7ஜி ரெயின்போ காலனி 2
7ஜி ரெயின்போ காலனி 2முகநூல்

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!! என்னது 7ஜி-2 ஷூட்டிங்கே முடிய போகுதா? சர்ப்ரைஸ் கொடுத்த செல்வராகவன்!

செல்வராகவன் இயக்கி மக்களின் மனங்களை வென்ற 7ஜி ரெயின்போ காலனியின் இரண்டாம் பாகத்தின் போஸ்டரை செல்வராகவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Published on

செல்வராகவன் இயக்கி மக்களின் மனங்களை வென்ற 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான போஸ்டரை செல்வராகவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம். செல்வராகவன் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா கதையின் நாயகனாகவும், கதையின் நாயகியாக சோனியா அகர்வாலும் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம்ம ஹிட் கொடுத்தன.

மாபெரும் வெற்றியை சம்பாதித்த இத்திரைப்படம், வெளியாகி கிட்டதட்ட 20 ஆண்டுகளை கடந்தாலும் இன்றளவும் மக்களின் மனங்களில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்தநிலையில், சில மாதங்களாகவே 7ஜி ரெயின்போ காலனியின் இரண்டாவது பாகத்திற்கான திட்டத்தில் செல்வராகவன் ஈடுபட்டிருந்தார்.. இதிலும், வி கிருஷ்ணா கதையின் நாயகனாகவும் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

7ஜி ரெயின்போ காலனி 2
அஜித் ரசிகர்களுக்கு பேரிடியாக இறங்கிய செய்தி.. பொங்கல் ரேஸில் இருந்து விலகியது விடாமுயற்சி!

இந்தநிலையில்தான், புத்தாண்டு புது அப்டேட்டை கொடுத்திருக்கிறார் செல்வராகவன்..

தற்போது இறுதிக்கட்டப்படப்பிடிப்பில் இருக்கும் 7 ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை செல்வராகவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எப்பொழுது இரண்டாம் பாகம் வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அப்டேப் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

இதில் என்ன ட்விஸ்ட் என்றால் புதுப்பேட்டை இரண்டாம் பாகம் எப்பொழுது வரும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஆயிரத்தில் ஒருவர் படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இது புதியதொரு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com