பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை ரூ.55 உயர்வு
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை ரூ.55 உயர்வுweb

ஈரான்-அமெரிக்கா போர் எதிரொலி | பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை ரூ.55 உயர்வு.. மக்கள் அவதி!

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடந்துவரும் போர் எதிரொலி காரணமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது பாகிஸ்தான் அரசு. ஏற்கனவே பொருளாதார நெருக்கடி அதிகாமக இருந்துவரும் சூழலிலும் இந்த விலையேற்றத்தை அறிவித்துள்ளது பாகிஸ்தான்.
Published on
Summary

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம் காரணமாக எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 55 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன.

உலகின் மிகப்பெரிய LNG ஏற்றுமதியாளர்களில் ஒன்றான கத்தார் எனர்ஜி ஆலைகள் மீது நடந்த ராணுவ தாக்குதல்களை தொடர்ந்து கத்தார் எனர்ஜி உற்பத்தியை நிறுத்தியுள்ளது . இதனால் இயற்கை எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்புweb

மேலும் உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் நிர்வகிக்கும் ஹார்முஸ் நீர்சந்தியை ஈரான் மூடியுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 6 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், கத்தார் போன்ற நாடுகளின் இயற்கை எரிவாயு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எரிசக்தி கட்டணங்கள் 40 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

இந்தசூழலில் தான் பாகிஸ்தான் அரசு பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை ரூ.55 உயர்வு
ஈரானில் இணைய முடக்கம்.. தகவல் அறியும் உரிமை பறிப்பு!

பாகிஸ்தானில் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதைக் குறிப்பிட்டு, பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 55 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தைக் காரணம் காட்டி பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

இந்தவிலையேற்றம் விரைவில் இந்தியாவிலும் ஏற்படும் என வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை ரூ.55 உயர்வு
சிலிண்டர் விலை உயர்வுக்கு என்ன காரணம்..? மீண்டும் குறைய வாய்ப்பு உள்ளதா..? விவரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com