புல்லுமேடு கானகப் பாதையில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கான அனுமதி நேரம், காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை என ஒருமணி நேரத்தை குறைத்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பந்தள மகாராஜா வழங்கிய திருவாபரணங்கள் அணிந்து அரச கோலத்தில் ஜொலிக்கும் ஐயப்பனின் காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் அரச கோல ஐயப்பனை காண பக்தர்கள் வெள்ளம் அலைமோதி வருகிறது.