full moon FB
ஆன்மீகம்

பெளர்ணமியில் கோயிலுக்கு செல்ல முடியவில்லையா? இதோ இதை செய்யுங்கள்..

வீட்டில் பெளர்ணமி வழிபாடு செய்வது எப்படி? அதனால் கிடைக்கும் பலன்கள என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

PT WEB

செய்தியாளர் - வைஜெயந்தி.எஸ்

பௌர்ணமி என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது முழு நிலவுதான். இந்த நாளில் வீட்டில் வழிபாடு செய்வது மிகவும் நல்லது. அப்படி வழிபடும்போது குலதெய்வம், இஷ்ட தெய்வம் மற்றும் வீட்டு தெய்வங்களை வழிபடுவது நல்லது என்கிறது சாஸ்திரங்கள். இந்த பௌர்ணமி நாளில் நாம் செய்யும் ஒவ்வொரு பூஜையும் மிகவும் விசேஷமானது. செல்வம் சம்பந்தமான பூஜைகளாக இருந்தாலும் ஆரோக்கியம் சம்பந்தமான பூஜைகளாக இருந்தாலும் இந்த நாளில் செய்வது அதிக பலனை கொடுக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த பெளர்ணமி தினம் நாளை (ஜூலை 10) தமிழ் மாதமான ஆனி மாதம் 26ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது..

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினம் வந்தாலும் இந்த ஆனி மாதம் சிறப்பு வாய்ந்தது.. காரணம் ஆனியில் பௌர்ணமி தினம் மூல நட்சத்திரத்தில் வருகிறது. அன்றைய தினம்ல் அம்பிகைக்கு கருப்பு வஸ்திரமும், முத்தாபரணமும் அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்வதினால் நீங்கள் தொட்ட அனைத்து காரியத்திலும் வெற்றி பெறலாம். அத்துடன் இந்த ஆனி பௌர்ணமியில் கண்ணனை நினைத்து விரதம் இருந்தால் காதல் கைகூடும் என்பது நம்பிக்கை. அதனால் இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டுதல்கள் நிறைவேறுமாம்.

full moon

அதுமட்டுமின்றை இந்த பெளர்ணமி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கிழமைகளில் வரும். அந்த கிழமைகளுக்கு என்று தனி சிறப்பும் பரிகாரங்களும் உள்ளன... அந்த வகையில் இந்த ஆனி மாதம் வரும் பெளர்ணமி வியாழக்கிழமையில் வருகிறது.. பொதுவாகவே வியாழன் குரு பகவானுக்கு உரிய நாள். அப்படி வியாழக்கிழமை அன்று வரும் பௌர்ணமி நாளில் குரு பகவானை வணங்கினால் தன்னம்பிக்கையும், அறிவாற்றலும் பெருகும். குருவை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாளாக இந்த நாள் இருக்கும். மேலும் இந்த நாளில் குரு திசை நடப்பவர்கள், தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரகாரர்கள், துர்க்கை அம்மனுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்து, தயிர் சாதம் மற்றும் மஞ்சள் நிற பழங்கள் நிவேதனம் வைத்து வழிபட சகல வளங்களும் பெறுவார்கள்.

பெளர்ணமியில் கோயிலுக்கு செல்ல முடியவில்லையா?

பெளர்ணமியில் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் அன்று மாலை சந்திரன் தோன்றும் நேரத்தில் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பூஜை அறையில் வைத்து அம்மனை வழிபாடு செய்வது நல்லது. இத்தகைய சக்தி மிகுந்த நாளில், தேவி வழிபாடு தீயசக்தியில் இருந்து நம்மைக் காக்கும். அதுமட்டுமல்லாமல் குல தெய்வத்தையும் வழிபடுவது குல விருத்தி அடையும்..

பெளர்ணமி நாளில் முக்கியமாக செய்ய வேண்டியவைகள்..

பௌர்ணமி வழிபாடு என்பது அனைவருக்கும் நன்மை தரக்கூடிய வழிபாடாக இருந்தாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக்கூடியது. பௌர்ணமி அன்று உணவு உண்ணாமல் இருந்து வழிபாடு செய்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது நம்பிக்கை. அதிலும் திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் மனதிற்கு பிடித்த மாதிரியான கணவன் கிடைக்க இந்த பூஜையை செய்து அம்பிகையின் அருள் பெறலாம். இதில் மிக முக்கியமாக பொருளாதார கஷ்டகள் நீங்கி செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை

pournami

பெளர்ணமி வழிபாட்டின் பலன்கள்

இந்த ஆனி பௌர்ணமி வழிபாட்டின் மூலம் நினைத்த காரியங்கள் வெற்றி பெறலாம். காதல் கைகூடும். இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டுதல்கள் நிறைவேறும். தொடர்ந்து பெளர்ணாமி வழிபாடுகளை செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். ஆனி பௌர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் அரச யோகத்தினைப் பெற்றிருப்பர் என்பது நம்பிக்கை.