இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...
சுதீர் மிஷ்ரா - நிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சீரிஸ் ` Tanaav S2: Vol 2’. தீவிரவாத கும்பலுக்கும், சிறப்பு படையினருக்குமான மோதலே கதை.
சச்சின் டாரிக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள சீரிஸ் `Maeri’. தன் மகள் மானசிக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கேட்டு தாரா நடத்தும் போராட்டமே கதை.
Clint Eastwood இயக்கியுள்ள படம் `Juror #2'. காதலியை கொலை செய்துவிட்டார் என குற்றம் சுமத்தப்படும் நபரின் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அவர் நிரபராதியா? குற்றவாளியா என விவாதிக்க ஜூரி குழு கூடுகிறது. அதில் ஒருவர்தான் ஹீரோ. இவ்வழக்கு என்ன ஆகிறது என்பதே கதை.
ராகுல் தோலக்யா இயக்கி ப்ரதிக் காந்தி, திவ்யந்து நடித்துள்ள படம் `Agni’. மும்பையில் நிகழும் தீவிபத்து ஒன்று எப்படி சரி செய்யப்படுகிறது என்பதே கதைக்களம்.
இஸ்ரேலியப் படமான `Longing’ அதே பெயரில், அதே இயக்குநர் Savi Gabizon ரீமேக் செய்திருக்கிறார். தனது கேர்ள்ஃப்ரெண்டை சந்திக்க செல்லும் மோகுல் தெரிந்து கொள்ளும் உண்மைகளே படம்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த படம் `அமரன்’. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம்.
கருணா குமார் இயக்கத்தில் வருண் தேஜ் நடித்த படம் `Matka’. 1958 - 82 வரை விசாகபட்டிணத்தில் நிகழ்ந்த கேம்ப்ளிங் சம்பவத்தைப் பற்றிய படம்.
போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்த படம் `சார்’. கல்வியை கொடுப்பதில் நடக்கும் சிக்கல்களே கதைக்களம்.
வாசன் பாலா இயக்கத்தில் அலியா பட் நடித்த படம் `Jigra’. சத்யாவுக்கு குடும்பமாக இருப்பது அவளது தம்பி மட்டுமே. அவனுக்கு ஒரு சிக்கல் வரும் போது, எப்படி காப்பாற்றுகிறாள் என்பதே கதை.
ராஜ் ஷாண்டில்யா இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், த்ரிப்தி இம்ரி நடித்த படம் `Vicky Vidya ka Woh Wala Video'. விக்கி - வித்யா தங்களின் முதலிரவை வீடியோவாக பதிவு செய்து ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்கிறார்கள். அந்த சிடி காணாமல் போன பிறகு நடக்கும் கலாட்டாக்களே கதை.
Greg Berlanti இயக்கத்தில் Scarlett Johansson, Channing Tatum நடித்துள்ள படம் `Fly Me to the Moon’. fake moon landing பற்றிய கதையாக உருவாகியிருக்கிறது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள படம் `புஷ்பா 2’. 2021ல் வெளியான முதல் பாகத்தின் தொடர்சியாக, புஷ்பா - பன்வர் சிங் சிக்காவத் இடையே நடக்கும் மோதல்களும், புஷ்பாவின் வளர்ச்சியுமே கதை.
செல்வகுமார் இயக்கியுள்ள படம் `பேமிலி படம்’. இயக்குநர் கனவில் இருக்கும் கடைசி பிள்ளைக்காக, ஒரு குடும்பம் செய்யும் விஷயமே கதை.