உலகின் மிகச்சிறிய பாம்பு.. 20 ஆண்டுகளுக்கு பின்பு 'பார்படோஸ்’ த்ரெட் கண்டுபிடிக்கப்பட்டது..!
உலகின் மிகச் சிறிய பாம்பு வகையான பார்படோஸ் த்ரெட் பாம்புகள் அழிந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில், கானர் பிளேட்ஸ் கிழக்கு கரீபியன் தீவில் உள்ள ஒரு சிறிய காட்டில் ஒரு பாறையின் கீழ் இருந்ததை கண்டறிந்தனர். இந்த பாம்பை ஒரு நாணயத்தில் வசதியாக பொருந்தலாம். அந்த அளவிற்கு சிறியதாக இருக்கும். வெறும் கண்ணால் பார்த்தால் மிக மிக சிறியதாக தெரியும்..
இந்த அரிய வகை பாம்பை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் தேடிக் கொண்டிருந்தனர். 2000-களின் தொடக்கத்திலிருந்து இந்த பாம்பு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழகத்தில் பல மணிநேரங்களுக்குப் பிறகு, ஒரு நுண்ணோக்கிக்கு முன்னால் வைத்து பார்படோஸில் உள்ள சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் திட்ட அதிகாரி பிளேட்ஸ் இந்த பாம்பை பார்த்தார்.
அப்போது இந்த பாம்பை பற்றி பேசியவர், இது அடையாளம் காண்பது சாத்தியமற்றதாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக, உலகின் மிகச்சிறியது என அறியப்பட்ட இந்த பாம்பை யாரும் பார்க்கவே இல்லை. அதன் உடல் வழியாக வெளிர் மஞ்சள் டார்சல் கோடுகள் இருந்தன. அதன் கண்கள் அதன் தலையின் பக்கத்தில் அமைந்திருந்தன என்றார் பிளேட்ஸ்.
மேலும் “பார்படோஸ் த்ரெட் ஒரு குருட்டு பாம்பு போல தோற்றமளிக்கின்றன என்பதை அறிந்து, மலர் பானை பாம்பு என்று அழைக்கப்படுகிறது. இது சற்று நீளமானதாக இருக்குக்கும்” என்றார்.
பார்படோஸ் த்ரெட் 1889ஆம் ஆண்டு முதல் ஒரு சில முறை மட்டுமே பார்க்கப்பட்டுள்ளன. இது 4,800 தாவர, விலங்கு மற்றும் பூஞ்சை இனங்களின் பட்டியலில் இருந்தது. இது உலகளவில் ”அறிவியலுக்கு இழந்த” இனங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டிருந்தது.
இந்த பாம்பு தரையில் உள்ள பூச்சிகள், புளுக்கள், கரையான்கள் மற்றும் எறும்புகளை சாப்பிடடுகிறது. இதன் பெண் பாம்புகள் ஒரு முறை ஒரு முட்டை மட்டுமே இடுகின்றன. இது ஊர்வன உலகில் அரிதானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது முழுமையாக வளர்ந்த பிறகு நான்கு அங்குலங்கள் நீளமாக் இருக்கும் (10 சென்டிமீட்டர்) என அளவிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த வகை பாம்புகள் இருக்கும் இடமே தெரியாமல் மிகவும் ரகசியமாக செடிகளுக்கிடையே சிறிய புல்களுகிடையில் இருக்கும் என்று பிளேட்ஸ் கூறினார். பல மணி நேரம் தேடி பார்த்தாலும் கண்ணில் படாது . இந்த பாம்பினால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படாது என்றார்.
உலகின் மிக சிறிய பாம்பாக பார்படோஸ் த்ரெட் இருக்கையில், மிகப்பெரிய பாம்பு இனமாக பச்சை அனகோண்டாக்கள் கருதப்படுகின்றன. இவை அதிகபட்சமாக 30 அடி நீளம் வரை வளரக்கூடியவை. இந்த பாம்பு அதிகபட்சமாக 250 கிலோ எடை வரை இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.