வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் விரைவாக சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தின் மூலம் 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்தாகும் அபாய நிலை உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பிரச்சினை என்றால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். 69 சதவீத இட ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைக்கப்பட்டால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமனைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
தொடர்பு இருக்கிறது. நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு வரும்போது, பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்கள் தமிழ்நாட்டில் 69%க்கும் அதிகமாக உள்ளார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் 69%க்கும் அதிகமாகவே மேற்கண்ட மக்கள் இருக்கிறார்கள். அதிலென்ன சந்தேகம் இருக்கிறது.
69% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடர்பவர்களும், தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கான அவசியமில்லை என்பதை நிரூபிக்கத் தரவுகளை சமர்பிக்க வேண்டும்தானே. ஆனால், EWSக்கு எந்த தரவுகளை சமர்பித்தார்கள். எல்லாம் அரசியல் ரீதியான முடிவுதான்.
நிச்சயமாக சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. மக்கள் நலத்திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டுமென்றால், தரவுகள் இன்றி எப்படி செயல்படுத்த முடியும்? எனவே, கணக்கெடுப்பு என்பது தேவை.
EWSக்கு எந்த தரவுகளை சமர்பித்தார்கள். எல்லாம் அரசியல் ரீதியான முடிவுதான்.
நான் அன்புமணி ராமதாஸ் சொல்வதை தவறென்று சொல்லவில்லை, அதை எதிர்க்கவும் இல்லை. ஆனால், அதற்குள் அரசியல் இருக்கிறது. 69%க்குள் 10.5% இடஒதுக்கீடு குறித்த எண்ணம் அன்புமணிக்கு இருக்கிறது என்பது என் கருத்து. 10.5% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் சென்றபோது, ‘வன்னியர்கள் 10.5% மக்கள் இருக்கிறார்கள்’ என்பதற்கான சான்று எங்கே என நீதிமன்றத்தில் கேட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட 10.5% இடஒதுக்கீட்டை நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு ரத்து செய்தபோது, நீதிபதி துரைசாமியும், தரவுகள் எங்கே எனக் கேட்டிருந்தார். எனவே, அன்புமணி அனைத்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் இதில் உள்ளே அழைத்து வர நினைக்கிறார்.
69%க்குள் 10.5% இடஒதுக்கீடு குறித்த எண்ணம் அன்புமணிக்கு இருக்கிறது என்பது என் கருத்து. 10.5% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் சென்றபோது, ‘வன்னியர்கள் 10.5% மக்கள் இருக்கிறார்கள்’ என்பதற்கான சான்று எங்கே என நீதிமன்றத்தில் கேட்டனர்.
2021 தேர்தலுக்கு முன் அதிமுக ஏன் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எடுக்கவில்லை. 2021க்கு முன் ஏன் அன்புமணி இதைச் சொல்லவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், யார் கணக்கெடுப்பை மேற்கொள்வது என்பதில்தான் இருவேறுபட்ட கருத்துகள் நிலவுகிறது. மாநில அரசு எடுக்க வேண்டுமென ஒரு தரப்பு சொன்னால், மத்திய அரசால்தான் எடுக்க முடியும் என மறுதரப்பு சொல்கிறது.
பலமாநிலங்களில் இந்த விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் மாநில அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்கலாம். அது censusல் வராது, caste survey எனும் பொருளில் வரும். ஆனால், இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான். பிகார் கூட சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தினார்களே.
திமுக கூட ஒரு கட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பினை எடுக்க வேண்டுமென்ற முடிவுக்கு வரலாம். காங்கிரஸ் அரசாங்கம் போலவோ அல்லது பாஜக அரசாங்கம் போலவோ தமிழ்நாட்டு அரசுகளுக்கு சாதிவாரி கணக்கெடுப்பினை நடத்துவதில் மிகப்பெரிய ஆட்சேபனைகள் ஏதும் இருக்காது. ஆனால், தனி இடஒதுக்கீடுகள் என்று வரும்பட்சத்தில் சிறு சிக்கல்கள் வருமே என்பதற்காக யோசிக்கலாம். முடிந்தவரை தள்ளிப்போட நினைக்கிறார்கள்.
திமுக கூட ஒரு கட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பினை எடுக்க வேண்டுமென்ற முடிவுக்கு வரலாம்... முடிந்தவரை தள்ளிப்போட நினைக்கிறார்கள்.
ஏற்கனவே, பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது. இப்போதைக்கு அந்த வழக்குகளில் கைவைக்க மாட்டார்கள். ஏனென்றால், அது நெருப்பு மாதிரி, 69% இடஒதுக்கீட்டை திடீரென குறைத்தால் என்னவாகும் என யோசித்துப் பாருங்கள். இந்த விஷயத்தில் அன்புமணி சொல்வது உண்மை. 10.5% என்பதுகூட குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சார்ந்தது. 69% என்பது தமிழ்நாடு முழுமைக்குமான பிரச்னை.
இந்த வழக்கு 20 வருடங்களுக்கும்மேல் நிலுவையில் உள்ளது. திடீரென்று உச்சநீதிமன்றம் 69% இடஒதுக்கீட்டு தொடர்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பைக் கோரினால், தரவுகளை வழங்குவதற்கு நாம் காலஅவகாசம் கேட்டுக்கொள்ளலாம்.
இந்த விஷயத்தில் அன்புமணி சொல்வது உண்மை. 10.5% என்பதுகூட குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சார்ந்தது. 69% என்பது தமிழ்நாடு முழுமைக்குமான பிரச்னை.
அரசியலமைப்பு சட்டத்தில் ஒன்றிய அரசுக்கானப் பட்டியலில் (லிஸ்ட் 1) மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் கீழ் வருகிறது; மாநில அரசும் எடுக்கலாம். ஆனால், அதற்குப் பெயர் சென்சஸ் அல்ல கேஸ்ட் சர்வே என்கிறார்கள். இதனடிப்படையில்தான், பிகாரிலும், கர்நாடகத்திலும் எடுத்தார்கள். இரண்டிற்கும் சிறு வேறுபாடுகள் இருக்கலாம். அடிப்படையில் ஒன்றுதான்.