ஐபிஎல் மினி ஏலத்தில் கலக்கப்போகும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- முக்கிய வீரர்களை குறிவைக்கிறது.
செய்தியாளர் - சு.மாதவன்
அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி 10 அணிகளில் ஒன்றான கொல்கத்தா மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதனால், அவ்வணி ஏலத்தில் சில முக்கிய வீரர்களை எடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
ஐபிஎல் 2024 தொடரில் மூன்றாவது கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா அணி நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் அபிஷேக் நாயர் தலைமைப் பயற்சியாளராகவும், வழிகாட்டியாக டுவைன் பிராவோவும், பேட்டிங் பயிற்சியாளராக ஷேன் வாட்சனும் பவுலிங் பயிற்சியாளராக டிம் சவூதியும் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து ஐபிஎல் மினி ஏலத்துக்கான ஒவ்வோர் அணியினரும் தங்களது வீரர்களை விடுவித்த நிலையில், கொல்கத்தா அணியில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. கடந்த மெகா ஏலத்தில் 23.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் சோபிக்காத நிலையில் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆல்ரவுண்டர்களான ஆண்ட்ரே ரஸுல்,மொயின் அலி, விக்கெட் கீப்பர்களான ரஹமதுள்ள குர்பாஸ், குயின்டன் டிகாக் மற்றும் மேலும் பல வீரர்களை விடுவித்தது. இதனால் அணியின் கையிருப்பு 64.3 கோடியாக உள்ளது. இது மற்ற அணிகளைவிட அதிகமாகும். இதன்மூலம், இந்த மினி ஏலத்தில் பல முக்கிய வீரர்களை எடுக்கவுள்ளது.
கொல்கத்தா அணியில் 12 ஆண்டுகளாக முக்கியமான தருணங்களில் தூணாக இருந்த ஆண்ட்ரே ரஸுல், அனைத்து பார்மட்களிலும் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் கொல்கத்தா அணியில் இருந்தும் விடுவிக்கபட்டார். இதனால் ஐபிஎல் மினி ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்க பட்ட ஆண்ட்ரே ரஸுல் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் 12 ஆண்டுகள் விசுவாசமாக இருந்ததால் தற்போது கொல்கத்தா அணியில் பவர் கோச் ஆக மாறினார்.
அணியில் 25 வீரர்களில் 12 வீரர்களை தக்கவைத்து 13 வீரர்களை விடுவித்த நிலையில், அணியின் கையிருப்பு 64.3 கோடி அதிகமானது. விடுவிக்கப்பட்ட வீரர்களில் அணியில் இருந்த அனைத்து விக்கெட் கீப்பர்களையும் விடுவித்தது. அடுத்தபடியாக பேக்அப் தொடக்க வீரர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்கள், ஓவர்சீஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் பேக்அப் ஸ்பின்னர்கள் இவ்வகையான வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது. கொல்கத்தா அணிக்கு 13 இடங்கள் மீதமுள்ளன. அவற்றில் ஆறு இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கும் வாய்ப்பாக இருக்கிறது.
கொல்கத்தா அணியில் தற்போது விக்கெட் கீப்பர் இடத்தைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதற்குச் சரியான தேர்வாக ஜேமி ஸ்மித் இருப்பார். இவர் விக்கெட் கீப்பராகவும் தொடக்க வீரராகவும், பேட்டிங் வரிசையிலும் திறமை கொண்டவர். இங்கிலாந்து அணிக்காக விளையாடிய ஐந்து T20 போட்டிகளில் ஸ்மித் 190க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக்ரேட்டைக் கொண்டுள்ளார், மேலும் கொல்கத்தா அணி தேடும் மாற்று வீரராகவும் இருக்கலாம். அடுத்து ஜாஸ் இங்கிலீஸ், ஆஸ்திரேலிய அணிக்கு டி20-ல் நல்ல ஸ்டைரக் ரேட் 159.27 மற்றும் ஐபிஎலிலும் சிறப்பான ஸ்டைரக் ரேட் 162.58 வைத்துள்ளார். இவர் விக்கெட் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து தென்னாப்பிர்க்க வீரர் குயிண்டன் டிகாக் தற்போதைய ஆட்டங்களில் சிறப்பான பங்களிப்பு தருவது மற்றும் விக்கெட் கீப்பராகவும் இவரைத் தேர்வு செய்யலாம். அதேபோல், இந்திய விக்கெட் கீப்பரான கே.எஸ்.பரத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை அணியில் சேர்க்க கொல்கத்தா அணி முழு முயற்சி எடுக்கும். காயங்களுக்குப் பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கும் இந்த ஆல்ரவுண்டர், ரஸுல்க்கு மாற்று வீரராக சரியாகப் பொருந்துகிறார். ஐபிஎல்லில் ஏற்கெனவே ஒரு சதம் அடித்த கிரீன், 29 போட்டிகளில் 707 ரன்களையும், 16 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்காக 21 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார், 160 ஸ்ட்ரைக் ரேட்டிற்கு மேல் 521 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்து, லியம் லிவிங்ஸ்டனை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி முயற்சிக்கும். இவர் ஆண்ட்ரே ரஸுல்-க்கு மாற்று வீரராக சரியாக இருப்பார் என்று கூறப்படுகிறது.
சமீபகாலங்களில் மிகவும் மேம்பட்ட பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கும் மேட் ஹென்றி, கொல்கத்தா தேடும் அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளராக இருக்கலாம். முக்கியப் போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து ஹென்றி விலகினார். இந்த சீசனில் மீண்டும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
ஏலத்திற்கு முன்னதாக மதீஷா பதிரானாவை விடுவிக்க சிஎஸ்கே முடிவு செய்தபோது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. சென்னை அணிக்காக 32 போட்டிகளில் 47 விக்கெட்டுகளை வீழ்த்திய பதிரானா, சிஎஸ்கேவின் 2023 கோப்பையை வெல்ல முக்கியப் பங்கு வகித்தார். ஆனால் பதிரானா தனது அபாரமான யார்க்கர்களாலும், சிறந்த டெத்-பவுலிங் திறமைகளாலும் ஓர் ஆட்டத்தையே தலைகீழாக மாற்ற முடியும். சிஎஸ்கே அவரை மீண்டும் அணிக்குக் கொண்டுவர போராடும் என்று பலர் எதிர்பார்க்கும் அதே வேளையில், கொல்கத்தா தேடும் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரும் அணியில் இருக்கலாம்.
கொல்கத்தா அணி பிருத்வி ஷாவை ஏலத்தில் எடுக்க வாய்ப்பு உள்ளது. பவர்பிளே ஸ்ட்ரைக் ரேட்டை அதிகப்படுத்தும் ஒரு பேட்ஸ்மேனான ஷா சிறந்த தேர்வாக இருக்க முடியும். 26 வயதான அவர் இதுவரை SMAT-இல் சிறப்பாகச் செயல்பட்டு, ஏழு போட்டிகளில் 160.52 ஸ்ட்ரைக்ரேட்டில் 183 ரன்கள் எடுத்துள்ளார்.
அஜிங்க்யா ரஹானே, ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, அனுகுல் ராய், ஹர்ஷித் ரானா, மணீஷ் பாண்டே, ரமன்தீப் சிங், ரிங்கு சிங், ரோவ்மன் பவல், சுனில் நரைன், உம்ரான் மாலிக், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.
கொல்கத்தா அணி வருகின்ற மினி ஏலத்தில் பல வீரர்களை தட்டிதூக்கும் என்பது சந்தேகமில்லை.