இந்தியாவில் வாழும் டாப் 10 கொடிய விஷமுள்ள பாம்புகளும், அதன் வசிப்பிடமும்..!

இந்தியாவில் உள்ள 10 கொடிய விஷமுள்ள பாம்புகள்- கிங் கோப்ரா, இந்தியன் கோப்ரா, ரஸ்ஸல்ஸ் வைப்பர், சா-ஸ்கேல்ட் வைப்பர், பேண்டட் க்ரெய்ட்,இந்திய க்ரெய்ட், ஹம்ப்-நோஸ்ட்டு பிட் வைப்பர், மலபார் பிட் வைப்பர், அந்தமான் பிட் வைப்பர், மூங்கில் பாம்பு ஆகிவையாகும்.
poisonous Snake
poisonous Snake FB
Published on
poisonous Snake
poisonous Snake

பாம்பு என்றாலே அஞ்சாதவர்கள் யாரும் இல்லை. பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற பழங்காலத்து பழமொழியை நம் முன்னோர்கள் அடிக்கடி சொல்லி கேட்டிருப்போம்.. அந்த அளவிற்கு மனித குலத்திற்கு பாம்பு என்றால் பயம். இதற்கு காரணம் அதன் தலௌ பகுதியில் உள்ள நஞ்சுதான். ஆம் பாம்பின் விஷம் உயிரையே எடுக்கும் அளவிறகு கொடியது.. அப்படி இந்தியாவில் பல வகையான பாம்பு இனங்கள் உள்ளது. அவற்றில் பல அதிகமான விஷம் கொண்டதாக இருக்கும்.. இந்த பாம்புகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருக்கின்றன. சில அடர்ந்த காடுகளிலும் சில பாலை வனங்களிலும் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள மிகவும் விஷமுள்ள 10 பாம்புகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளாலாம் வாங்க..

1. கிங் கோப்ரா (King Cobra)

King Cobra
King CobraFB

பதினெட்டு அடி நீளம் கொண்ட ராஜ நாகம் உலகின் மிக நீளமான விஷ பாம்பு ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலைகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் அந்தமான் தீவுகளில் இந்த பாம்புகள் காணப்படும். இந்தப் பாம்பு, அதன் சக்திவாய்ந்த நியூரோடாக்ஸிக் விஷத்திற்கு பெயர் பெற்றது. ஒரு முறை கடித்தால் உயிரையே கொல்லும் அளவுக்கு விஷம் இதில் உள்ளது.

2. இந்தியன் கோப்ரா (Indian Cobra)

Indian cobra
Indian cobraFB

இந்தியாவில் மிகவும் விஷமான பாம்புகளில் ஒன்று. இந்திய நாகப்பாம்பு கண்ணாடி நாகம் என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்தியாவின் மிகவும் பிரபலமான பாம்புகளில் ஒன்றாகும். இது காடுகள், விவசாய நிலங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் உள்ளிட்ட பல்வேறு வாழ்விடங்களில் காணப்படுகிறது. நாகப்பாம்பின் விஷம் இயற்கையில் நியூரோடாக்ஸிக் ஆகும், மேலும் நரம்பு மண்டலத்தை சேதப்படுத்துகிறது மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.

3. ரஸ்ஸல்ஸ் வைப்பர் (Russell's Viper)

Russell's Viper
Russell's Viper

ரஸ்ஸல் விரியன் இந்தியாவில் மிகவும் ஆபத்தான பாம்புகளில் ஒன்றாகும், ஏனெனில் அதில் சக்திவாய்ந்த விஷம் உள்ளது. இது பொதுவாக திறந்தவெளி, புல்வெளிகள் மற்றும் விவசாய நிலங்களில் காணப்படுகிறது. விரியனின் விஷம் இரத்த நச்சுத்தன்மை கொண்டது. இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலான பாம்புக்கடி இறப்புகளுக்கு ரஸ்ஸல் விரியன் காரணமாகும்.

