\
Trump & Macron
Trump & Macron web

உலகப்போர்கள் முதல் US - ஈரான் ஒப்பந்தம் வரை.. வெர்சாய்ஸ் அரண்மனையில் நடைபெறுவது ஏன்?

இதன்மூலம், வெர்சாய்ஸ் அரண்மனையின் நீண்டகால உலகளாவிய ராஜதந்திர பாரம்பரியத்தை மீண்டும் உலகிற்கு நினைவூட்டியுள்ளது.
Published on
Summary

பிரான்சின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெர்சாய்ஸ் அரண்மனையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் வெர்சாய்ஸின் நீண்டகால ராஜதந்திர பாரம்பரியத்தை மீண்டும் உலகுக்கு நினைவூட்டுகிறது.

செய்தியாளர்; M. மீரா

வரலாற்றின் மிக முக்கியமான பல ஒப்பந்தங்கள் மற்றும் தூதரக உடன்படிக்கைகளுடன் தொடர்புடைய இடமான பிரான்ஸின் வெர்சாய்ஸ் அரண்மனையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் இருதரப்பினரும் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டுள்ளனர்.

வெர்சாய்ஸில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ஏற்பாடு செய்திருந்த விருந்தின்போது ட்ரம்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், வாஷிங்டன் மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதையும், விரிவான அமைதித் தீர்வுக்கான அடித்தளத்தை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

G7 summit
G7 summitweb

இந்த நிகழ்வு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. இதன்மூலம், வெர்சாய்ஸ் அரண்மனையின் நீண்டகால உலகளாவிய ராஜதந்திர பாரம்பரியத்தை மீண்டும் உலகிற்கு நினைவூட்டியுள்ளது.

Trump & Macron
அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் கையெழுத்து.. 14 முக்கிய அம்சங்கள் என்ன?

வெர்சாய்ஸ் அரண்மனை என்பது வெறும் பிரெஞ்சு அரச குடும்பத்தின் வரலாற்றுச் சின்னம் மட்டுமல்ல. அது பல நூற்றாண்டுகளாக உலக நாடுகளின் போர்களை முடிவுக்குக் கொண்டு வரவும், புதிய பேரரசுகளை உருவாக்கவும், பயன்படுத்தப்பட்ட ஒரு முதன்மையான ராஜதந்திர தளமாகும்.

வெர்சாய்ஸில் நடைபெற்ற முக்கியமான ஒப்பந்தங்கள்

1957இல் கையெழுத்தான வெர்சாய் உடன்படிக்கை ஏழாண்டு நடைபெற்று வந்த பிரான்சுக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையிலான போர் நிறுத்தம் ஆகும்.

Palace of Versailles
Palace of Versaillesweb

அதனையடுத்து அமெரிக்கப் புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த தீர்வாக, 1783-ஆம் ஆண்டின் வெர்சாய் உடன்படிக்கைகள் கிரேட் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தாயின. வெர்சாயிஸில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள், அமெரிக்க நோக்கத்திற்கு ஆதரவளித்ததற்கு ஈடாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு பிரதேசங்களையும் சலுகைகளையும் மீட்டளித்தது. இந்த உடன்படிக்கைகள் ஐரோப்பாவின் முக்கிய காலனித்துவப் பேரரசுகளிடையே அதிகாரச் சமநிலையை மறுவரையறை செய்ய உதவியது.

Trump & Macron
ஈரான் போர் ஒப்பந்தத்தின் முழு விவரம்.. அமெரிக்க துணை அதிபர் முக்கிய தகவல்!

1871-இல் வெர்சாயிஸில் பிரான்சுக்கும் புருஷியாவுக்கும் இடையே ஒரு பூர்வாங்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்பு முதலாம் உலகப் போருக்குப் பிறகு, 1919 ஜூன் 28 அன்று ஜெர்மனிக்கும் நேச நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட வெர்சாய் உடன்படிக்கை மிகவும் பிரபல ஒப்பந்தமாகும்.

G7 summit
G7 summit web

இதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்க - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, வெர்சாய்ஸின் நீண்டகால இராஜதந்திர வரலாற்றில் மற்றொரு அத்தியாயத்தைச் சேர்க்கிறது. வெர்சாய்ஸை இடமாகத் தேர்ந்தெடுப்பதன் மூலம், இருதரப்பினரும் தங்கள் உடன்படிக்கையை, நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மறுவரையறை செய்யவும் சர்வதேச ஒழுங்கை வடிவமைக்கவும் முடியும். வெர்சாய்ஸ் அரண்மனை சமீபத்திய காலங்களில், ஜி7 மாநாடுகள், நேட்டோ (NATO) ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் உயர்மட்ட இருதரப்பு அரசமுறைச் சந்திப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Trump & Macron
முடிவுக்கு வந்தது ஈரான்-அமெரிக்கா போர்.. இரு நாடுகளும் அறிவிப்பு.. நிம்மதி பெருமூச்சு விடும் உலகம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com