Femi 9 நிகழ்வில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்புதிய தலைமுறை

“உணவுகூட தராமல் 6 மணிநேரம் காக்கவைப்பு..” மீண்டும் சர்ச்சையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி!

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண வீடியோ தொடர்பான சர்ச்சைக்கு பிறகு தற்போது அந்த தம்பதி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
Published on

மதுரையில் உள்ள தனியார் மண்டபத்தில் femi 9 நாப்கின் நிறுவன நிகழ்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பங்கேற்று விற்பனையை அதிகரித்த முகவர்களுக்கான பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் social media influencers சிலரும் பங்கேற்று இருந்தனர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்

இந்நிலையில் நிகழ்ச்சியில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் செயல் குறித்து நேரில் பார்த்த influencers இருவேறுபட்ட கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

Femi 9 நிகழ்வில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் அரசு சொத்தை விலைக்கு கேட்டாரா? புதுச்சேரி அமைச்சர் விளக்கம்!

சர்ச்சை பதிவுகளை பதிவிட்ட influencers..

நயன்தாரா பங்கேற்ற நிகழ்ச்சி குறித்து adipoli foodie என்ற influencer வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “காலை 9 மணிக்கு வருவதாக சொல்லி நயன்தாரா மாலை 3 மணிக்கு வந்தார். 1 மணிக்கு முடிவதாக கூறப்பட்ட நிகழ்ச்சி 6 மணிக்கு முடிந்தது. இதனால் வந்தவர்கள் பலர் தங்களது பஸ், ட்ரெயினை மிஸ் செய்தனர். காத்திருந்தவர்களுக்கு உணவு கூட தரவில்லை. நயன்தாரா யாரையும் மதிக்கவில்லை” என கூறி இருந்தார்.

இந்த வீடியோ ஓரிரு நாட்களில் அவரது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. வீடியோ நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்தும் அவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். Copyright காரணம் கூறி நயன்தாரா தரப்பு இந்த வீடியோவை நீக்கவைத்துள்ளனர். அதற்கு பதிலாக பணம் தருவதாக பேரம் பேசியதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் பேசியது சர்ச்சையான நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு influencer ஆன theni couple vlogs “நயன்தாரா- விக்னேஷ் சிவன் தாங்கள் அனைவரிடமும் தன்மையாக நடந்து கொண்டனர். நிகழ்ச்சி தாமதமானதால் அனைவரும் போட்டோ எடுக்க அவசரப்பட்டனர். நிகழ்ச்சி குறித்து பரப்பப்படும் வீடியோ தவறானது” என பேசியுள்ளார். நயன்தாராவின் நிகழ்ச்சி குறித்து இரு மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Femi 9 நிகழ்வில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்
“யார் நம்மை கீழ்த்தரமாக பேசினாலும் கவலைப்படாமல், நேர்மையாக உழைக்க வேண்டும்” - நடிகை நயன்தாரா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com