ஓவரில் 100 ரன்களை எட்டிய இந்தியா!

2026 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 18 பந்தில் அரைசதமடித்து அசத்தினார் இந்திய வீரர் அபிஷேக் சர்மா.

Rishan Vengai

அகமதாபாத்தில் நடைபெறும் டி-20 உலகக் கோப்பை இறுதியில், இந்தியா 7.2 ஓவரில் 100 ரன்களை எட்டியது. அபிஷேக் சர்மா 18 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா வெற்றியை நோக்கி முன்னேறுகிறது. சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டி-20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

2023ஆம் ஆண்டில் இதே நரேந்திர மோடி மைதானத்தில் ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் உலகக்கோப்பையை இழந்த இந்திய அணி, தற்போது அதே மண்ணில் டி20 உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது.

நியூசிலாந்து - இந்தியா

ஆனால் ஐசிசி தொடர்களில் எப்போதும் இந்திய அணிக்கு வில்லனாக அமையும் ஒரே அணியாக நியூசிலாந்து இருந்துவருவதால் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை நியூசிலாந்து 2 முறை மட்டுமே கோப்பை வென்றிருக்கும் நிலையில், அவ்விரண்டு முறையும் இந்தியாவிற்கு எதிராகவே வென்றுள்ளது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையே ஆட்டம் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

18 பந்தில் அரைசதமடித்த அபிஷேக் சர்மா..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இத்தொடர் முழுவதும் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து சிறப்பாக விளையாடிவருவதால், நல்ல இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

india vs new zealand

அதன்படியே தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். பவர்பிளேவை டாமினேட் செய்த அபிஷேக் சர்மா 18 பந்தில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உட்பட அரைசதமடித்து அசத்தினார். நடப்பு உலகக்கோப்பை முழுவதும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த அபிஷேக் சர்மா, நியூசிலாந்து அணிக்காக காத்திருந்தது போல இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்து 52 ரன்னிற்கு வெளியேறினார்.

7.2 ஓவரில் 100 ரன்களை கடந்து இந்தியா விளையாடிவரும் நிலையில், சஞ்சு சாம்சன் 48 ரன்னிலும், இஷான் கிஷன் 14 ரன்னிலும் பேட்டிங் செய்து வருகின்றனர்.