50 கோடியில் வீடா? மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளுங்கள்! பொய்செய்தி பற்றி நிவேதா பெத்துராஜ் ஆதங்கம்!

சமீபமாக நடிகை நிவேதா பெத்துராஜ் பற்றிய கருத்துகள் சமூகவலைதளத்தில் பரவிவந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் பதிவொன்றை பதிவிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவர்.
நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ்X

ஒருநாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நிவேதா பெத்துராஜ், அடுத்தடுத்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் முதலிய திரைப்படங்களில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார்.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் படங்கள் நடித்துவந்த நிவேதா பெத்துராஜ், தற்போது படம் நடிப்பதிலிருந்து விலகி துபாயில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்து வீடியோ ஒன்றில் பேசியிருந்த யூ-டியூபர் ஒருவர், “நிவேதா பெத்துராஜ் 2000 ச.அடி பரப்பளவில் 50 கோடி விலை மதிப்புள்ள வீட்டில் துபாயில் வசித்துவருகிறார். அதை ஒரு தமிழ் சினிமா நடிகர் அவருக்கு பரிசளித்துள்ளார்” என்று பேசி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ்

இதனைத்தொடர்ந்து நிவேதா பெத்துராஜ் மீதான கருத்துகள் அதிகளவில் சமூகவலைதளங்களில் பேசுபொருளாக இருந்து வருகின்றன. இத்தகைய சூழலில்தான் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு விளக்கமளித்துள்ள நிவேதா பெத்துராஜ், “கண்ணியமான குடும்பத்தில் பிறந்து, 16 வயது முதல் சுயமாக வேலை செய்து வருமானம் ஈட்டிவருவதாகவும், தன்னைப் பற்றி செய்திவெளியிடும் முன்பு விவரத்தை முழுமையாக தெரிந்துகொண்டு மனிதாபிமானத்துடன் செய்தி வெளியிடுங்கள் என்றும், தானும் தனது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும்” ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நிவேதா பெத்துராஜ்
‘சக்சஸ் ஃபார்முலா’.. விஜய்யின் G.O.A.T படம் குறித்து புதிய அப்டேட் சொன்ன இயக்குநர் வெங்கட் பிரபு

பத்திரிக்கை உலகில் இன்னும் மனிதாபிமானம் இருக்கிறது என்று நம்புகிறேன்!

மிகுந்த மனவேதனையுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் நிவேதா பெத்துராஜ், “சமீபகாலமாக எனக்கு பணம் தாராளமாக செலவிடப்படுவதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதைப் பற்றிப் பேசுபவர்கள் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பதற்கு முன், கொஞ்சமாவது உண்மை என்ன என்பதை சரிபார்த்து மனிதாபிமானத்துடன் இருப்பார்கள் என்று நினைத்து அமைதியாக இருந்தேன். ஆனால் தற்போது நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துவருகிறோம். இது போன்ற தவறான செய்திகளை பரப்பும் முன் யோசியுங்கள்” என்று ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ்

மேலும், “நான் மிகவும் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவள். என்னுடைய 16 வயதிலிருந்தே பொருளாதாரத்தில் சுயமாக இருந்து வருகிறேன். திரையுலகில் கூட, நான் இதுவரை எந்த தயாரிப்பாளரிடமோ, இயக்குநரிடமோ, ஹீரோவிடமோ பட வாய்ப்புக்காக உதவுங்கள் என்று பேசியது கூட இல்லை. நான் 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன், அவை அனைத்தும் என்னைத்தேடி வந்த படங்கள். நான் எப்போதும் வேலை அல்லது பணத்திற்காக பேராசை கொள்ள மாட்டேன்.

நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ்

என்னைப் பற்றி இதுவரை பேசப்பட்ட எந்தத் தகவலும் உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். எனது குடும்பம் இன்னும் துபாயில்தான் வசித்துவருகிறது. நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் இருக்கிறோம். 2002-ம் ஆண்டு முதல் துபாயில் வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம். அதேபோல் 2013-ம் ஆண்டு முதல் பந்தயமே (Race) எனது விருப்பமாக இருந்து வருகிறது. ஆனால் சென்னையில் நடத்தப்படும் பந்தயங்கள் பற்றி எனக்கு தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.

தன்மீதான அவதூறு கருத்துகள் குறித்து பேசியிருக்கும் அவர், “நான் இதை சட்டரீதியாக எடுத்து செல்ல விரும்பவில்லை. ஏனென்றால் பத்திரிகை துறையில் இன்னும் கொஞ்சம் மனிதாபிமானம் இருக்கிறது, அவர்கள் தொடர்ந்து இப்படி அவதூறு செய்ய மாட்டார்கள் என்று நான் இன்னும் நம்புகிறேன். ஒரு குடும்பத்தின் நற்பெயரைக் கெடுக்கும் முன், நீங்கள் பெறும் தகவல்களைச் சரிபார்த்து பதிவிடுங்கள் என்று பத்திரிகையாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

நிவேதா பெத்துராஜ்
'உதவியதை மறந்துட்டிங்களா?’ - யுவன் சங்கர் ராஜா மறுப்புக்கு ஆர்.கே. சுரேஷ் பதில்! என்ன நடந்தது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com