மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - ‘லப்பர் பந்து’ காளி வெங்கட்
காளி வெங்கட்லப்பர் பந்து திரைப்படம்

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | கிரிக்கெட் மீது ஒரு தீரா காதல்... ‘லப்பர் பந்து’ காளி வெங்கட்

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் காளி வெங்கட் ஏற்று நடித்திருந்த ‘கருப்பைய்யா’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
Published on

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

சமகால தமிழ் சினிமாவின் சிறந்த துணைநடிகர்களில் ஒருவராக மிளிர்பவர் காளி வெங்கட். வருடத்திற்கு வருடம் இவரது கேரக்டர்களும் நடிப்பும் மெருகேறிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் சீனியர் கிரிக்கெட்டர் பாத்திரத்தில் தனது இயல்பான நடிப்பைத் தந்து அசத்தியுள்ளார்  

காளி வெங்கட் .

எந்தவொரு நண்பர்கள் குழுமத்திலும் வயதில் மூத்தரவான ஒரு ‘சித்தப்பா’ காரெக்டர் கண்டிப்பாக இருப்பார். அவரை இளம் தலைமுறையினராகவும் சேர்க்க முடியாது. பெரியவர்கள் வரிசையிலும் வைக்க முடியாது. அப்படியொரு ‘இரண்டுங்கெட்டான்’ பாத்திரம். விளையாட்டுத்தனம் இன்னமும் போகாத சீனியர் குழந்தை என்று சொல்லலாம். நண்பர்கள் வட்டாரத்தில் அவரை நிறைய ஓட்டுவார்கள். ஆனால் உள்ளூற மரியாதை வைத்திருப்பார்கள். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - ‘லப்பர் பந்து’ காளி வெங்கட்
காளி வெங்கட்

இப்படியொரு ‘சித்தப்பா’ எல்லா கிரிக்கெட் டீமிலும் இருப்பார். வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை-28’ திரைப்படத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிகர் இளவரசு சிறப்பாக நடித்திருப்பார். ஆனால் அது காமெடியான காரெக்டர். அந்த மாதிரியான பாத்திரத்தின் சாயலில் சீரியஸான ரோலில் ‘கருப்பண்ணனாக’  லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்திருந்தார் காளி வெங்கட். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - ‘லப்பர் பந்து’ காளி வெங்கட்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | ‘கார்கி’ இந்திரன்ஸ் கலியபெருமாளாக காளி வெங்கட்!

‘கருப்பைய்யா’ என்னும் கிரிகெட் ஆராதகர்

‘ஜாலி பிரெண்ட்ஸ்’ என்கிற கிரிக்கெட் டீமின் ஸ்தாபகர் கருப்பைய்யா. குழுவிற்காக வணிகர்களிடம் தேடித் தேடி நன்கொடை வாங்குவது முதல் பிளெக்ஸ் பேனர் அடிப்பது வரை அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். தனது அணி ஒருமுறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்பது இவருடைய தீராத கனவு.

திறமைசாலிகள் எங்கிருந்தாலும் அவர்களை ஊக்கப்படுத்தும் உண்மையான ஆர்வம் கொண்டவர். ஒரு காலத்தில் அணியின் தூணாக இருந்தாலும் இப்போது செல்வாக்கை இழந்தவர். கேப்டன் என்று பெயருக்கு இருந்தாலும் ‘டாஸ்’ போடுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுபவர். வெங்கடேஷ் என்கிற இளம் வீரரின் செல்வாக்குதான் அணியில் இப்போது அதிகமாக இருக்கிறது. வெங்கடேஷ் சாதிய வெறி கொண்டவர்.

