கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம் முகநூல்

கும்பாபிஷேக நீரின் சிறப்புகளும்.. அதனால் கிடைக்கும் நன்மைகளும்..!

கோயில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
Published on

கும்பாபிஷேகம் என்பது இந்து கோயில்களில் புதிதாக கட்டப்பட்ட கோயிலுக்கு அல்லது புதுப்பிக்கப்பட்ட கோயில்களில் செய்யப்படும் ஒரு வழிபாடு முறையாகும்.. இந்த முறை குடமுழுக்கு என்று சொல்லப்படுகிறது.. கும்பாபிஷேகம் என்ற பெயர் 'கும்பம்' மற்றும் 'அபிஷேகம்' என்ற இரண்டு வடமொழி சொற்களிலிருந்து வந்தது. சுமார் 12 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இந்த கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது..

இந்து மத நம்பிக்கைகளின் படி, 12 ஆண்டுகள் என்பது தெய்வீக காலம் ஆகும். இந்த காலத்தில், கோவிலின் தெய்வீக சக்தி அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அதனாலேயே12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.. இதனால் கோயிலின் ஆன்மீக சக்தி அதிகரிக்கம் என்று நம்பப்படுகிறது.

யாக சாலை
யாக சாலைமுகநூல்

கும்பாபிஷேக நீர் எங்கிருந்து எடுக்கப்படுகிறது

கும்பாபிஷேக நீர் புனித ஆறுகளான கங்கை, காவிரி போன்ற புனித நதிகள் மற்றும் கோயிகளில் உள்ள கிணறுகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இந்த நீரை, யாகசாலைகளில் வைத்து மந்திரங்கள் ஓதி, புனிதப்படுத்தி கலசங்களில் நிரப்பப்படுகிறது. பின்னர் கும்பாபிஷேகத்தின் போது தெய்வ சிலைகள் மற்றும் கோபுரத்தின் கலசங்கள் மீது இந்த புனித நீர் ஊற்ற பயன்படுத்தப்படுகிறது.

கும்பாபிஷேகத்தின் போது தெளிக்கப்படும் தீர்த்தம், பக்தர்களின் உடல் மற்றும் மனதிற்கு புனிதத்தை அளிப்பதாக நம்பப்படுகிறது. இந்த புனித நீரானது, பக்தர்களின் உடலில் உள்ள தீய சக்திகளை நீக்கி, புத்துணர்ச்சி அளிக்கும் என்பது ஐதீகம். மேலும் இந்த நீரை உடலில் தெளிக்கும்போது, முந்தைய ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

கும்பாபிஷேகம்
32 தீர்த்தங்கள், இசை தூண்கள் | திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் தனிச்சிறப்புகள் பற்றி தெரியுமா?

கும்பாபிஷேக நீரின் சிறப்புகள்

கும்பாபிஷேக நீர் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. கும்பாபிஷேகத்தின் போது, யாகசாலையில் உள்ள புனித நீர் கும்பத்தில் வைக்கப்பட்டு, மந்திரங்கள் சொல்லப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்வதன் மூலம் புனிதப்படுத்தப்படுகிறது. பின்னர், இந்த புனித நீர் கோயிலின் தெய்வ சிலைகள் மற்றும் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. இந்த நீரின் துளிகள் தீய சக்திகளை விலக்கி, பக்தர்களுக்கு மன அமைதியையும், உடல் ஆரோக்கியத்தையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் அளிக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக நீரின் நன்மைகள்

கும்பாபிஷேக நீர் மந்திரங்கள் மற்றும் பூஜைகளால் புனிதப்படுத்தப்படுவதால், அது தெய்வீக ஆற்றல் நிறைந்ததாக கருதப்படுகிறது. இந்த நீரை பக்தர்கள் மீது தெளிப்பதால், தீய சக்திகள் விலகி, வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கும் என்று நம்பப்படுகிறது. அத்துடன் இந்த நீரை அருந்துவதால், உடல்நலக் குறைபாடுகள் நீங்கி, ஆரோக்கியம் மேம்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த நீரை உடலில் தெளிப்பதினால் மன அமைதி கிடைக்கும் என்று கருதப்படுகிறது. கும்பாபிஷேக நீரின் புனிதத் தன்மையால், அது அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது..

கும்பாபிஷேகம்
திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா |மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் திருச்செந்தூர் முருகன் கோயில்

கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, கோயிலில் இருந்து கொண்டுவரப்படும் புனித நீர், வீடுகளில் தெளிக்கப்படும்போது, வீடு முழுவதும் தெய்வீக ஆற்றல் பரவி, மங்களகரமான சூழ்நிலை உருவாகும். இது குடும்ப உறுப்பினர்களுக்குள் ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு மன அமைதியையும், உடல் ஆரோக்கியத்தையும் அளிக்கும். இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை நீக்கி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com