‘சக்சஸ் ஃபார்முலா’.. விஜய்யின் G.O.A.T படம் குறித்து புதிய அப்டேட் சொன்ன இயக்குநர் வெங்கட் பிரபு

நடிகர் விஜயின் கடைசி படத்திற்கு முந்தைய படமான G.O.A.T (கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படத்தின் புதிய அப்டேட்டை இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
G.O.A.T திரைப்படம்
G.O.A.T திரைப்படம்PT

நடிகர் வெங்கட் பிரபுவின் சினிமா மேக்கிங் ஸ்டைலை அதிகம் விரும்பக்கூடியவர் நடிகர் விஜய். பஞ்ச் டயலாக் பேசுறது, பாஞ்சி பாஞ்சி சண்டை போடுறது எல்லாம் விட்டுட்டு ஜாலியா ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எப்போதும் விஜய்க்கு உண்டு. அதனால் தான் மங்காத்தா திரைப்படம் வெளியான போது கூட, வெங்கட் பிரபுவுக்கு ஃபோன் செய்த விஜய் அர்ஜூன் நடித்த கதாபாத்திரத்தில் நானே நடிச்சிருப்பேனே என்று கூறியதாக இயக்குநரே வெளிப்படுத்தியிருந்தார்.

அதேபோல டைம் லூப் கான்சப்டில் வெங்கட் பிரபு மற்றும் சிம்பு காம்பினேஷனில் வெளியான மாநாடு திரைப்படத்தின் போது கூட வெங்கட் பிரபுவை அழைத்து விஜய் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் தான் கடைசியாக விஜய் அரசியல் களத்தில் முழுமையாக இறங்குவதற்குள் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் விஜயின் காம்போவில் ஒரு படம் அமைந்து படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. படத்தின் பெயர் அப்டேட், ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் என இரண்டையும் தரமாக கொடுத்திருந்த வெங்கட் பிரபு தல அஜித்குமாருடன் கொடுத்த ஒரு பெரிய ஹிட்டை போல், தளபதி விஜய்க்கும் தயார் செய்துவருகிறார்.

G.O.A.T திரைப்படம்
‘தலை சுத்துது நிறுத்துமா’ - பிராக் லெஸ்னர் போல் சாஹலை தூக்கி சுற்றிய மல்யுத்த வீராங்கனை! #ViralVideo

G.O.A.T படம் குறித்து புதிய அப்டேட் சொன்ன வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபுவுடன் துணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் மாரியின் இயக்கத்தில், பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ’ஜே பேபி’ திரைப்படத்தில் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வெங்கட் பிரபு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது பேசிய வெங்கட் பிரபுவிடம் விஜயின் G.O.A.T படம் குறித்த அப்டேட் கேட்கப்பட்டது.

G.O.A.T திரைப்படம்
G.O.A.T திரைப்படம்

அப்போது அதற்கு பதிலளித்து பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாதத்துடன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் நிறைவடையும். அதன் பிறகு ஒரு வெளிநாட்டு ஷெட்யூல் மட்டும் உள்ளது. அதோடு படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும். படத்தில் நிறைய சிஜி பணிகள் உள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸில் அதன் வேலைகள் நடைபெற்று வருகிறது. அவை எல்லாம் நிறைவடைவதை வைத்துதான், படத்தின் அடுத்த அப்டேட்டையோ அல்லது பட வெளியீட்டையோ திட்டமிட முடியும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள், சரியான நேரத்தில் அப்டேட் வரும்” என்று கூறினார்.

மேலும் படம் நடிப்பதிலிருந்து விஜய் விலகுவது குறித்து பேசிய வெங்கட் பிரபு, “ஒரு ரசிகனாக விஜய் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. இதை நான் அவரிடமே கூறியுள்ளேன். படத்தில் நிறைய பாடல்கள் உள்ளன, என்ஜாய் பண்ணலாம். முதல் சிங்கிள் மே மாதம் ரெடியாகிடும், படம் ரீமேக்கெல்லாம் இல்லை, ஒரு புதிய ஐடியா அவ்வளவுதான். படம் பண்டிகை நாட்களில் வெளியாகும்” என்று பேசினார்.

G.O.A.T திரைப்படம்
“டேய் ஷர்துல் மாடே அடிச்சது போதும் டா”.. TN-க்கு எதிராக சதமடித்த தாக்கூர்! திட்டி பதிவிட்ட அஸ்வின்!

வெங்கட் பிரபுவின் சக்சஸ் ஃபார்முலா!

வெங்கட் பிரபுவின் மிகப்பெரிய சக்சஸ் படமான மங்காத்தா குறித்து பெரிய அப்டேட் எதையுமே வெங்கட் பிரபு அப்போது கொடுக்கவில்லை. அதேபோல தான் மாநாடு திரைப்படமும். படத்தின் டிரெய்லரில் தான் வெங்கட் பிரபு எப்போதும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பது வழக்கம். அதை தன்னுடைய சக்சஸ் ஃபார்முலாவாகவே வைத்துவருகிறார்.

வெங்கட் பிரபு - விஜய்
வெங்கட் பிரபு - விஜய்

விஜய்க்கும் பில்டப் கொடுக்கும் படங்கள் பெரிய ஹிட் படங்களாக அமையவில்லை. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான துப்பாக்கியோ, கத்தியோ பெரிய பில்டப்புகள் இல்லாமல் தான் களத்திற்கு வந்து பெரிய ஹிட்டடித்தன. துப்பாக்கியும் விஜய் கரியரில் ஒரு புதிய முயற்சியாக இருந்தது, GOAT-ம் அதன்வரிசையில் அமையட்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com