இதற்கு முன் காமெடி என்றால் `ரகு தாத்தா' நடித்தேன். ஆனால் அது வேறுமாதிரி காமெடி. தெலுங்கில் `உப்புக்கப்புரம்பு' என்ற படம் நடித்தேன் அது சமூக பகடி திரைப்படம். எனக்கு எப்போதும் காமெடி படங்கள் பிடிக்கும்.
இந்தப் படத்தின் ஷோ ஸ்டீலர் ராதிகாதான். இத்தனை வருட சினிமா அனுபவமும், அவரது திறமையும் போட்டி போட்டு திரையில் மின்னுகிறது. இந்தப் படத்தில் அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் காமெடி சரவெடி தான்.