வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஆப்கன் பெண்கள் நிலநடுக்கத்தில் உயிரிழந்த சோகம்... ஒரு நேரடி சாட்சியம்!

”பேரழிவுக்கு முன் அதுகுறித்தான எந்த விழிப்புணர்வையும் தாலிபன்கள் ஏற்படுத்தவில்லை. பல வீடுகள் அழிந்துவிட்டது. குளிர்ந்த கால நிலையில் மக்கள் கூடாரங்களில் வசிக்கின்றனர்” ஆஃப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட பெண்
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்pt web

அக்டோபர் 11 ஆம் தேதி ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்ட மிகக் கொடூரமான நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது.

சம்பவத்தின்படி அக்டோபர் 11 அன்று, ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் உள்ள ஹெராத் நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் 6.3 ரிக்டர் அளவில் பெரிய நிலநடுக்கம் தாக்கியது. இந்த ஆண்டின் மிகப்பெரிய நிலநடுக்கமாக இது பதிவாகியிருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை 2400ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையான காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தில் இறந்தவர்களில் 90%க்கும் மேற்பட்டோர் குழந்தைகளும் பெண்களும் என ஐநா தெரிவித்திருந்தது. sky செய்தி நிறுவனம் இது குறித்து கூறுகையில், “உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை, அது மீண்டு வருவதற்கான பாதை கடினமாக இருக்கும். இதில் தாலிபான் ஆட்சியில் பெண்கள் மீதான அடக்குமுறை, நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது” என தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்
மாடு முட்டி படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு... மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!

sky செய்தி நிறுவனம் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் செய்த நேர்காணலில் அப்பெண் கூறியதாவது, “சனிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்ட போது நானும் மற்ற பெண்களைப் போலவே சமையல் செய்து கொண்டிருந்தேன். அப்போது கட்டடம் குலுங்கத் தொடங்கியது. அந்த சூழலில் ஒவ்வொரு ஆப்கான் பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறும் போது அவளுக்கு தேவையான இரண்டு விஷயங்களைப் பற்றி நான் சிந்திக்கவில்லை (burqa and a mahram எனப்படும் துணை). எனது செல்பேசியுடன் நான் வீட்டை விட்டு ஓடினேன்.

தெருவில் மற்ற பெண்களும் ஹிஜாப் இல்லாமல் ஓடி வருவதைப் பார்த்தென். தாலிபான்களின் கூற்றுப்படி அது பாவம். இதற்காக பலபெண்கள் அடிவாங்கிய செய்திகளையும் கேள்விப்பட்டேன். ஜிந்தா ஜின் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு உதவுவதற்காக சென்றபோது அங்கு பல பெண்கள் பயத்தில் உயிரிழந்திருந்ததை அறிந்தேன். சில பெண்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த காரணத்தால் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருந்ததையும் கண்டேன்.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்
"எங்கே குண்டு போடப்போகிறார்கள்? என்ன நடக்கிறது?" - சிகப்பாக மாறிய வானம்! ரத்தக்காடாக மாறுகிறதா காஸா?

பேரழிவுக்கு முன் அதுகுறித்தான எந்த விழிப்புணர்வையும் தாலிபன்கள் ஏற்படுத்தவில்லை. பல வீடுகள் அழிந்துவிட்டது. குளிர்ந்த கால நிலையில் மக்கள் கூடாரங்களில் வசிக்கின்றனர். பெரும்பாலான குழந்தைகள் நோய்வாய்ப்பட்டுள்ளார்கள். எங்களுக்காக பேசுவதற்கு மக்கள் தேவை. ஐநா, மனித உரிமைகள் ஆணையம், பெண்களுக்கான உரிமை அமைப்புகள் போன்றவை ஆப்கானிஸ்தானில் நிலவும் பாலின சமத்துவமின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க குரல்கொடுக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

sky செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த செய்தியை இந்த இணைப்பில் படிக்கலாம்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com