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - ‘லப்பர் பந்து’ காளி வெங்கட்
காளி வெங்கட்லப்பர் பந்து திரைப்படம்

அன்பு என்கிற வளரிளம் சிறுவன் ‘யார்க்கர்’ என்னும் பாணியில் பந்து வீசும் திறமையைக் கொண்டவன். அவனை தன்னுடைய அணியில் சேர்த்தால் அவனுடைய திறமையை ஊக்குவிப்பதோடு  கோப்பையை வெல்ல முடியும் என்று எண்ணுகிறார் கருப்பு. ஆனால் சாதியம் குறுக்கே தடையாக இருக்கிறது. “இவனுங்க இப்ப கிரவுண்டுக்கு வருவாங்க.. அப்புறம் வீட்டுக்கு வருவாங்க” என்று கொதிப்படைகிறான் வெங்கடேஷ். அன்புவை விசாரிக்கும் போதே “காலனி டீச்சர் பையன்தானே நீ?” என்று சாதிய அடையாளத்தோடுதான் வெங்கடேஷின் நண்பர்கள் விசாரிக்கிறார்கள். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - ‘லப்பர் பந்து’ காளி வெங்கட்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 68 |பாசமுள்ள தகப்பனின் பாத்திரத்தில் ’ராதா ரவி’

‘சித்தப்பா’ காரெக்டரில் காளி வெங்கட்

“கருப்பண்ணன்தான் வரச் சொன்னாரு” என்று அன்பு அவர்களிடம் தயக்கத்துடன் சொல்லும் போது “ஆமாம்.. நான்தான் வரச்சொன்னேன்” என்று ஐஸை சப்பிக் கொண்டே வருகிறார் கருப்பு. அதிலேயே அவரது இரண்டுங்கெட்டான்தனம் நமக்கு பதிவாகி விடுகிறது. “நல்லாப் பந்து போடுவான். நான் பார்த்திருக்கேன்” என்று வெங்கடேஷின் எதிர்ப்பையும் மீறி அணிக்குள் அந்தப் பையனை சேர்க்கிறார் கருப்பு. ஆனால் பந்து வீச வாய்ப்பே தராமல் வெங்கடேஷ் வெறுப்பைக் காட்ட,  அன்பு கோபத்தோடு மைதானத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறான். 

ஆண்டுகள் கடக்கின்றன. அன்பு வளர்ந்து இளைஞன் ஆவதோடு சிறந்த பவுலராக அறியப்படுகிறான். எந்த அணி கூப்பிட்டாலும் அங்கு சென்று ஆடி வெற்றிகளைத் தேடித் தருகிறான். என்றாலும் ஜாலி பிரெண்ட்ஸ் டீமில் ஆடுவதென்பது அவனது இளம் வயது கனவாகவே உறைந்திருக்கிறது.

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - ‘லப்பர் பந்து’ காளி வெங்கட்
காளி வெங்கட்லப்பர் பந்து திரைப்படம்

ஜாலி பிரெண்ட்ஸ் டீமின் 20வது ஆண்டு நிறைவையொட்டி டோர்ணமென்ட் மேட்சிற்கு பெரிய அளவில் ஏற்பாடு செய்கிறார் கருப்பு. அதற்காக தெருச் சுவரில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கும் கருப்புவிடம்,  “ஏண்ணே.. இப்படி கிரிக்கெட்டை கதியா இருக்கீங்களே..” என்று ஒரு நண்பர் விசாரிக்கையில் “என்னண்ணே. பண்றது.. அப்படி ஆகிப் போச்சு” என்று வெள்ளந்தியாகச் சிரித்துக் கொண்டே சொல்கிறார் கருப்பு. 

கிரிக்கெட்டிற்காக அவமானங்களை விழுங்கும் கருப்பு

அன்பு அந்தப் பக்கமாக பைக்கில் செல்ல, அவனைக் கூப்பிடும் கருப்பு “உன் போட்டோ ஒண்ணு அனுப்பு. பேனர்ல போடணும்” என்று கேட்க, பழைய கசப்பான நினைவுகள் மனதில் எழ “எதுக்குண்ணே அதெல்லாம்?” என்று தயக்கமாக மறுக்கிறான் அன்பு.

