SVC 59
SVC 59Vijay Deverakonda, Keerthy Suresh

விஜய் தேவரகொண்டா - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம்! | Vijay Deverakonda | Keerthy Suresh

`ராஜாவாரு ராணிகாரு', `அஷோக வனமுலோ அர்ஜுன கல்யாணம்' படங்களை இயக்கிய ரவி கிரண் கோலா இப்படத்தை இயக்குகிறார்.
Published on

விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் `கிங்டம்'. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கடுத்ததாக விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

விஜய் தேவரகொண்டா - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் கீழ் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகிறது. இது இந்த தயாரிப்பு நிறுவனத்தின் 59வது படமாக உருவாகிறது. கிரண் அப்பாவரம் நடித்த `ராஜாவாரு ராணிகாரு', விஷவாக் சென் நடித்த `அஷோக வனமுலோ அர்ஜுன கல்யாணம்' படங்களை இயக்கிய ரவி கிரண் கோலா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜையில் அல்லு அரவிந்த் கிளாப் போர்டு அடிக்க, தயாரிப்பாளர் நிரஞ்சன் ரெட்டி கேமராவை ரோல் செய்ய, இயக்குநர் ஹனு ராகவபுடி முதல் ஷாட்டை இயக்கினார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கும் என்று தயாரிப்பாளர்கள் இந்த நிகழ்வில் உறுதிப்படுத்தினர். 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு `ரவுடி ஜனார்தன்' என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com