பெட்ரோல் பங்க்குகளின் டீலர் கமிஷன் உயர்த்தப்பட்டிருப்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் கச்சா எண்ணெய் விலை தற்போது 70 டாலருக்கும் கீழே சரிந்துள்ளது. இதையடுத்து, கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.