“நான்தான் உன்னோட முதல் கேப்டன் மறந்துடாத. ஜாலி பிரெண்ட்ஸ் டீம்ல உனக்காக ஒரு ஜொ்சி எப்பவும் இருக்கும்” என்று சொல்லி அவனை வழியனுப்பி வைக்கிறார் கருப்பு. 

மேட்ச்சிற்கு நன்கொடை வாங்க ஒரு நகைக்கடைக்கு செல்கிறார் கருப்பு. ஒரு காலத்தில் புகழ்பெற்ற டீம் என்பதால் அந்தச் செல்வாக்கு இருந்தாலும் இப்போது அது மங்கியிருக்கிறது. “செய்யலாம்ண்ணே.. நீங்களே டோர்ணமென்ட் நடத்தி. நீங்களே ஃபைனல் ஆடறீங்க..” என்று நன்கொடை தரும் வணிகர் சலித்துக் கொள்ள சங்கடமாகச் சிரிக்கிறார் கருப்பு.

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - ‘லப்பர் பந்து’ காளி வெங்கட்
காளி வெங்கட்லப்பர் பந்து திரைப்படம்

அதே சமயத்தில் வெங்கடேஷ் மொபைலில் அழைக்கிறான். “என்னண்ணே. அன்புவோட போட்டோவையெல்லாம் பேனர்ல போட்டிருக்கீங்க?” என்று அவன் ஆட்சேபத்தோடு கேட்க “அவனும் நம்ம டீம்ல ஒரு மேட்ச் ஆடியிருக்கான்ல” என்று அன்புவிற்கு ஆதரவு தருகிறார் கருப்பு. “அது அரை மேட்சுண்ணே.. அவன் போட்டோ இருக்கும்ன்னா எங்க போட்டோவையெல்லாம் எடுத்துருங்க” என்று வெங்கடேஷ் கறாராகச் சொல்ல என்ன செய்வதென்று தெரியாமல் “சரிப்பா” என்று சங்கடத்தோடு சொல்கிறார் கருப்பு. 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - ‘லப்பர் பந்து’ காளி வெங்கட்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | பாரபட்சமற்ற ஆசிரியர்.. பாசமுள்ள அப்பா.. ‘பசங்க’ ஜெயப்பிரகாஷ்!

கருப்பைய்யாவிற்கு கிரிக்கெட்தான் எல்லாமே

தன் மகள் அகிலாவிற்கும் கிரிக்கெட் ஆர்வத்தை ஊட்டியிருக்கிறார் கருப்பு. இருவரும் ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருக்க, அங்கு அன்பு தற்செயலாக வருகிறான். “ண்ணோவ்.. என்னண்ணா.. இங்க?.. என்ன அகிலா.. அம்மா சாப்பாடு போர் அடிச்சிடுச்சா?” என்று அன்பு விசாரிக்க, “இல்லண்ணா.. அப்பா வேலைக்கு போகாம மேட்ச்சுக்கு போயிட்டாரு. வீட்ல ஒரே சண்டை” என்று மகள் சொல்ல

“அதை விடு அன்பு. வீட்டு வாசல்ல கங்குலி போட்டோ ஒண்ணு பெரிசா வரையணும். லார்ட்ஸ் கிரவுண்ட்ல சட்டையைக் கழட்டி சுத்தினார்ல.. அந்த கெத்தான போஸ்.. யாராவது பெயிண்ட்டர் இருந்தா சொல்லு” என்று கருப்பு வாயைத் திறந்தாலே கிரிக்கெட் வாசனை இல்லாமல் இல்லை. 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - ‘லப்பர் பந்து’ காளி வெங்கட்
காளி வெங்கட்லப்பர் பந்து திரைப்படம்

