`மெண்டல் மனதில்' நடிப்பதற்கு இடையே இருந்த கேப்பில்தான் இந்த படத்தில் நடித்தேன். ஆனால், அவர்கள் அந்தப் படத்திற்கு முன் எடுத்து ரிலீசுக்கே வந்துவிட்டார்கள்.
நெல்சன் அண்ணா எப்போதும் ஒன்று சொல்வார். அவர் எப்போதுமே காஸ்டிங்கில் நிறைய மெனக்கெடுவார். ஒரு இயக்குநர் யோசிப்பதை சரியான நடிகர்கள் அமைந்தால் மட்டுமே வெளியே கொண்டு வர முடியும்.
என் நண்பருடன் நான் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். அவர் ஓட்டினார், நான் பின்னால் அமர்ந்திருந்தேன். திடீரென இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் பற்றி சிந்திக்கையில் யோசனை வந்தது.