இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்துள்ளார் ட்ரம்ப்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பெண் ஐ.ஏ.எஸ். உட்பட எட்டு அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லோக்ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
கர்நாடகாவில் இருந்து குட்காவை கடத்தி வந்து காரில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 211 கிலோ குட்கா மற்றும் மூன்று கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கரூரில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் கடத்தப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.