சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் புதிய படம்! | Suresh Krissna | Anantha
தமிழில் பாட்ஷா, அண்ணாமலை என மாஸ் படங்களை கொடுத்தவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. இவர் தற்போது 'அனந்தா' என்ற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்திருக்கிறார். இது ஆன்மீக குரு சத்ய சாய் பாபாவை பற்றிய பட என சொல்லப்படுகிறது.
2012ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய `Katari Veera Surasundarangi' படத்திற்கு பின் பல ஆண்டுகள் இடைவெளிக்கு  பிறகு, `சாருகேசி' என்ற படத்தை உருவாக்கினார். இப்போது அடுத்தாக 'அனந்தா' படத்தை இயக்க உள்ளார். அனந்தா பாத்திரத்தில் ஜகபதி பாபு நடிக்கிறார் எனவும் சுஹாசினி மணிரத்னம் மற்றும் ஒய்.ஜி.மதுவந்தி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது. இப்படம் தமிழ் தெலுங்கில் உருவாக்க உள்ளது.
இப்படத்திற்கான தமிழ் வசனங்களை பா.விஜய் எழுத, தெலுங்கு வசனங்களை டாக்டர் பி.ராஜேந்திர குமார் எழுதுகிறார். தேவா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை தமிழில் பா.விஜய் மற்றும் தெலுங்கில் ராமஜோகய்ய சாஸ்திரியும் எழுதுகின்றனர்.

