OTT Release list புதிய தலைமுறை
ஓடிடி திரைப் பார்வை

குடும்பஸ்தன் | பாட்டல் ராதா | Mr Housekeeping | விடுதலை 2 - தியேட்டர், OTT-ன் இந்த வார ரிலீஸ் லிஸ்ட்

குடும்பஸ்தன், பாட்டல் ராதா, Mr Housekeeping, விடுதலை 2 உட்பட பல திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகின்றன. அந்த பட்டியலை இங்கே காணலாம்...

Johnson

குடும்பஸ்தன், பாட்டல் ராதா, Mr Housekeeping, விடுதலை 2 உட்பட பல திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகின்றன. அந்த பட்டியலை இங்கே காணலாம்...

Series

Prime Target (English) Apple TV+ - Jan 22

Prime Target

Brady Hood இயக்கியுள்ள சீரிஸ் `Prime Target'. கணிதம் பயிலும் மாணவர் கண்டுபிடிக்கும் ஒரு விஷயமும் அதை தொடர்ந்து நிகழும் விஷயங்களுமே கதை.

The Night Agent: S2 (English) Netflix - Jan 23

The Night Agent S2

2023ல் வெளியான திரில்லர் சீரிஸ் `The Night Agent'. இதன் இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளது. அரசாங்கத்தையே அச்சுறுத்தும் ஒரு பிரச்சனை, அதற்கு யார் காரணம், அதை FBI ஏஜென்ட் பீட்டர் அதைக் கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகளே சென்ற சீசனின் கதை. அதன் தொடர்ச்சியே இந்த சீசனில் வர இருக்கிறது.

OTT

Wife Off (Telugu) etv WIN - Jan 23

Wife Off

பானு இயக்கியுள்ள சீரிஸ் `Wife Off'. அவ்னி என்ற பெண்ணின் வாழ்க்கையில் நடப்பவையே கதை.

Hisaab Barabar (Hindi) Zee5 - Jan 24

Hisaab Barabar

அஸ்வனி திர் இயக்கத்தில் மாதவன் நடித்ததுள்ள படம் ` Hisaab Barabar'. ராதே மோகன் என்ற ரயில்வே ஊழியர், மிக்கி மெஹ்தே என்பவரின் ஊழலை வெளிக் கொண்டுவர செய்யும் செயல்களே கதை.

The Sand Castle (English) Netflix - Jan 24

The Sand Castle

Matty Brown இயக்கியுள்ள சீரிஸ் `The Sand Castle'. ஒரு மர்மமான தீவில் மாட்டிக் கொள்ளும் குடும்பத்துக்கு என்ன நடக்கிறது என்பதே கதை.

Post Theatrical Digital Streaming

Viduthalai 2 (Tamil) Prime - Jan 19

Viduthalai 2

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்த படம் `விடுதலை 2'. வாத்தியாரின் கதையாக விரிகிறது இந்த பாகம். இது இந்த வாரம் அமேசான் பிரைமில் வெளியாகிறது.

Subservience (English) Apple TV+ - Jan 20

Subservience

S.K. Dale இயக்கத்தில் Megan Fox நடித்த படம் `Subservience'. குடும்பத்தை கவனித்துக் கொள்ள சிம் என்ற ரோபோட்டை வாங்குகிறார் குடும்ப தலைவர், அது ரெட் சிப் மாட்டிய சிட்டி ரோபோவாய் மாறிய பின் என்ன ஆகிறது என்பதே கதை.

Barroz (Malayalam) Hotstar - Jan 22

Barroz

மோகன்லால் இயக்குநராக களம் இறங்கிய படம் `Barroz'. புதையலை காத்து நிற்கும் பூதம் பற்றிய கதை.

The Smile Man (Tamil) Aha - Jan 24

ஷ்யாம் - பிரவீன் இயக்கிய படம் `ஸ்மைல் மேன்'. அல்சைமரால் பாதிக்கப்பட்ட காவலதிகாரி, ஒரு சீரியல் கில்லர் வழக்கை விசாரிப்பதே கதை.

Thiru Manickam (Tamil) Zee5 - Jan 24

Thiru Manickam

நந்தா பெரியசாமி இயக்கிய படம் `திரு மாணிக்கம்'. மாணிக்கம் என்ற மனிதனின் வாழ்வில் நடக்கும் சிக்கல்களும் அதன் தீர்வுகளுமே கதை.

Razakar (Telugu) Aha - Jan 24

Razakar

சத்யநாராயணா இயக்கிய படம் `Razakar’. 1948ல் ஹைதராபாத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிய படமாக உருவாகியிருக்கிறது.