தன் பள்ளித் தோழி தென்றலைச் சந்திக்கச் செல்கிறார் கருப்பு. மருத்துவனை நடத்தி வரும் அவரிடம் டொனேஷன் வாங்குவதுதான் பிளான். “ஆஸ்பிட்டல் பேரை பெரிசா போட்டுடலாம்” என்று ஆசை காட்டும் சிரிப்புடன் கருப்பு சொல்ல “உனக்காக டொனேஷன் தரேன். ஆனா உனக்கு ஏன் கிரிக்கெட் இத்தனை பிடிச்சிருக்கு?” என்று பள்ளித் தோழி கரிசனத்தோடு கேட்க, “பிடிச்சிருக்கு. அதுதான் காரணம். வேறென்ன சொல்ல?” என்று வெற்றான முகபாவத்துடன் சொல்லுமிடத்தில் காளி வெங்கட்டின் வெள்ளந்தியான முகம் நம்மைக் கவர்கிறது. 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - ‘லப்பர் பந்து’ காளி வெங்கட்
லப்பர் பந்து Exclusive: “8 கோடி பேரோட கதையை உங்க படத்துல Use பண்ணிட்டீங்கனு SK சொன்னாரு”- இயக்குநர்

‘வெங்கடேஷ் உன் தம்பி. அன்பு உன் தம்பி ‘மாதிரி’

ஜெராக்ஸ் எடுப்பதற்காக அன்புவின் கடைக்குச் செல்கிறார் கருப்பு. அங்கு அன்புவின் நண்பனான காத்தாடிக்கும் கருப்புவிற்கும்  இடையே நடக்கும் உரையாடல், இந்தத் திரைப்படத்தின் முக்கியமானதொரு பகுதி. வெங்கடேஷ் தலையீடு காரணமாக கிரிக்கெட் அணியில் அன்புவை சேர்க்க முடியாமல் இருப்பதையொட்டி காத்தாடி எகத்தாளம் பேசுகிறான்.

“பேனர்ல இருந்து போட்டோவை எடுத்துட்டு பேச வந்துட்ட?” என்று காத்தாடி சொல்ல “என்னடா.. இப்படியெல்லாம் சொல்ற.. இப்பக்கூட அவனை டீமிற்கு வரச் சொல்லி கூப்பிட்டுட்டுத்தான் இருக்கேன். அவன்தான் வெங்கடேஷ் இருக்கறதால வரமாட்டேங்கிறான். அவன் பேர்ல ஜெர்சி கூட இருக்கு. அன்பு எனக்கு தம்பி மாதிரி” என்று கருப்பு சொல்ல, 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - ‘லப்பர் பந்து’ காளி வெங்கட்
காளி வெங்கட்லப்பர் பந்து திரைப்படம்

“ஏன். நீதான் ஸ்ட்ராங்கா சொல்லணும். சொல்ல மாட்டே.. ஏன் தெரியுமா? வெங்கடேஷ் உன் தம்பி. அன்பு உன் தம்பி மாதிரி. நீயெல்லாம் எப்படி தெரியுமாண்ணே.. இப்படி நெறய பேரு இருக்காங்க.. எனக்கு நிறைய எஸ்.சி. பிரெண்ட்ஸ் இருக்காங்க. ஆனா அவங்களை நான் எஸ்.சி.யா பார்க்கறதில்லைன்னு.. நீ.. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன். வெங்கடேஷ் மாதிரி ஆளுங்களைக் கூட நம்பிடலாம். ஆனா உன்னை மாதிரி ஆளுங்களை நம்ப முடியாது. வெஷம்” என்று காத்தாடி கடுமையான சொற்களால் கருப்புவைத் தாக்க உறைந்து போய் நிற்கிறார் கருப்பு. 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - ‘லப்பர் பந்து’ காளி வெங்கட்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்: ‘டௌரி கல்யாணம்’ டெல்லி கணேஷ் | சின்ன ரோலிலும் அத்தனை உருக்கம்!

