\
Niu Lai
Niu LaiNiu Lai

TROLLS மூலம் மெகா ஹிட்டான படம்! | Niu Lai

இந்தப் படத்துக்கு Sun Lifang என்பவர் கதை எழுத, அவரது மகன் Xin Yumeng இயக்கி இருக்கிறார். அனிமேஷன் 3D படமான இதனை 5 வருடமாக உருவாக்கி இருக்கிறது இந்த அம்மா மகன் கூட்டணி.
Published on
Summary

சீனாவில் வெளியான 3D அனிமேஷன் படம் ‘Niu Lai’ ஆரம்பத்தில் தரமில்லாத காட்சிகள், குறைந்த பட்ஜெட், சரியான ட்ரெய்லர், போஸ்டர் இல்லாமை காரணமாக யாரும் கவனிக்காத படமாக இருந்தது. ஆனால் சமூக வலைதளங்களில் பரவிய ட்ரோல்கள், கேலி விமர்சனங்கள் காரணமாக மக்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு திரண்டதால், 1,600 யுவான் செலவில் தயாரான இந்த படம் 23.53 மில்லியன் யுவான் வசூல் செய்து மெகா ஹிட்டானது.

ஒரு மோசமான படம் வெளியானால் அந்தப் படம் குறித்த ட்ரோல் வருவதும், வசூல் இல்லாமல் தோல்வி அடைவதும் நாம் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் ஒரு மோசமான படம் மிகப்பெரிய ஹிட் ஆகி, வசூலை அள்ளுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் இப்போது சைனாவில் நடந்திருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் Niu Lai. Niu Lai ஒரு இளம் கன்று குட்டி. அதன் அட்வென்சர் பயணமே படத்தின் கதை. இந்தப் படத்துக்கு Sun Lifang என்பவர் கதை எழுத, அவரது மகன் Xin Yumeng இயக்கி இருக்கிறார். அனிமேஷன் 3D படமான இதனை 5 வருடமாக உருவாக்கி இருக்கிறது இந்த அம்மா மகன் கூட்டணி. ஆனாலும் அவர்களுக்கு கிடைத்த வசதிகளை வைத்துக் கொண்டு, இந்தப் படத்தை உருவாக்கியதால், தரமான படைப்பாக இதனை அவர்களால் உருவாக்க முடியவில்லை. எனவே இப்படம் தியேட்டரில் வெளியான போது, இதெல்லாம் ஒரு அனிமேஷனா? AIயில் கொடுத்தாலே சிறப்பான அவுட்புட் வருமே என பலரும் கேலி செய்திருக்கிறார்கள்.

Niu Lai
கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைக்க வேண்டும்! - சாய் அபயங்கர் | Sai Abhyakkar

இப்படியான கிண்டல் பேச்சுக்கள் எப்போதும் படத்துக்கு எதிர்விதமாக தான் முடியும். ஆனால் Niu Lai படத்துக்கு அதுவே பெரிய ப்ளஸ் ஆக மாறி இருக்கிறது. என்ன எல்லோரும் இப்படி கலாய்க்கிறார்கள் என அந்தப் படத்தை பார்க்க எல்லோரும் தியேட்டருக்கு படை எடுத்து இருக்கிறார்கள். சிலர் நண்பர்களாக இணைந்து இந்தப் படத்தை கலாய்த்துக் கொண்டே பார்த்து என்ஜாய் செய்யவும் சென்றிருக்கிறார்கள். இதன் மூலம் பெரிய கவனம் பெற்றிருக்கிறது படம். ஆகஸ்ட் 5ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இந்தப் படத்தின் முதல் பத்து நாட்களில் இப்படத்தை பார்க்க 300 நபர்கள் கூட பார்க்க வரவில்லை. ஆனால் இந்த கேலி கிண்டலால், அதற்கடுத்த நாட்களில் மிகப்பெரிய எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடி இருக்கிறார்கள்.

சரியான விளம்பரம் இல்லை, சரியான ட்ரெய்லர், சரியான போஸ்டர் கூட இல்லாத ஒரு படம். அதுவும் வெறும் 1,600 yuan (இந்திய மதிப்பில் சுமார் 22 ஆயிரம்) பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் இப்போது வரை 23.53 million yuan அதாவது இந்திய மதிப்பில் 33 கோடி வசூல் செய்திருக்கிறதாம். ஒரு பக்கம் இந்தப் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பு போலவே, இதுமாதிரியான தரமில்லாத படைப்புகளை கொண்டாடுவது, சரி அல்ல என விமர்சிக்கும் நபர்களும் ஒரு பக்கம் குரல் எழுப்பி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com