டிசி சூப்பர் ஹீரோஸை மையமாக வைத்து உருவாகியுள்ள சீரிஸ் Lanterns. சூப்பர் ஹீரோ க்ரீன் லேன்டர்ன் சந்திக்கும் பிரச்னையும், தீர்வும் தான் கதை. முதல் எபிசோட் இந்த வாரமும் பின்னர் ஒவ்வொரு வெள்ளியும் ஒரு எபிசோட் என வெளியாக இருக்கிறது.
இளன் இயக்கி நடித்துள்ள படம் `ப்யார் பிரேமா கல்யாணம்'. இன்ஸ்ட்டா பிரபலமான பவி, திருமணத்துக்கு பின் கணவருடன் தன் தாய் வீட்டிலேயே தான் இருப்பேன் என கண்டிஷன் போட, அதன் பின் நடக்கும் கலாட்டாக்களே கதை.
ஸ்ரீகாந்த், லயா நடித்த படம் `Mister Middle Class'. மிடில் க்ளாஸ் குடும்ப தலைவர் எதிர்கொள்ளும் சவால்கள், அதன் மூலம் வாழ்க்கை மீது ஏற்படும் புரிதல்களே கதை.
விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கிய படம் `ஜனநாயகன்'. மகளையும், மக்களையும் காக்க போராடும் ஹீரோவின் கதை.
கிரண், கௌரி ப்ரியா நடித்த படம் `Chennai Love Story'. தங்களின் முதல் காதல் அனுபவத்தை பெரும் ஒரு ஜோடியின் கதை.
அஜய் பூபதி இயக்கிய படம் `Srinivasa Mangapuram'. வாசு - மங்கா காதலில் வரும் சிக்கல்களே படம்.
Aleshea Harris இயக்கிய படம் `Is God Is'. இரண்டு சகோதரிகளின் பழிவாங்கும் படலமே கதை.
பிரித்விராஜ் நடித்துள்ள படம் `Khalifa'. தங்க கடத்தலில் ஏற்படும் மோதல்களே கதைக்களம்.
ரிஷிகாந்த், அனிஷ்மா நடித்துள்ள படம் `மொத ராத்திரி'. விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்ளும் ஒரு ஜோடியின் திருமணத்தில் என்ன பிரச்சனைகள் வருகிறது என்பதே கதை.
ரியோ ராஜ் நடித்துள்ள படம் `ராம் & லீலா'. காதல் ஜோடியான ராம் - லீலாவின் காதல் மற்றும் திருமணத்தில் வரும் வினோத சிக்கல்களே கதை.
சங்ககிரி ராஜ்குமாரே சினிமாவின் எல்லா பணிகளையும் செய்து உருவாக்கியுள்ள படம் `One Man'. ஐந்து நண்பர்கள் இணைந்து செல்லும் ஒரு அட்வென்ச்சர் பயணமே கதை.
ஜேம்ஸ் வசந்தன் இயக்கியுள்ள படம் `சோளக் கொள்ளை பொம்மை'. சிறுவர்கள் சில செய்யும் ஒரு தைரியமான விஷயத்தை பேசும் படம்.
பொன் ஷங்கர் இயக்கியுள்ள படம் `ஃப்ளாக்'. ஒரு சிறுவனை மையப்படுத்திய கதை.
ரவிதேஜா, ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள படம் `Irumudi'. பெண் குழந்தைகளுக்காக போராடும் ஒரு தந்தையின் கதை.
நிவின் பாலி, மமிதா பைஜூ நடித்துள்ள படம் `Bethlehem Kudumba Unit'. முதல் காதலின் நினைவுகளில் தவிக்கும் ஆஷ்லிக்கு திருமண ஏற்பாடாகிறது. அதன் பின் என்ன என்பதே கதை.
ஜேசன் ஸ்டாதம் நடித்துள்ள படம் `Mutiny'. தன்னுடைய முதலாளியை கொலை செய்தவர்களை பழிவாங்கும் பாடிகார்டின் கதை.
சல்மான் கான், சஞ்சய் தத் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள படம் `7 Dogs'. சட்டவிரோத கும்பல்களுக்கு மத்தியில் நடக்கும் யுத்தமே கதை.
Will Gluck இயக்கியுள்ள படம் `One Night Only'. தனக்கான துணையை தேடும் இருவரின் ஊர் இரவே கதை.