4. பேண்டட் க்ரெய்ட் (Banded Krait)

Banded Krait
Banded Krait

பேண்டட் கிரெய்ட் பாம்புகள் என்பது ஒரு வகையான நச்சுப் பாம்பு. இது பொதுவாக ஆசிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் உடலில் கருப்பு மற்றும் மஞ்சள் நிற பட்டைகள் இருப்பதால், இதை அடையாளம் காணலாம். இது இரவு நேரங்களில் வேட்டையாடும் தன்மை கொண்டது. 

5. சா-ஸ்கேல்ட் வைப்பர் (Saw-scaled Viper)

Saw-scaled Viper
Saw-scaled Viper

பெரும்பாலும் வறண்ட பகுதிகளில் காணப்படும், இது மிகவும் ஆக்ரோஷமானது. இது ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட இந்தியாவின் வறண்ட பகுதிகளில் காணப்படும் ஒரு சிறிய ஆனால் அதிக விஷமுள்ள பாம்பு ஆகும். அதன் செதில்களை ஒன்றாக தேய்ப்பதன் மூலம் ஏற்படும் தனித்துவமான ஒலிக்கும் பெயர் பெற்றது. ரம்பம்-செதில் விரியனின் விஷம் இரத்த நச்சுத்தன்மை கொண்டது.

6. இந்தியன் க்ரெய்ட் (Indian Krait)

Indian krait
Indian kraitFB

இந்த பாம்பு காமன் கிரெய்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்திய துணைக்கண்டம் முழுவதும் காணப்படும் ஒரு மிகவும் விஷமுள்ள பாம்பு ஆகும். இது பொதுவாக கருப்பு அல்லது நீல நிறத்தில் வெள்ளை பட்டைகளுடன் இருக்கும். கிரெய்ட்கள் இரவு நேர விலங்குகள் மற்றும் பெரும்பாலும் உணவு தேடி மனிதன் இருக்கும் இடங்களில் நுழையும்..

7. ஹம்ப்-நோஸ்ட்டு பிட் வைப்பர் (Hump-nosed Pit Viper)

Hump-nosed Pit Viper
Hump-nosed Pit ViperFB

ஹம்ப்-நோஸ்டு பிட் வைப்பர் என்பது ஒரு சிறிய, நச்சுத்தன்மை கொண்ட பாம்பு. இது பெரும்பாலும் தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படுகிறது. இதை கூம்பு மூக்கு விரியன் என்றும் அழைக்கப்படுகிறது. இது பொதுவாக சிறிய விலங்குகளை இரையாக உட்கொள்கிறது.

8.மலபார் பிட் வைப்பர் (Malabar Pit Viper)

Malabar Pit Viper
Malabar Pit Viper

இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் ஒரு விஷப் பாம்பு ஆகும். இத பச்சை நிறத்தில் காணப்படும். மலபார் குழி வைப்பரின் விஷம் முதன்மையாக இரத்த நச்சுத்தன்மை கொண்டது. வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த பாம்பு மரங்களிலும் புதர்களிலும் காணப்படுகிறது மேலும் மழைக்காலங்களில் அதிகமாக இருக்கும்.

9. அந்தமான் பிட் வைப்பர் (Andaman Pit Viper)

Andaman Pit Viper
Andaman Pit Viper

அந்தமான் நாகப்பாம்புகள் அந்தமான் தீவுகளில் ,மட்டுமே காணப்படும். இது இந்திய நாகப்பாம்பைப் போலவே தோற்றமளிக்கும். அந்தமான் நாகப்பாம்பின் விஷம் நரம்பு நச்சுத்தன்மை கொண்டது. இது பக்கவாதம் மற்றும் சுவாசக் கோளாறை ஏற்படுத்துகிறது.

10. மூங்கில் பாம்பு (Bamboo Pit Viper)

Bamboo Pit Viper
Bamboo Pit Viper

இந்த வகை பாம்புகள் தென்னிந்திய காடுகளில் காணப்படுகிறது. இதன் விஷம் இரத்த நச்சுத்தன்மை கொண்டது, வலி, வீக்கம் மற்றும் திசு சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்த பாம்பு பெரும்பாலும் மூங்கில் தோப்புகள் மற்றும் அடர்த்தியான தாவரங்களில் காணப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com