Theatre

Dominic and The Ladies' Purse (Malayalam) - Jan 23

Dominic and The Ladies Purse

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள படம் `Dominic and The Ladies' Purse'.டோமினிக் ஒரு முன்னாள் காவலதிகாரி, இந்நாள் டிடெக்டிவ். தொலைந்து போன பர்ஸ் ஒன்றை அதன் உரிமையாளரிடம் சேர்க்கும் மிஷனை அவர் கையில் எடுக்க, அது எதிர்பாராத பல சிக்கல்களை கொண்டு வருகிறது. அந்த பர்ஸ்க்கு பின் இருக்கும் பூதாகர பிரச்சனை என்ன என்பதே படம். 

Kudumbasthan (Tamil) - Jan 24

Kudumbasthan

ராஜேஷ்வர் காளிஷ்வர் இயக்கத்தில் மணிகண்டன், சான்வி நடித்துள்ள படம் `குடும்பஸ்தன்'. நடுத்தர குடும்பத்தின் பொறுப்புகளை சுமக்கும் சாமானியனின் கதை.

Vallan (Tamil) - Jan 24

Vallan

மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர் சி நடித்துள்ள படம் `வல்லான்'. அதிரடி ஹை புரொஃபைல் மர்டர் வழக்கை விசாரிக்கும் காவலதிகாரியின் விசாரணைகளே கதை.

Bottle Radha (Tamil) - Jan 24

Bottle Radha

தினகர் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடித்துள்ள படம் `பாட்டல் ராதா'. குடிநோயாளியான ராதா வாழ்வில் வரும் சிக்கல்களே படம்.

Mr Housekeeping (Tamil) - Jan 24

Mr Housekeeping

அருண் இயக்கத்தில் ஹரிபாஸ்கர், லாஸ்லியா நடித்துள்ள படம் `மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்'. தன்னுடைய கிரஷ்ஷிடம் வேலையாளாக சேரும் இளைஞனின் கதை.

Kuzhanthaigal Munnetra Kazhagam (Tamil) - Jan 24

Kuzhanthaigal Munnetra Kazhagam

பிரபு தயாள் இயக்கத்தில் செந்தில் நடித்துள்ள படம் `குழந்தைகள் முன்னேற்ற கழகம்'. பள்ளியளவில் நடக்கக்கூடிய ஒரு தேர்தல், அதில் என்ன நடக்கிறது என்பதே கதை.

Poorveegam (Tamil) - Jan 24

Poorveegam

முருகானந்த் இயக்கியுள்ள படம் `பூர்வீகம்'. இன்றைய தலைமுறை இளைஞர்கள் பற்றிய படம்.

Gandhi Tatha Chettu (Telugu) - Jan 24

Gandhi Tatha Chettu

பத்மாவதி இயக்கத்தில் புஷ்பா இயக்குநர் சுகுமார் மகள் சுக்ரிதி நடித்துள்ள படம் `Gandhi Tatha Chettu'. தன் தாத்தாவின் மரத்தை அகற்றுவதை எதிர்க்கும் ஒரு பேத்தியின் கதை.

Hathya (Telugu) - Jan 24

Hathya

ஸ்ரீவித்யா இயக்கியுள்ள படம் `Hathya'. பிரபல அரசியல்வாதியின் கொலையும் அதை தொடர்ந்து நடக்கும் விசாரணைகளுமே படம்.

Thalli Manasu (Telugu) - Jan 24

Thalli Manasu

ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள படம் `Thalli Manasu'. கணவனை இழந்து தனி நபராக தன் மகனை வளர்க்கும் ஜோதி என்ற பெண்ணின் கதை.

Sky Force (Hindi) - Jan 24

Sky Force

சந்தீப் - அபிஷேக் இயக்கத்தில் அக்ஷய்குமார், வீர் நடித்துள்ள படம் `Sky Force'. 1965ல் நடைபெற்ற இந்தியாவின் முதல் வான் வழி தாக்குதலை மையமாக வைத்து உருவாகியுள்ளது படம்.

Flight Risk (English) - Jan 24

Flight Risk

Mel Gibson இயக்கத்தில் Mark Wahlberg நடித்துள்ள படம் `'. மார்ஷல் ஒருவரை பத்திரமாக கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு ஹீரோவுக்கு, அதை செய்வதில் அவருக்கு வரும் சவால்களே படம்.

Twilight Of The Warriors: Walled (English) - Jan 24

Twilight Of The Warriors: Walled

Soi Cheang இயக்கியுள்ள படம் `Twilight Of The Warriors: Walled'. Chan Lok என்ற இளைஞன் எதிர்பாராத விதமாக Walled Cityக்குள் நுழைகிறான். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

The Seed Of The Sacred Fig (Persian) - Jan 24

The Seed Of The Sacred Fig

Mohammad Rasoulf இயக்கியுள்ள படம் `The Seed Of The Sacred Fig'. தெஹ்ரானின் அரசு பதவியில் உள்ள இமானின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி அவரது வீட்டில் இருந்து திருடப்படுகிறது. அதன் பின் நடக்கும் விஷயங்களும், தெஹ்ரான் அரசியல் சூழலும் என்ன என காட்டும் கதை.