Vaijayanthi S
தொப்பையை குறைக்க வேண்டும். இதுதான் தற்போது பலரின் முயற்சியாக இருக்கிறது. அதற்கு வீட்டு வைத்தியமாக சீரக தண்ணீர் அல்லது பெருஞ்சீரக தண்ணீரை குடிப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால் இதில் எந்த நீர் தொப்பையை குறைக்கும்? தெரிஞ்சிக்கலாமா? வாங்க...
சீரக விதைகளில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளதால் செரிமானத்திற்கு உதவுகின்றன. சீரக நீரை குடிப்பதால் உடலில் கலோரிகளை எரிக்கும் திறனை துரிதப்படுத்துவதோடு, கொழுப்பு சேர்வதை தடுக்கும். வயிற்று உப்புசத்தையும் குறைக்க உதவுவதோடு உடல் எடையும் குறையும்.
பெருஞ்சீரக விதைகள் உடலை குளிர்விக்கும் தன்மையுடையது. இவற்றில், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும். செரிமானத்திற்கு உதவுவதோடு பசியை அடக்கும் மருந்தாக செயல்படுவதால் அதிகம் சாப்பிட தோன்றாது.
சீரக தண்ணீர் நமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மெட்டபாலிஸத்தையும் அதிகப்படுத்துகிறது என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இதன் காரணமாகவே நமது உடலில் கொழுப்பு சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது சீரக தண்ணீர். இது அதிசிய பானம் இல்லை என்றாலும் ஒருவரின் உடல் எடையை குறைக்க ஓரளவிற்கு உதவி செய்யும் பானமாகும்.
தொப்பையை குறைக்க வேண்டும் என்றால் சீரக நீர் சிறந்த பலனை தரக்கூடும். அதேநேரம், செரிமான பிரச்னைக்கு தீர்வு காண பெருஞ்சீரக நீரை அருந்தலாம். விரைவான மற்றும் ஆரோக்கியமான எடை இழப்புக்கு இரண்டையும் மாறி மாறி எடுத்துக்கொள்ளலாம்.