திருப்பதி
திருப்பதிமுகநூல்

திருப்பதிக்கு போகணுமா? அக்டோபர் மாத தரிசன டிக்கெட்கான தேதி வெளியீடு..!

திருப்பதி கோவிலில் அக்டோபர் மாத தரிசன டிக்கெட் வருகிற 19ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது..
Published on

இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் திருப்பதி கோயிலும் ஒன்று. இங்கு தினமும் பல லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்ய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் முதலே பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.. சர்வ தரிசன வரிசையில் வரும் பக்தர்கள் ஏறக்குறைய 24 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்..

இந்நிலையில் ஏற்கெனவே திருப்பதியில் செப்டம்பர் மாத இறுதி வரை ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட்கள் அனைத்தும் விற்கப்பட்டுவிட்டன. இதில் மிக முக்கியமாக செப்டம்பர் மாதத்தில் புரட்டாசி மாதம் தொடங்கிவிடும். புரட்டாசி மாதம் பெருமாளுக்கிஉ உரிய மாதமாகும்.. அதனால் அந்த சமயத்தில் அதிகமான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை, புரட்டாசி பிரம்மோற்சவம் ஆகியவற்றிற்கான டிக்கெட் புக்கிங் மிக வேகமாக விற்று தீர்ந்துவிட்டன..

இப்படியாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட்களை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் எப்போதும் ஒவ்வொரு மாதமும் 18ஆம் தேதிதான் தரிசன டிக்கெட்களுக்கான முன்பதிவு வெளியிடப்படும்.. ஆனால் அக்டோபர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்கள் 19ஆம் தேதி (ஜூலை) வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது..

இதில் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை, எலக்ட்ரானிக் லக்கி டிப், கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீப அலங்கார சேவை, வருடாந்திர புஷ்பயாகம், விர்சுவல் சேவா டிக்கெட், அங்கப்பிரதட்சணம், ஸ்ரீவாணி டிரஸ்ட், மூத்த குடிமக்கள், மாற்று திறன் கொண்டவர்களுக்கான டிக்கெட், ரூ.300 சிறப்பு தரிசனம் என பலவிதமான தரிசன டிக்கெட்களை நமக்கு வழங்கி வருகிறது..

ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை

ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை என்பது திருமலை திருப்பதி கோயிலில் வழங்கப்படும் கட்டண சேவைகளைக் குறிக்கிறது. இந்த சேவைகளில், பக்தர்கள் தோமால சேவை, அர்ச்சனை சேவை, சுப்ரபாதம் சேவை போன்ற பூஜைகளில் பங்கேற்கலாம். இந்த சேவைகள் பொதுவாக சிறிய குழுக்களாக பிரித்து நடத்தப்படுகின்றன.

தோமால சேவை

தோமால சேவையில், பக்தர்கள் சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யும் சேவையில் பங்கேற்கலாம்.

அர்ச்சனை சேவை

அர்ச்சனை சேவையில், பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்யும் சேவையில் பங்கேற்கலாம்.

லக்கி டிப்

திருப்பதி லக்கி டிப் என்பது குறிப்பிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான அதிர்ஷ்ட குலுக்கல் முறையாகும். இந்த குலுக்கலில் பங்கேற்க, பக்தர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.லக்கி டிப் மூலம் கல்யாண உற்சவம், சுப்ரபாதம், அர்ச்சனை போன்ற சேவைகளுக்கு டிக்கெட்டுகளைப் பெறலாம்.

tirupati temple
tirupati temple File Image
திருப்பதி
"திருப்பதி | திருமலை வான்வழியில் விமானம் பறக்கத் தடைசெய்ய வேண்டும்" - கோரிக்கையின் பின்னணி இதுதான்!

சுப்ரபாதம் சேவை

சுப்ரபாதம் சேவையில், பக்தர்கள் அதிகாலையில் சுவாமியை எழுப்பும் சேவையில் பங்கேற்கலாம்.

கல்யாண உற்சவம்

கல்யாண உற்சவம் சேவையில், பக்தர்கள் சுவாமி கல்யாண உற்சவத்தில் பங்கேற்கலாம்.

ஊஞ்சல் சேவை

ஊஞ்சல் சேவையில், பக்தர்கள் சுவாமி ஊஞ்சல் உற்சவத்தில் பங்கேற்கலாம்.

பிரம்மோற்சவம்

பிரம்மோற்சவம் சேவையில், பக்தர்கள் சுவாமி பிரம்மோற்சவத்தில் பங்கேற்கலாம்.

சஹஸ்ர தீப அலங்கார சேவை

இந்த சேவையில், பக்தர்கள் ஆயிரம் விளக்குகளால் சுவாமியை அலங்கரிக்கும் சேவையில் பங்கேற்கலாம்..

ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்படும் தேதியும் நேரமும்

tirupati
tirupatiFB

இந்நிலையில் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை ஜூலை 19ஆம் தேதி காலை 10 மணிக்கும், லக்கி டிப் சேவை ஜூலை 21ஆம் தேதி காலை 10 மணிக்கும். தேர்வு செய்யப்பட்டவர்கள் ஜூலை 21ஆம் தேதி முதல் ஜூலை 23ஆம் தேதி பகல் 12 மணிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீப அலங்கார சேவை, வருடாந்திர புஷ்பயாகம் ஆகியவற்றிற்கான டிக்கெட் ஜூலை 22ஆம் தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்படுகிறது..

அன்றே, விர்சுவல் சேவா டிக்கெட் புக்கிங் ஜூலை 22ஆம் தேதி பகல் 3 மணிக்கும், அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ஜூலை 23ஆம் தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட் ஜூலை 23ஆம் தேதி காலை 11 மணிக்கும், மூத்த குடிமக்கள், மாற்று திறன் கொண்டவர்களுக்கான டிக்கெட் புக்கிங் ஜூலை 23ஆம் தேதி பகல் 3 மணிக்கும். ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஜூலை 23ஆம் தேதி காலை 10 மணிக்கும் வெளியிடபப்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

திருப்பதி
திருப்பதிக்கு போக பிளான் இருக்கா? அப்போ கண்டிப்பாக இதை தெரிஞ்சுக்கோங்க..!

அத்துடன் திருப்பதியில் அக்டோபர் மாதம் தங்குவதற்கான அறைகளுக்கான முன்பதிவு ஜூலை 24ஆம் தேதி பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது என தேவஸ்தானம் தனது அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

திருப்பதி
திருப்பதி | ஏழுமலையான் கோயிலின் உண்டியல் காணிக்கை இரண்டு மடங்கு உயர்வு!

திருப்பதி தாவஸ்தானத்தின் இணையதள முகவரி

ttdevasthanams.ap.gov.in என்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com