\
What's Inside the US-Iran Deal? The 14 Key Points Explained
Donald Trump & Masoud Pezeshkianweb

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் கையெழுத்து.. 14 முக்கிய அம்சங்கள் என்ன?

புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) என்று அழைக்கப்படும் இந்த 14 அம்ச ஒப்பந்தம் செயல்பாட்டின் அடிப்படையில் (performance-based) அமைந்தது என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Published on

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிரான்ஸின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் (Evian-les-Bains) நகரில் நடைபெற்ற ஜி7 (G7) உச்சிமாநாட்டில் கலந்துகொண்டிருந்தபோது அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஸெஸ்கியானும் மின்னணு முறையில் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளதை இரு நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

Trump
Trump web

புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) என்று அழைக்கப்படும் இந்த 14 அம்ச ஒப்பந்தம் செயல்பாட்டின் அடிப்படையில் (performance-based) அமைந்தது என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது, ஈரான் தனது கடமைகளை நிறைவேற்றினால் மட்டுமே அதனால் பலன் பெற முடியும்.

14 அம்ச ஒப்பந்தத்தின் முழுவிவரம் இதோ -

1. அமெரிக்கா, ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகள் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவது.

இஸ்ரேல் - லெபனான் -இனிவரும் காலங்களில் இரு தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கவோ அல்லது ஒருவரையொருவர் அச்சுறுத்தவோ கூடாது என்றும், லெபனானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.

Espionage Claims Rock US Israel Relations
Netanyahu & Trumpweb

2. இருநாடுகளும் ஒருவரின் இறையாண்மையையும் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டையும் மதிக்க வேண்டும்.

3. அமெரிக்காவும் ஈரானும் அதிகபட்சம் 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தத்தை எட்ட ஒப்புக்கொண்டுள்ளன. இருப்பினும், பரஸ்பர சம்மதத்துடன் இந்தக் காலக்கெடுவை நீட்டிக்க முடியும்.

4.ஈரான் துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகை 30 நாட்களுக்குள் முழுமையாக முடிவுக்கு வரும்.

5. ஹார்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்கள் எவ்விதக் கட்டணமுமின்றிப் பாதுகாப்பாகச் செல்வதை அனுமதிக்க, ஈரான் தனது முழு முயற்சியையும் பயன்படுத்தி ஏற்பாடுகளைச் செய்யும்.

IRGC naval patrol at hormuz
IRGC naval patrol at hormuz web

6. ஈரானில் புனரமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக குறைந்தபட்சம் $300bn (£224bn) மதிப்புள்ள உறுதியான, பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்தை அமெரிக்காவும் பிராந்திய நாடுகளும் உருவாக்கிக் கொடுக்கும்.

7. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைத் தீர்மானங்களில் உள்ளவை மற்றும் அமெரிக்காவால் தன்னிச்சையாகச் செயல்படுத்தப்பட்டவை உட்பட, ஈரானுக்கு எதிரான அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவரும்.

What's Inside the US-Iran Deal? The 14 Key Points Explained
1 இந்தியர் உட்பட 25 மாலுமிகள் கைது | ரஷ்யக் கப்பலை கைப்பற்றிய பிரிட்டிஷ் ராணுவம்!

8. ஈரான் அணு ஆயுதத்தைக் கொள்முதல் செய்யவோ அல்லது வாங்கவோ கூடாது என ஒப்புக்கொண்டுள்ளது, மேலும் தெஹ்ரானிடம் ஏற்கனவே உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கையாள்வதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

9. செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பான விவகாரத்திற்குத் தீர்வு காணும் வரையிலான இடைப்பட்ட காலத்தில்,தற்போதைய நிலையையே (status quo) தொடர அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளன.

Natanz Nuclear facility , iran
Natanz Nuclear facility , iran web

10. அணு திட்டங்கள் குறித்து சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) கண்காணிப்பை ஏற்கும்.

11. செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் அணு பொருட்களின் எதிர்கால நிலை குறித்து தனி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

12. முடக்கப்பட்டுள்ள அல்லது கட்டுப்பாட்டில் உள்ள நிதியை முழுமையாக விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொள்கிறது என்றும், இதற்கான நடைமுறைகள் பேச்சுவார்த்தைகளின்போது தீர்மானிக்கப்படும்

13. ஒப்பந்த அமலாக்கத்தை கண்காணிக்க கூட்டு நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும்.

14. இறுதி ஒப்பந்தம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் மூலம் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்படும்.

What's Inside the US-Iran Deal? The 14 Key Points Explained
பின்வாங்கும் US; ஹோர்முஸ் திறப்பு.. கையெழுத்தானது ஒப்பந்தம்.. பாக்., பிரதமர் அறிவிப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com