Manjummel Boys
Manjummel Boys X
சினிமா

OTT தளத்தில் விலைப்போகாத “Manjummel Boys”! திரையில் வசூலை வாரிகுவித்த படத்திற்கு இவ்வளவுதான் விலையா?

Rishan Vengai

கடந்த சில வருடங்களாகவே திரைக்கு இழுத்துச்செல்லக்கூடிய மிகப்பெரிய ஹிட் படங்களை பார்க்காத தமிழக மக்கள், தங்களுடைய உணர்வோடு பிணைக்கும்படியான கதைக்களம் மற்றும் டைரக்டரின் ஐடியாலஜியால் ஈர்க்கப்பட்டு “Manjummel Boys” என்ற திரைப்படத்தை பார்க்க தியேட்டரில் குவிந்தனர். மலையாள திரைப்படமான இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் சக்கப்போடு போட்டது.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற குணா குகை மற்றும் கண்மணி அன்போடு காதலன் பாடல் இரண்டாலும் அதிகப்படியாக வைப்ஆன தமிழக ரசிகர்கள், படம் வெளியாகி 3 வாரத்தை எட்டியிருக்கும் நிலையில் அதிகமாக பேசிவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் “Manjummel Boys” திரைப்படத்தால் குணாகுகை மீது ஆர்வம் எகிறிய நிலையில், கொடைக்கானலில் உள்ள குணாகுகைக்கே நேரடியாக சென்ற ரசிகர்கள் கண்மணி அன்போடு பாடலை பாடி வைப் செய்துவருகின்றனர். அந்த வீடியோ சமீபத்தில் வெளியாகி சமூகவலைதளங்களில் டிரெண்டானது.

இப்படி பெரியதிரையில் வெளியாகி அதிகப்படியான ரசிகர்களின் விருப்பமான திரைப்படமாக மாறியிருக்கும் “Manjummel Boys” படத்தை, OTT தளத்தில் வாங்க யாரும் பெரிதளவில் முன்வரவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. யாரும் முன்வராத நிலையில் தயாரிப்பாளர்கள் கேட்ட பணம் கூட இல்லாமல், குறைந்த விலைக்கே வாங்க முன்வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

100 கோடி திரை வசூல்.. 10 கோடிக்கு கூட வாங்க மறுக்கும் OTT தளங்கள்!

கொடைக்கானலில் உள்ள குணா குகையில் 2006ம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான "மஞ்ஞுமல் பாய்ஸ்" (Manjummel Boys) திரைப்படம், திரையில் வெளியான இரண்டே வாரங்களில் 100 கோடி வசூலை ஈட்டி மிகப்பெரிய சாதனை படைத்தது. மலையாள திரைத்துறையில் 2016ல் வெளியான ‘புலி முருகன்’, 2019-ல் வெளியான லுசிஃபர் மற்றும் 2023-ல் வெளியான ‘2018’ முதலிய திரைப்படங்களுக்கு பிறகு, 100 கோடி வசூலை ஈட்டிய 4வது மலையாள திரைப்படம் என்ற சாதனையை மஞ்ஞுமல் பாய்ஸ் படைத்து அசத்தியுள்ளது.

அத்துடன், இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதால் ரூ.150 கோடியை எட்டுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வரை புலி முருகனின் வசூலினை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. முதலிடத்தில் 175 கோடி ரூபாயுடன் 2018 படம் உள்ளது.

Manjummel Boys

இப்படி ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படமாக உருமாறியிருந்தாலும் OTT தளங்களில் குறைந்த விலைக்கே கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவலின் படி, “மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக மாறியிருக்கும் மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தை வாங்குவதற்கு OTT தளங்கள் பெரிய ஆர்வம் காட்டவில்லை. தயாரிப்பாளர்கள் 20 கோடிக்கு விற்பனை செய்ய முன்வரும் நிலையில், வெறும் 10.5 கோடிக்கு மட்டுமே அதிகபட்ச விலைக்கு வாங்க முன்வந்துள்ளனர். இது மிகவும் குறைவான தொகை என்று தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்” என்ற தகவல் வெளியாகியுள்ளது.

திரையில் வெளியாகி மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டாக மாறும் திரைப்படங்கள், தியேட்டரை விட்டு 2 அல்லது 3 மாதங்களுக்கு பிறகு தான் OTT தளங்களுக்கு வருவதால் அதற்கு அதிகவிலை கொடுத்து வாங்குவதில் லாபமில்லை என்று டிஜிட்டல் தளங்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ் படத்தையே ஓவர் டேக் செய்த ’மஞ்ஞுமல் பாய்ஸ்’

தமிழ்நாட்டில் மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் ரூ.36 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் வெளியான படங்களில் இரண்டாவது இடம். அதாவது, தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தின் வசூலினையே ஓவர் டேக் செய்துள்ளது. முதலிடத்தில் அயலான் நீடித்து வருகிறது.