\
Sai Abyankkar
Sai AbyankkarSai Abyankkar

கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைக்க வேண்டும்! - சாய் அபயங்கர் | Sai Abhyakkar

யாரோ ஒருவர் Al வீடியோவில் கிறிஸ்டோபர் நோலன் என் இசையைப் பாராட்டுவது போல் உருவாக்கியிருந்தார்கள் அதைப் பார்த்தபோது மிகவும் உற்சாகமாக இருந்தது.
Published on
Summary

சினிமா மற்றும் இன்டி இசையில் தன் தனித்துவத்தை நிரூபித்து வரும் சாய் அபயங்கர், தனுஷ் நடிக்கும் ‘ஓம்’, அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’, கார்த்தியின் ‘மார்ஷல்’, சூர்யாவின் 48வது படம் உள்ளிட்ட பல திட்டங்களில் பிஸியாக உள்ளார். அட்லீ படத்துக்கு இசையமைக்கும் நிலையில், தனது மிகப்பெரிய இலக்கு கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைப்பதே என அவர் கூறி, அதற்காக தொடர்ந்து உழைப்பேன் என உறுதியளித்தார்.

சினிமா இசை மற்றும் இன்டி இசை இரண்டிலும் அசத்தி வருபவர் சாய் அபயங்கர். அடுத்தாக தனுஷ் நடிக்கும் ஓம், அல்லு அர்ஜுனின் `ராக்கா', கார்த்தியின் மார்ஷல், சூர்யாவின் 48வது படம் என பல படங்களில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் கலந்து கொண்ட ஒரு உரையாடலின் போது யாருடைய படத்தில் பணியாற்ற ஆசை என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் சொன்ன சாய் "2024ல் என் முதல் பாடல் வெளியான போது நான் இதனை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டேன், இப்போது கூட நான் அட்லீ சார் படத்துக்கு இசையமைக்கிறேன் என்பதை நம்பமுடியவில்லை. இப்போது நான் `ராக்கா'வில் பணியாற்றுகிறேன். இதை போல தொடர்ச்சியாக பணியாற்ற ஆசை. மேலும் எனக்கு கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசை அமைக்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய லட்சியம். யாரோ ஒருவர் Al வீடியோவில் கிறிஸ்டோபர் நோலன் என் இசையைப் பாராட்டுவது போல் உருவாக்கியிருந்தார்கள் அதைப் பார்த்தபோது மிகவும் உற்சாகமாக இருந்தது. அந்த வீடியோவில் நடப்பது போல் நிஜத்திலும் ஒருநாள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன்." என்றார்.

Sai
Sai
Sai Abyankkar
வெற்றி என்பது டிக்கெட் விற்பனையாகும் எண்ணிக்கையில் இல்லை! - சூர்யா | Suriya | Vishwanath and Sons

மேலும் விஜய் படத்தில் பணியாற்ற முடியாமல் போனது பற்றி கேட்கப்பட "விஜய் சார் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய கனவு. அவருடன் பணியாற்றும் வாய்ப்பு இனி கிடைக்காது என நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. என் வாழ்க்கையில் நான் தவறவிடப்போகும் மிகப்பெரிய வாய்ப்பு இது. ஒருவேளை அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால், 16 பாடல்கள் கொண்ட ஆல்பத்தை அவருக்காக உருவாக்கியிருப்பேன்" என்றார்.

Sai Abyankkar
வசூலில் மிரட்டும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்'.. 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல்!
Sai Abyankkar
தடுத்து நிறுத்த முடியாத ’ஜனநாயகன்’.. 4 நாட்களில் 200 கோடி வசூலை கடந்து சாதனை! உலகளவில் 7வது இடம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com