இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட்  PT Web
ஓடிடி திரைப் பார்வை

All We Imagine As Light | Jolly O Gymkhana | Identity - இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட் இதோ!

Jolly O Gymkhana, Identity, All We Imagine As Light, Kalan உள்ளிட்ட பல திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன.

Johnson

Jolly O Gymkhana, Identity, All We Imagine As Light, Kalan உள்ளிட்ட பல திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன.

Missing You (English) Netflix - Jan 1

Missing You

Nimer Rashed இயக்கியுள்ள சீரிஸ் `Missing You'. டிடெக்டிவ் கேட் டோனோவன் காணாமல் போன தனது வருங்கால கணவரை ஒரு டேட்டிங் ஆப் மூலம் திரும்ப கண்டுபிடிக்கிறார். அதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.

Reunion (English) Netflix - Jan 1

Reunion

Chris Nelson இயக்கியுள்ள படம் `Reunion'. வெகு நாட்களுக்குப் பின் பள்ளி நண்பர்கள் அனைவரும் ரீயூனியனில் கூடுகிறார்கள். அப்போது அங்கு நிகழும் ஒரு கொலையும், அதை செய்தது யார்? என்ற கேள்வியும் தான் கதை.

Katha Kamamishu (Telugu) Aha - Jan 2

Katha Kamamishu

கௌதம் - கார்த்திக் இயக்கியுள்ள படம் ` Katha Kamamishu'. சில தம்பதிகளுக்கு இடையே நிகழும் விஷயங்களே கதை.

Jolly O Gymkhana (Tamil) Aha - Dec 30

Jolly O Gymkhana

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த படம் `ஜாலியோ ஜிம்கானா’. நான்கு பெண்கள் இணைந்து ஒரு பிணத்தை மறைக்கப் போராடும் காமெடி கலாட்டாவே கதை.

Panchavalsara Padhathi (Malayalam) manorama MAX - Dec 31

Panchavalsara Padhathi

பிரேம்லால் இயக்கிய படம் `Panchavalsara Padhathi'. கிராமத்தில் உலவும் கட்டுக்கதை, எப்படி ஒரு இளைஞனின் வாழ்வை பாதிக்கிறது என்பதே கதை.

Love Reddy (Telugu) Aha - Jan 3

Love Reddy

சமரன் இயக்கத்தில் உருவான படம் `Love Reddy'. ஆந்திராவை சேர்ந்த நாயகன், கர்நாடகாவை சேர்ந்த நாயகி இவர்களின் காதல் கை கூடியதா என்பதே கதை.

I Am Kathalan (Malayalam) manorama MAX - Jan 3

I Am Kathalan

`Thanneer Mathan Dinangal’, `Super Sharanya', `Premalu' என ஹாட்ரிக் ஹிட் கொடுத்த கிரிஷ் இயக்கிய படம் `I am Kathalan'. விஷ்ணு அவனது ப்ரேக்கப்புக்கு பின் எடுக்கும் ரிவெஞ்சும், அதன் விளைவுகளும் கதை.

All We Imagine As Light (Malayalam) Hotstar - Jan 3

All We Imagine As Light

பாயல் கபாடியா இயக்கிய படம் `All We Imagine As Light '. மும்பையில் வசிக்கும் பிரபா, அனு என்ற இரு நர்ஸ்களின் வழியாக பெண்களின் வாழ்வியல் சிக்கல்களை பேசுகிறது படம்.

Kraven The Hunter (English) - Jan 1

Kraven The Hunter

J. C. Chandor மார்வல் காமிக்ஸை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம் `Kraven The Hunter'. செர்ஜி ஒரு மேஜிகல் சீரம் எடுத்துக் கொண்ட பின் சூப்பர் பவர் வருகிறது. அதன் பின் நடப்பவையே கதை.

Identity (Malayalam) - Jan 2

Identity

அகில் பால் - அனஸ் கான் இயக்கத்தில் த்ரிஷா, டொவினோ தாமஸ், வினய் ராய் நடித்துள்ள படம் `Identity'. ஒரு ஸ்கெட்ச் ஆர்ட்டிஸ்ட், காவல் துறை இணைந்து ஒரு குற்றவாளியை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகளே கதை.

Bio Scope (Tamil) - Jan 3

Bio Scope

சங்கரி ராஜ்குமார் இயக்கியுள்ள படம் `பயா ஸ்கோப்'. கிராமத்தினர் சேர்ந்து திரைப்படம் எடுக்கும் முயற்சிகளில் இறங்குகிறார்கள். அதன் பின் நடப்பவையே கதை.

See Saw (Tamil) - Jan 3

See Saw

குணா இயக்கத்தில் நடராஜ் நடித்துள்ள படம் `சீ சா'. தொழிலதிபர் ஆதவன் வீட்டில் நிகழும் ஒரு கொலை, காணாமல் போகும் ஆதவன் மற்றும் அவரது மனைவி, இந்த வழக்கை விசாரிக்கும் முகிலனின் தேடல்களே கதை.

Xtreme (Tamil) - Jan 3

Xtreme

ராஜவேல் இயக்கியுள்ள படம் `எக்ஸ்ட்ரீம்'.ஒரு பெண்ணின் கொலையை மையமாக வைத்து, பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்து பேசும் படம்.

Lara (Tamil) - Jan 3

Lara

மணி மூர்த்தி இயக்கத்தில் அசோக் நடித்துள்ள படம் `லாரா'.ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

Kalan (Tamil) - Jan 3

Kalan

வீர முருகன் இயக்கியுள்ள படம் `கலன்'. அதிகாரத்துக்கும் எளிய மக்களுக்கும் இடையேயான போராட்டமே கதை.

Orumbettavan (Malayalam) - Jan 3

Orumbettavan

சுகீஷ் இயக்கியுள்ள படம் `Orumbettavan'. மிழி என்ற சிறுமியின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே கதை.

A Legend (English) - Jan 3

A Legend

Stanley Tong இயக்கியுள்ள படம் `A Legend'. 2005ல் வெளியான `The Myth' பட சீக்குவலாக உருவாகியுள்ளது படம். ஒரு தொல்லியல் நிபுணரின் கடந்த கால, நிகழ்கால போராட்டங்களை சொல்கிறது கதை. ஜாக்கிசான் படம் என்பதால் தமிழிலும் தாப் செய்யப்பட்டு `விஜயபுரி வீரன்' என்ற பெயரில் வெளியாகிறது.

Sonic the Hedgehog 3 (English) - Jan 3

Sonic the Hedgehog 3

Jeff Fowler இயக்கத்தில் ஜிம் கேரி நடித்துள்ள படம் `Sonic the Hedgehog 3'. இந்த முறை டாக்டர் எக்மேன் செய்யும் வில்லத்தனத்தை ஹெட்ஜ்டாக் எப்படி முறியடிக்கிறது என்பதே கதை.