இயக்குநராக முதல் விருதை வென்ற நடிகை தேவயானி.. சர்வதேச திரைப்பட விழாவில் அங்கீகாரம்!
காதல் கோட்டையின் கனவு தேவதை... சூர்ய வம்சத்தின் இணையில்லா நாயகி... இன்னும் எண்ணிலடங்கா ஹிட் படங்களின் கதாநாயகி... 90 காலகட்டத்தின் முன்னணி ஹீரோக்களுக்கு எல்லாம் இவர் தான் முக்கிய ஹீரோயின்... இப்படி பல சிறப்புகளைக் கொண்ட தேவயானியின் புகழ் மகுடத்தில் மற்றொரு வைரக்கல்லாய் சேர்ந்திருக்கிறது, அண்மையில் கிடைத்திருக்கும் அங்கீகாரம்.
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தேவயானி திரைப்படம்..
நடிகையாக பாராட்டுகளைப் பெற்ற தேவயானி, கைக்குட்டை ராணி எனும் குறும்படத்துக்காக சர்வதேச திரைப்பட விழாவில் விருதைப் பெற்றுள்ளார்.
ஜெய்ப்பூரில் நடந்த விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது, தேவயானி இயக்கிய குறும்படம்.. தாயை இழந்த சிறுமி, தந்தையின் அரவணைப்பில் வாழ்கிறாள்.. அந்த தந்தையும் பிழைப்புக்காக வெளியூர் சென்றுவிட்ட சூழலில், சிறுமி எதிர்கொள்ளும் சிக்கல்கள்தான், கைக்குட்டை ராணியின் கதை.. அதை, உணர்வுப்பூர்வமாகவும், யதார்த்தமாகவும் அணுகிய விதத்தில், இயக்குநராக பாராட்டுகளைப் பெற்றுள்ளார், தேவயானி...
நவீன், நிஹாரிகாவின் நடிப்பில், இளையராஜாவின் இசையில், லெனினின் படத்தொகுப்பில் உருவான கைக்குட்டை ராணி, இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது.