amman FB
ஆன்மீகம்

ஆடி மாதத்தின் சிறப்புகள் என்னென்ன? முதல் நாளான இன்று எப்படி வழிபட வேண்டும்?

ஆடி என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவதும். தெருவுக்கு தெரு அம்மன் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருப்பதும்தான்..

Vaijayanthi S

மாதங்களை பொறுத்தவரை தமிழில் உள்ள எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவைதான். அதில் ஆடி மாதம் என்பது ரொம்பவே சிறப்புடையதுனு சொல்லலாம்.. காரணம் இந்த ஆடி மாதம் என்பது சக்திக்குரிய மாதமாக கருதப்படுகிறது.. சக்தி என்றாலே அம்மன், அம்மன் என்றாலே சக்தி. இந்த மாதம் அம்மனை வழிப்பட வேண்டிய மாதமாகும். ஆம் ஆடி என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவதும். தெருவுக்கு தெரு அம்மன் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருப்பதும்தான்.. அதுமட்டுமல்லாமல் ஆடி மாதம் ஏன் தனி சிறப்பை கொண்டுள்ளது தெரியுமா? ஆம சில தமிழ் மாதங்கள் சைவ வழிபாட்டுக்கு ஏற்றதாகவும், சில மாதங்கள் வைணவ வழிபாட்டுக்கு ஏற்றதாகவும் இருக்கும்.

ஆனால் இரண்டு சமய தெய்வங்களுக்குமே உகந்த மாதம் என்றால் அது ஆடி மாதம்தான். தெய்வீகம் கமலும் இந்த மாதத்தில் சில சிறப்பான விசேஷ நாட்கள் மற்ற மாதங்களை விட அதிகமாக இருக்கும்.. அந்த நாட்களில் சரியான முறையில் அம்மனை வழிபாடு செய்தால் பூரண நலனும், செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.. இத்தகைய சிறப்புகளை கொண்ட இந்த ஆடி மாதத்தில் வரும் விரதநாட்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..

ஜூலை 17ஆம் தேதியான இன்று (17.07.2025) ஆடி முதல் நாள். குருபகவானுக்குரிய வியாழக்கிழமையில் ஆடி மாதம் தொடங்குகிறது.. இது மிகவும் சிறப்பு வாய்தது என சொல்லப்படுகிறது.. இந்த வருடம் ஆடிமாதம் தொடங்கி மறுநாளே ஆடி வெள்ளி வருகிறது. அதுவும் கூடுதல் சிறப்புடையதாகும்.. ஆடி வெள்ளி தொடங்கி, ஆதி பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடிப் பூரம் என சிறப்பு வழிபாட்டு தினங்கள் அடுதடுத்து வந்துக்கொண்டே இருக்கும்.. அத்துடன் கிராமங்களிலும் அம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பணசாமி உள்ளிட்ட அனைத்து காவல் தெய்வங்களுக்கும், இந்த மாதத்தில்தான் சிறப்பு பூஜைகள் நடைபெறும்..

Amman

மேலும் அம்மனுக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் கூழ் வார்த்தல் முக்கியமான நிகழ்வாகும்.. அதனுடன், கத்தரி, மொச்சையுடன் சேர்த்து வைக்கப்படும் கருவாட்டுக் குழம்பையும் அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்வதை தென் மாவட்ட மக்கள் இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.. மேலும் அம்மன் கோயில்கள் தீ மிதிப்பது, பால் குடம் எடுப்பது, பொங்கல் வைத்து அனைவருக்கும் கொடுப்பதும் இந்த மாதத்தில்தான்.. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வேப்பிலை .. இந்த வேப்பிலை அம்மனுக்கு உகந்தது.. அதனால் இந்த ஆடி மாத்தில் அனைவரின் வீட்டிலும், குடிக்கும் நீரிலும் கூலிலும், மோரிலும் இந்த வேப்பிலையை கலந்து குடிப்பார்கள்.. காரணம் அம்மியே பறக்கும் ஆடிக் காற்றில், தொற்று நோய்கள் வேகமாக பரவும். அதனாலேயே நம் முன்னோர்கள் இந்த மாதத்தில் வேப்பிலையை அதிகமாக பயன்படுத்தினர்.