நானெல்லாம் சாதி பார்க்கறதில்லங்க’ என்று வெளியில் சொல்லிக் கொண்டே, உள்ளுக்குள் சாதிய வன்மம் நிறைந்திருக்கும் போலி முற்போக்காளர்களை இந்தக் காட்சி முகத்தில் அறைந்தாற் போல் சுட்டிக் காட்டியிருக்கிறது. ஆனால் இதற்கு இன்னொரு கோணமும் இருக்கிறது. ஆதிக்க சாதியில் பிறந்திருந்தாலும் கல்வி, சிந்தனை, அனுபவம் போன்றவற்றால் கொஞ்சம் கொஞ்சமாக சாதியின் மீதான பிடிப்பை இழந்து வரும் நபர்களை ஒரேயடியாக பின்னுக்குத் தள்ளும் மூர்க்கத்தையும் இந்தக் காட்சி சேர்த்து செய்கிறதோ என்று தோன்றுகிறது. வெங்கடேஷ் போன்ற சாதி வெறியர்களைக் கூட நல்லவர்களாக்கி, சாதியை விட்டு விலக நினைக்கும் கருப்புவை குற்றவாளியாக்கும் ஆபத்தும் இந்தக் காட்சியில் கலந்திருக்கிறது. 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - ‘லப்பர் பந்து’ காளி வெங்கட்
காளி வெங்கட்லப்பர் பந்து திரைப்படம்

எழுதப்படும் புதிய அத்தியாயம்

காத்தாடியின் கூர்மையான விமர்சனம் கருப்புவின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. “நீ நாளைக்கு கிரவுண்டிற்கு வா” என்று அன்புவிடம் சொல்லும் கருப்பு, மறுநாள் அன்புவை ஜாலி பிரெண்ட்ஸ் டீமில் சேர்க்க முனைகிறார். வழக்கம் போல் வெங்கடேஷ் அதை எதிர்க்கிறான். இந்த முறை அவன் பாவனையாக வேண்டுகோள் வைப்பதில்லை.

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - ‘லப்பர் பந்து’ காளி வெங்கட்
‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம்..’ லப்பர் பந்து படத்தில் விஜயகாந்த் பாடல் வைத்தது ஏன்? இயக்குநர் பதில்!

வெளிப்படையான எதிர்ப்பைக் காட்டுகிறான். “நீயே ஒரு எக்ஸ்ட்ரா. டாஸ் போடறதுக்குத்தான் உன்னை கேப்டனா வெச்சிருக்கோம்.  நீ சொல்லி நான் அவனைச் சேர்க்கணுமா. வேணும்னா நீ கிளம்பு” என்கிற மாதிரி கருப்புவையே அணியில் இருந்து துரத்துகிறான் வெங்கடேஷ். தான் உருவாக்கிய, தன்னுடைய தொடர்ந்த உழைப்பின் மூலம் வளர்த்து வரும் அணியில் இருந்தே துரத்தப்படும் அவல நிலைக்கு கருப்பு ஆளாகிறார். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - ‘லப்பர் பந்து’ காளி வெங்கட்
காளி வெங்கட்லப்பர் பந்து திரைப்படம்

“நாங்களே ஒரு புது டீம் ஆரம்பிக்கிறோம். கருப்பண்ணன்தான் அதுக்கு கேப்டன். மேட்ச் ஆடறதுக்கு உனக்கு துணிச்சல் இருக்கா?” என்று கேட்கிறான் அன்பு. அங்கொரு புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. 

கிரிக்கெட் என்னும் விளையாட்டு மீதுள்ள தீராத காதல் காரணமாக தன் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணம் செய்யும் ஒரு விளையாட்டு ரசிகன் பாத்திரத்தில் காளி வெங்கட்டின் நடிப்பு மிக இயல்பாகவும் நுட்பமாகவும் அமைந்துள்ளது.

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - ‘லப்பர் பந்து’ காளி வெங்கட்
மறக்க முடியாத துணைக்கதாபாத்திரங்கள்: உழைக்கும் பெண்களின் பிரதிநிதி; அசோதையாக ‘லப்பர் பந்து’ ஸ்வாசிகா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com