‘மாமழை போற்றுதும்’ இயற்கையை நேசிக்கும் நபராக நிவின் பாலி.. மிரட்டும் ”ஏழு மலை ஏழு கடல்” ட்ரெய்லர்!
இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஏழு மலை ஏழு கடல். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படத்தினை சுரேஷ் காமாட்சியின் V HOUSE PRODUCTIONS நிறுவனம் தயாரித்துள்ளது.
திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பினைப் பெற்றிருந்தது. பாடல்களை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். ஒரு வருடத்திற்கு முன் வெளியான க்ளிம்ஸ் வீடியோவும் பெரும் வரவேற்பினைப் பெற்றிருந்தது.
இந்நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஒரு தீபாவளி இரவு என ஆரம்பிக்கும் ட்ரைலர் ரயிலில் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ரயிலில் ஒரு பெட்டியில் நிவின் பாலியும், சூரியும் மட்டுமே உள்ளனர். இயற்கையையும் உயிரினங்களையும் நேசிக்கும் ஒருவராக நிவின்பாலி இருக்கிறார். மழையைக் கண்டதும் ‘மாமழை போற்றுதும்’ என அதை வணங்கி சூரியை அடித்தாவது வணங்க வைக்கும் நபராக நிவின்பாலி இருக்கிறார்.
முதற்காட்சியிலேயே ரயிலின் வெளியே பறக்கும் சிறகை பறந்து போய் பிடிப்பவராகவும், மூன்றாவது காட்சியிலேயே எலியைத் தாலாட்டுவதும் என இயற்கை மீதான அன்பு கொண்ட நபராகவே நிவின் பாலி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்.
சூரி மாடர்ன் மனிதராக, நிவின் பாலியிடம் மாட்டிக்கொண்ட நபராக இருக்கிறார். பல காலக்கட்டங்களில் நடக்கும் படமாக ஏழு மலை ஏழு கடல் உருவாகி இருக்கிறது. கடந்தாண்டு வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோவில் கூட சூரியிடம் உன் வயது என்ன என நிவின்பாலி கேட்பார். அதற்கு சூரி 32 எனக் கூற, நிவின் பாலி தனக்கு 8822 வயது என சொல்லுவார்.
ட்ரெய்லரின் கடைசிக் காட்சியில் எலியை பிடித்து நிவின் பாலியை சூரி மிரட்டுவதாக முடிகிறது. ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட ஒன்னேகால் லட்சம் பேர் ட்ரெய்லரைப் பார்த்துள்ளனர்.. திரைப்படம் மார்ச் மாதம் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.