Aadi month

இதே ஆடி மாதத்தில்தான் பெண்கள் மட்டும் வழிபடும் அவ்வையார் நோன்பும் கடைப்பிடிக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில். பெண்கள் குழுவாக சேர்ந்து பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டை செய்து, படையலிட்டு சாப்பிடுவது வழக்கம். ஆண்களுக்கு தெரியாமல், தனி அறையில் நோன்பிருக்கும் பெண்கள் படையலிடும் கொழுக்கட்டையை ஆண்களுக்கு கொடுக்க மாட்டார்கள்..

ஆடி மாதத்தின் முதல் நாளான இன்று அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை வணங்கி வருவது நல்லது. அப்படி கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் உங்களது பூஜை அறையில் சாமி படங்களுக்கு பூ போட்டு அலங்காரம் செய்து, ஒரு கலச சொம்பில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, அதையும் மலரால் அலங்கரித்து வைக்க வேண்டும். அதன் பிறகு காமாட்சி அம்மன் விளக்கைகேற்றி அம்மனையும் குல தெய்வத்தையும் மனதார நினைத்து வணங்க வேண்டும்.

ஆத்துடன் அம்பிகைக்கு நைவேத்தியமாக பொங்கல், பாயசம, பால் என உங்களால் முடிந்ததை வைத்து படைக்கலாம். வழிபாட்டின் போது அபிராமி அந்தாதி பாராயணம் செய்வது. அம்மன் பாடல்களை பாடுவது சிறப்பு.. அப்படி செய்வதினால் உங்கள் விரதம் முழுமை பெற்று வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை..

Amman

ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விஷேச நாட்கள்

1. ஜூலை 16 புதன் - தட்சிணாயன புண்யகாலம் , கடக சங்கராந்தி

2. ஜூலை 17 வியாழன்- சபரிமலையில் நடை திறப்பு

3. ஜூலை 20 ஞாயிறு - ஆடி கிருத்திகை , கார்த்திகை விரதம்

4. ஜூலை 21 திங்கள் - ஏகாதசி விரதம்

5. ஜூலை 22 செவ்வாய் - பிரதோஷம்

6. ஜூலை 23 புதன் - மாத சிவராத்திரி

7. ஜூலை 24 வியாழன்- அமாவாசை , ஆடி அமாவாசை

8. ஜூலை 25 வெள்ளி - சந்திர தரிசனம் , ஆஷாட நவராத்திரி

9. ஜூலை 28 திங்கள் - ஆடிப்பூரம் , சதுர்த்தி விரதம் , சோமவார விரதம் , நாக சதுர்த்தி

10. ஜூலை 29 செவ்வாய் - கருட பஞ்சமி , நாக பஞ்சமி

11. ஜூலை 30 புதன் - சஷ்டி விரதம்

12. ஆகஸ்ட் 02 சனி - ஆடிப் பெருக்கு

13. ஆகஸ்ட் 03 ஞாயிறு - நட்பு நாள்

14. ஆகஸ்ட் 05 செவ்வாய் - ஏகாதசி விரதம்

15. ஆகஸ்ட் 06 புதன் - பிரதோஷம்

16. ஆகஸ்ட் 08 வெள்ளி - வரலட்சுமி விரதம்

17. ஆகஸ்ட் 09 சனி - பௌர்ணமி , ரக்ஷா பந்தன் , காயத்ரி ஜபம் , திருவோண விரதம் , ஆவணி அவிட்டம் , பௌர்ணமி விரதம்

18. ஆகஸ்ட்12 செவ்வாய் - சங்கடஹர சதுர்த்தி , சங்கடஹர சதுர்த்தி விரதம்

19. ஆகஸ்ட்14 வியாழன் - பலராம ஜெயந்தி

20. ஆகஸ்ட்15 வெள்ளி - அர்பயீன் , சுதந்திர தினம்

21. ஆகஸ்ட்16 சனி - கிருஷ்ண ஜெயந்தி , கார்த்திகை விரதம்