முளைகட்டிய பயிரை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? முகநூல்
ஹெல்த்

முளைகட்டிய பயிர் | எப்படி சாப்பிடலாம்..?

இந்த முளைக்கட்டிய பயிர் வகைகளை பச்சையாக சாப்பிட வேண்டுமா? அல்லது வேகவைத்து சாப்பிட வேண்டுமா? என்ற ஒரு பொதுவான கேள்வி நன் அனைவரிடையே எழுகிறது..

Vaijayanthi S

பச்சையான மற்றும் வேகவைத்த முளைகட்டிய பயிர்கள், இவை இரண்டுமே ஒரு சீரான உணவில் நன்மை பயக்கும். இவற்றில் எது உங்கள் உடல்நலத் தேவைகளுக்கும் தற்போதைய நிலைக்கும் சிறப்பாகப் பொருந்துகிறது என்று ஆராய்ந்த பிறகு எடுத்துக் கொள்வதே நல்லது...

மழைக்காலங்களில், நாம் என்ன சாப்பிடுகிறோம், என்ன குடிக்கிறோம் என்பதில் கூடுதல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.. அதிலும் காலை உணவை ஆரோக்கியமாக எடுத்துக் கொள்வது மிக முக்கியம்.. அதில் முளைக்கட்டிய பயிர் வகைகளை காலையிலேயே உட்கொள்வது என்பது அன்றைய நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் புத்துணர்வாகவும் உணர வைக்கும்.. இருப்பினும், இந்த முளைக்கட்டிய பயிர் வகைகளை பச்சையாக சாப்பிட வேண்டுமா? அல்லது வேகவைத்து சாப்பிட வேண்டுமா? என்ற ஒரு பொதுவான கேள்வி எழுகிறது..

முளைகட்டிய பயிரை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

பச்சை முளைகட்டிய பயிர்களில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கும்.. ஆனால் அவை பாக்டீரியாவின் அபாயத்தை அதிகமாக கொண்டுள்ளன. மறுபுறம், வேகவைத்த முளைகட்டிய பயிர்கள் வயிற்றுக்கு மென்மையாக இருக்கும். அவை சாப்பிட பாதுகாப்பானவை. சரி, இவற்றில் எதை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.. என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

வேகவைத்த முளைகட்டிய பயிர்கள் பாதுகாப்பானது மற்றும் ஜீரணிக்க எளிதானது

முளைகட்டிய பயிரை வேகவைத்து சமைக்கும் முறை காலம்காலமாக இருந்து வருகிறது.. குறிப்பாக பருவமழைக் காலத்தில் செரிமானம் பலவீனமாக இருக்கும் போது, அவற்றை லேசாக வேகவைத்து சாப்பிட்டால் நல்லது.. அவை சாப்பிடுவதற்கு குறிப்பாக குழந்தைகளுக்கு சாப்பிட மென்மையாகவும் ஈஸியாகவும் இருக்கும்.. இதனால் அவை மென்று சாப்பிடவும் ஜீரணிக்கவும் எளிதாகிறது.

வேகவைத்த முளைகட்டிய பயிர்கள்

வேகவைப்பதன் ஒரு முக்கிய நன்மை என்னவென்றால், முளைகளை முளைக்கப் பயன்படும் சூடான, ஈரப்பதமான சூழ்நிலையில் செழித்து வளரும் ஈ.கோலி மற்றும் சால்மோனெல்லா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை இது நீக்குகிறது. சுமார் 160°F (70°C) வெப்பநிலையில் வேகவைப்பது உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது.

ஆனால் வேகவைக்கும்போது சில ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படலாம் என்றாலும், இந்த செயல்முறை ஊட்டச்சத்து உயிர் கிடைக்கும் தன்மையை மேம்படுத்தி, உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொடுக்கிறது.. அத்துடன் இந்த வேகவைத்த முளைகட்டிய பயிர்கள் அதிக சத்தானதாக இருக்கும்.. இவற்றை நாம் செய்யும் சூப்கள், பொரியல், கறிகள் அல்லது சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம்.. அவை கூடுதல் ருசியாகவும் இருக்கும்..

பச்சை முளைகட்டிய பயிர்கள் ஊட்டச்சத்து நிறைந்தது ஆனால் சற்று ஆபத்தானது

இந்த வேக வைக்காத பச்சையான முளைகட்டிய பயிர்கள் சாப்பிடுவதற்கு மொறுமொறுப்பாக இருக்கும்.. அதன் சுவையும் எல்லோராலும் விரும்பப்படுவதாக இருக்கும்.. அவை செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கும் உயிருள்ள நொதிகளால் நிரம்பியுள்ளன.. மேலும் வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை இவற்றில் நிறைந்துள்ளன. குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இவை, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு மிகவும் நல்லது..

முளைகட்டிய பயிரை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

இருப்பினும், இந்த பச்சை முளைகட்டிய பயிர்கள் அதன் ஈரப்பதமான சூழல் காரணமாக ஆபத்தான பாக்டீரியாக்களை இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் அமைகிறது.அதனால் பச்சை முளைகளை சாப்பிடுவது உணவு விஷத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது, குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் அல்லது பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இது ஏற்றடு அல்ல.. நன்கு கழுவினாலும் கூட அனைத்து சாத்தியமான நோய்க்கிருமிகளையும் அகற்ற முடியாது.

எதை சாப்பிடுவது ஆரோக்கியமானது?

இறுதியில், உங்கள் செரிமான ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து சாப்பிடுவது நல்லது என்கின்றனர் சுகாதார வல்லுநர்கள்.. நீங்கள் பொதுவாக செரிமான பிரச்சினைகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால், பச்சையான முளைகள் அதிக உயிருள்ள நொதிகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை சாப்பிடலாம். இருப்பினும், நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க விரும்பினால், குறிப்பாக மழைக்காலங்களில், வேகவைத்த முளைகட்டிய பயிர்களை சாப்பிடுவதுதான் பாதுகாப்பானதாக இருக்கும்.

முளைகட்டிய பயிரை எப்படி சாப்பிட வேண்டும்

பச்சையான மற்றும் வேகவைத்த முளைகட்டிய பயிர்கள், இவை இரண்டுமே ஒரு சீரான உணவில் நன்மை பயக்கும். இவற்றில் எது உங்கள் உடல்நலத் தேவைகளுக்கும் தற்போதைய நிலைக்கும் சிறப்பாகப் பொருந்துகிறது என்று ஆராய்ந்த பிறகு எடுத்துக் கொள்வதே நல்லது...